TA/Prabhupada 0411 - "கட் கட் கட் கட் கட் கட் கட்" அழகான வண்டியை கட்டமைத்திருக்கின்றனர்



Departure Lecture -- Mexico City, February 18, 1975

நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு தந்தையை விட்டு வந்து விட்டோம், வீழ்ந்துவிட்ட இந்த பௌதிக உலகில் இருந்து துயரப்படுகின்றோம். (ஹ்ருதயானந்தாவால் ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்படுகிறது) ஒரு செல்வந்தரின் மகன் சுதந்திரம் வேண்டி வீட்டை விட்டு வெளியேறுவதை போன்றது இது உலகெங்கும் சுற்றி தேவையற்ற சிரமங்களை எல்லாம் மேற்கொள்வது போன்றது இது ஸ்பானிஷ் செல்வந்தரின் மகன் செய்வதற்கு ஒன்றுமில்லை அவன் தந்தையின் செல்வமே அவனுக்கு போதுமான சௌகரியமான வாழ்க்கையை தந்து விடுகிறது (ஸ்பானிஷ்). இருந்தாலும் நமக்கு இப்போது மேற்கத்திய நாடுகளில் இருப்பது போன்று செல்வச் செழிப்பு உள்ளவர்கள் பலரின் பிள்ளைகள் ஹிப்பிகளாக மாறி வீட்டை விட்டு வெளியேறி பல துன்பங்களையும் அடைகின்றனர் (ஸ்பானிஷ்). பௌதீக உலகில் இருக்கும் நம் நிலைமையும் நம் தேவைகளும் அதைப்போன்றது தான் (ஸ்பானிஷ்). நாம் விரும்பித்தான் இந்த பௌதிக உலகில் வந்து இருக்கின்றோம் புலன் நுகர்ச்சிக்காக (ஸ்பானிஷ்). இந்த புலன் கவர்ச்சியில் நாம் நமது முழுமுதற் தந்தையை அதாவது கடவுளை மறந்து விடுகின்றோம் (ஸ்பானிஷ்). பௌதீக இயற்கையின் வேலையே நமக்கு துயரம் மிகுந்த வாழ்க்கையைத் தருவது தான். (ஸ்பானிஷ்)

க்ருஷ்ண புலிய ஜீவ போக வாஞ்சா கரே
பாஷதே மாயா தாரே ஜாபடியா தரே
(வங்காள பாடல் வரி)

உயிர் வாழியானவன் கிருஷ்ணரை தவிர்த்து, கடவுளை தவிர்த்து வாழ்க்கையை அனுபவிக்க நினைத்தவுடன் உடனடியாக அவன் மாயையின் பிடியில் சிக்கிக் கொள்கிறான் (ஸ்பானிஷ்). இதுவே நம் நிலைமை. நாம் மாயையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் பகவத்கீதையில் கூறப்படுவது போல நாம் அதனின்றும் வெளியேறவும் செய்கின்றோம். (BG 7.14) மாம் ஏவ ய ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி: "என்னிடம் சரண் அடைந்தவன் மாயையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுகிறான் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது (ஸ்பானிஷ்). எனவே நாம் உலகெங்கிலும் இந்த கிருஷ்ண பக்தியை கடவுள் பக்தியை பிரச்சாரம் செய்கின்றோம் கிருஷ்ணரிடம் எப்படி சரணாகதி செய்வது என்பதை போதிக்கின்றோம் அதனால் அவர்கள் மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம் (ஸ்பானிஷ்). நமக்கு இதைத்தவிர வேறு ஆசையோ குறிக்கோளோ இல்லை (ஸ்பானிஷ்). நாங்கள் எளிமையாகச் சொல்கின்றோம், "இதோ இருக்கிறார் கடவுள், இவரிடம் சரணடையுங்கள்" என்று எப்போதும் அவரைப் பற்றியே சிந்தியுங்கள், மரியாதை செலுத்துங்கள், உங்கள் வாழ்வு சிறப்பாக அமையும் (ஸ்பானிஷ்). ஆனால் மக்கள் பொதுவாக பித்துப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் (ஸ்பானிஷ்). வெறும் புலன் நுகர்ச்சிக்காக மட்டும் அவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள் அவர்கள் நிலைமையை பார்க்கும் பொழுது பக்தர்களுக்கு வருத்தமாக இருக்கின்றது (ஸ்பானிஷ்) "இவர்கள் யார் இவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று பிரகலாத மகராஜ் கூறினார் ததோ விமுக-சேதஸ மாயா-ஸுகாய பரம் உத்வஹதோ விமூடான் இந்தக் கயவர்கள் விமூடன் ஒரு பகட்டான நாகரிகத்தை உருவாக்கி உள்ளனர், அது என்னது? உங்கள் நாடுகளில் இருக்குமே பெருக்குவதற்கு கூட ஒரு பகட்டான வண்டி, வேலை என்னவோ பெருக்குவது தான் ஆனால் அதற்காக அவர்கள் ஒரு பகட்டான வண்டியைத் தயார் செய்திருக்கின்றனர் கட் கட் கட் கட் கட் கட் கட் (ஸ்பானிஷ்) பெருக்குவதை கையாலேயே செய்து விடலாம், இங்கு பல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களோ தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாபெரும் வண்டி தேவைப்படுகிறது பெருக்குவதற்கு (ஸ்பானிஷ்). அது பெருத்த சத்தத்தை ஏற்படுத்துகிறது. அது அபாயகரமானது கூட, ஆனால் அவர்களின் எண்ணம் என்ன? இதுவே நாகரிகத்தின் முன்னேற்றம். (ஸ்பானிஷ்). இதனால்தான் பிரகலாதன் சொல்கிறான் மாயா சுகாய பெருக்குவதில் இருந்து விடுபட எண்ணுகிறார்கள் ஆனால் எப்படி முடியும் அவர்களுக்கு வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது ஆனால் அவர்களின் எண்ணம் என்ன இப்போது நமக்கு பெருக்கத் தேவையில்லை இது நமக்கு பெரிய விடுதலை (ஸ்பானிஷ்). அதுபோல்தான் சவரம் செய்வதற்கு சிறு எளிய கத்தி போதுமானது ஆனால் இப்போது அதற்கு பல விதமான இயந்திரங்கள் வந்துவிட்டன (ஸ்பானிஷ்). அந்த இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கு பல விதமான தொழிற்சாலைகள் (ஸ்பானிஷ்). இப்படியாக நாம் ஒவ்வொரு பொருளாக ஆராய்வோமானால் இத்தகைய நாகரீகத்தை அசுர நாகரிகம் என்றே சொல்வோம் (ஸ்பானிஷ்). உக்கிர கர்மா உக்ர கர்மா என்றால் முரட்டுத் தனமான செயல்கள் (ஸ்பானிஷ்).

