TA/Prabhupada 0412 - இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பரவவேண்டும் என்றே கிருஷ்ணர் விரும்புகிறார்
Conversation with Devotees -- April 12, 1975, Hyderabad
பிரபுபாதர்: அனாஷ்ரித: கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய:, ஸ ஸந்ந்யாஸீ (பகவத் கீதை 6.1). அனாஷ்ரித: கர்ம... புலன் நுகர்ச்சிக்கு ஏதோ ஒரு நல்ல பலன் இருக்க வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர் அதுவே ஆஷ்ரித: கர்ம-பலம். அவன் நல்ல பயனை வேண்டி சரண் புகுந்து இருக்கிறான் ஆனால் எவன் ஒருவன் தன் காரியங்களில் பலன் மேல் சரண் அடையாமல் இருக்கிறானோ... இது என் கடமை. காரியம். காரியம் என்பது, "இது என் கடமை. அதில் விளைவைப் பற்றிய கவலை இல்லை. என்னால் முடிந்த அளவு நேர்மையாக செய்ய வேண்டும். பழமை பற்றிய கவலை எனக்கில்லை. விளைவு கிருஷ்ணர் கையில்." காரியம் என்பது, "எனது கடமை. என் குரு மஹராஜ் கூறி இருக்கிறார் அதனால் அது என் கடமை. அது வெற்றி அடைகிறதா இல்லையா என்பது முக்கியம் இல்லை. அது கிருஷ்ணரை பொறுத்தது." இவ்வாறு செயலாற்றுபவன் சன்யாசி எனப்படுகிறான். உடையில் எதுவும் இல்லை அவன் மன நிலையில் இருக்கின்றது. ஆம் அதுவே சன்யாசம். காரியம் என்பது, "என்னுடைய கடமை". ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச :அவன் யோகி, முதல் தரமான யோகி - அர்ஜுனனைப் போல. அர்ஜுனன் அதிகாரப்பூர்வமாக சன்னியாசம் எடுக்கவில்லை. அவன் கிரகஸ்தன், போர்வீரன் ஆனால் அவன் அதையே அக்கறையாக எடுத்துக்கொண்டான். காரியம்: "கிருஷ்ணருக்கு இந்தப் போர் தேவைப்படுகிறது. நான் எனது உறவினர்களை கொன்றாலும் பரவாயில்லை நான் அதை செய்ய வேண்டும் என்று எண்ணினான்" - அதுவே சன்யாசம். முதலில் அவன் கிருஷ்ணருடன் தர்க்கம் செய்தான் இம்மாதிரியான போர் நல்லது இல்லை என்று, குடும்பம் கொல்லப்படுகிறது என்று, மேலும் மேலும் மேலும் தர்க்கம் செய்து கொண்டிருந்தான் ஆனால் பகவத் கீதையை கேட்டவுடன் "இது எனது கடமை, கிருஷ்ணர் என்னை செய்யச் சொல்கிறார்"- காரியம் என்று அவனுக்குப் புரிந்து விட்டது. எனவேதான் கிரகஸ்தனாக இருந்தும் போர்வீரனாக இருந்தும் சன்யாசி ஆனான். அதை அவன் காரியமாக எடுத்துக்கொண்டான். தனது கடமை. அதுவே உண்மையான சன்யாசம். "கிருஷ்ணர் கிருஷ்ண பக்தி இயக்கம் பரவ வேண்டும் என்று விரும்புகிறார் எனவே இதில் என் காரியம் இது என் கடமை இதற்கு வழி காட்டுபவர் எனது குரு எனவே நான் அதை செய்ய வேண்டும்." இதுவே சன்யாசம். இதுவே சன்யாசம். சன்யாசியின் மனநிலை ஆனால் அதில் சில சடங்குகள் இருக்கின்றன அது ஏற்றுக் கொள்ளப்படலாம்.