பௌதிக சுகங்கள் ஏற்படுத்திக் கொள்வதில் தடை இல்லை ஆனால் அவை உண்மையில் சுகங்கள் துக்கங்கள் என்று அறிய வேண்டும் (ஸ்பானிஷ்). இந்த மனித வாழ்க்கையானது கிருஷ்ணபக்தி செய்வதற்காக நம் நேரத்தை சேமிப்பதற்காக வே ஏற்படுத்தப்பட்டது (ஸ்பானிஷ்). வீணாக்குவதற்காக அல்ல (ஸ்பானிஷ்). நமக்கு அடுத்த இறப்பு எப்போது வரும் என்று தெரியாது (ஸ்பானிஷ்). நம்முடைய மறு ஜென்மத்திற்காக நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ளத் தவறும் போது எந்த நிமிடமும் நாம் இறக்கலாம் அப்போது நமக்கு பௌதீக இயற்கையினால் எந்த உடல் தரப்படுகிறதோ அதையே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் (ஸ்பானிஷ்). எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் மிகவும் கவனத்துடன் வாருங்கள் கிருஷ்ணரின் கையில் இருந்து உங்களை மாயை பறித்து விடக்கூடாது (ஸ்பானிஷ்). நான்கு ஒழுங்குமுறைக் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நாம் நம்மை திடமாக வைத்துக் கொள்ளலாம் அதனுடன் குறைந்தது 16 மாலைகள் ஜெபம் செய்யலாம். அவ்வாறு செய்வதே நமக்கு பாதுகாப்பு (ஸ்பானிஷ்). எனவே வாழ்க்கையை முழுமையாக கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதனைத் தவறான முறையில் பயன்படுத்தி விடாதீர்கள் அதனை மிகவும் திடமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்வு சீராக அமையும் (ஸ்பானிஷ்). சுகமான வாழ்வை இந்த இயக்கம் தடுக்கவில்லை அதனை ஒழுங்குபடுத்தச் செய்கிறது (ஸ்பானிஷ்). ஒழுங்குமுறை கொள்கைகளை கடைபிடித்து 16 மாலைகள் ஜெபம் செய்வதே நமக்கு பாதுகாப்பானது (ஸ்பானிஷ்). இந்த வலியுறுத்தலை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன் இதுவே என்னுடைய ஆசை.

மிக்க நன்றி.

ஸ்பானிஷ் பக்தர்கள்: ஜெய் ஜெய்