இந்தியன்: இதில் மனது ரீதியாக ஒரு பாதிப்பு இருக்கிறது
பிரபுபாதர்: ஹா இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் இதை விரும்புகின்றனர். சன்னியாசி என்பவர் பிரச்சாரம் செய்யலாம் இல்லையேல் சன்னியாசிக்கு என்று ஒரு சூத்திரம் உள்ளது அதுவே காரியம் - "இது மட்டுமே எனது கடமை. கிருஷ்ண பக்தி இயக்கம் வலியுறுத்தப்பட வேண்டும். இது மட்டுமே எனது கடமை" என்பவனே சன்யாசி ஆனால் கிருஷ்ணர் தானே இறங்கி வந்தார், அவர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (BG 18.66). சைதன்ய மஹாபிரபு, கிருஷ்ணர் சொல்கிறார் யேஇ க்ருஷ்ண தத்த்வ வேத்த ஸேஇ குரு ஹய: (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய 7.128) "கிருஷ்ணரைப் பற்றிய அறிவியல் அறிந்தவரே குரு," குருவின் கடமை என்ன? யாரே தேக, தாரே கஹ 'க்ருஷ்ண'-உபதேஷ: (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய 7.128) "நீ யாரை எல்லாம் எதிர் கொள்கிறாயோ கிருஷ்ணரின் வழிகாட்டுதல்களை அவருக்கு எடுத்துச் சொல்ல முயல்." ஸர்வ-தர்மான் பரித்யஜ... ஆக இந்த முறையில் நாம் இதனை மிகவும் அக்கறையாக எடுத்துக் கொள்வோமானால் "இது என்னுடைய கடமை" என்று எண்ணும் போது நீ சன்னியாசி ஆகிறாய், அவ்வளவுதான். ஸ ஸந்ந்யாஸீ என்று கிருஷ்ணர் சான்றிதழ் அளிக்கிறார். கிருஷ்ணரின் அறிவுறுத்தல்களை மக்கள் அக்கறையுடன் எடுத்துக் கொள்வதில்லை, அதுவே இந்தியாவின் துரதிருஷ்டம். கிருஷ்ணருக்கு பல போட்டிகளையும் கொண்டு வருகின்றனர். "கிருஷ்ணர் என்கிறாயா ராமகிருஷ்ணரும் கிருஷ்ணரைப் போல தான்," என்கிறார்கள் இந்த அயோக்கியத்தனம் தான் கொன்றுவிட்டது. இதனால் மிகுந்த அபச்சாரம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணருக்கு பதிலாக அவர்கள் ராமகிருஷ்ணரை கொண்டு வந்திருக்கின்றனர்
பாகவதர்: அவர்களுக்கு புவனேஸ்வரில் பெரிய மடம் இருக்கிறது
பிரபுபாதர்: ஆங்?
பாகவதர்: புவனெஸ்வரில் ஒரு பெரிய ராமகிருஷ்ண மடம் விவேகானந்தர் பள்ளி நூலகம் பெரும் நிலப்பரப்பு எல்லாமே சீரான முறையில் நடந்து வருகிறது.
பிரபுபாதர்: நாம் அதை செய்யலாம். மக்களை நீங்கள் ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் அவர்களுடன் போட்டியிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆனால் நீ உனது தத்துவத்தை எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம்
இந்தியன்: ஒரியா மக்களிடம் இப்படி நடக்கின்றபட்சத்தில்
பிரபுபாதர்: ம்ம்?
இந்தியன்: அவர்களை ஏற்றுக்கொள்ள வையுங்கள் இது தவறு இதுதான் சரியான வழி என்று..
பிரபுபாதர்: இல்லை அவர்களுடைய ராமகிருஷ்ணா மிஷன் தரித்ர நாராயண சேவை மற்றும் மருத்துவ சேவை செய்து மக்களை ஈர்க்கிறது. அது மட்டுமே அவர்களுடைய ஈர்ப்பு. மற்றபடி வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அவர்களுடைய தத்துவம் கண்டு ஈர்க்கப்பட்டவர் எவரும் இல்லை. அவர்களிடம் என்ன தத்துவம் இருக்கிறது? அதைப்பற்றி பேச வேண்டாம் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை