TA/Prabhupada 0413 - ஜபம் செய்வதன் மூலம் நாம் உத்தம நிலையை அடைய முடியும்



Lecture on SB 1.16.26-30 -- Hawaii, January 23, 1974

ஜெபம் செய்வதில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை தவறுகளுடன் ஜெபம் செய்வது, அதுவே தொடக்கம், அபசாரத்தில் 10 வகைகள் உள்ளன. அதைப்பற்றி நாம் பலமுறை விவரித்து இருக்கின்றோம். அபச்சாரமங்களுடன் ஜெபம் செய்வது முதல் நிலை. குற்றமற்ற ஜபம் செய்தல் ஒரு நிலை. தூய ஜபம் செய்வோமானால்... அபச்சாரம் இல்லையென்பது தூய்மை என்று அர்த்தமில்லை. அபச்சாரம் இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றோம் ஆனால் அபச்சாரம் இல்லாமல் இருப்பதில்லை. ஜெபம் தூய்மையாக இருப்பதே வெற்றி. நாம, நாமாபாஸ, அந்த் ஷுத்த-நாம. எனவே நம்முடைய குறிக்கோள் என்ன... அதைத்தான் இப்போது கூறினேன். ஹரிதாஸ் தாக்கூர் அவர்களுக்கும் பிராமணருக்கும் இடையேயான உரையாடலை நாம் சைதன்ய சரிதாம்ருதத்தில் காணலாம். ஜெபம் செய்வதன் மூலம் நாம் மிகப்பெரிய உத்தம நிலையை அடையலாம். தொடக்கத்தில் தவறுகள் இருக்கலாம் அந்த தவறுகளை நாம் தவிர்க்க முயல்வதே நாம பாஷா எனப்படும். நாம பாஷா என்பது தூய நாமம் அல்ல கிட்டத்தட்ட தூய்மையானது என்று பொருள். நாம பாட்ஷா, ஷுத்த-நாம. ஒருவர் சுத்த நாம ஜெபிக்கும் பொழுது பகவானின் நாமமானது அவரை கிருஷ்ணபிரேமை எனும் உயர்ந்த நிலையில் வைக்கிறது. அதுவே உத்தமமான நிலை நாம பாஷா நிலை மிகத் தூய்மையானதுமில்லை அபச்சாரமுமில்லை இரண்டிற்கும் இடைப்பட்டது அதுவே முக்தி. நாம் முக்தன் ஆகிவிடுவோம் அதாவது பௌதீக கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்று விடுவோம். தவறுகள் உடன் ஜெபம் செய்வோமானால் பௌதிக உலகிலேயே கட்டுண்டு இருப்போம். பக்தி வினோத தாக்குர் சொல்கிறார், நாமாகார பஹிர ஹய நாம நாஹி ஹய(?). "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா" என்பது பெரும் இயந்திர தன்மை வாய்ந்தது. அது உண்மையான ஹரேகிருஷ்ணா அல்ல. நாமாகார, நாம பஹிர ஹய, நாமாகார, நாம நாஹி ஹய.

நான் தூய்மையாக ஜெபிக்க வேண்டும். அதற்காக வருத்தப்பட வேண்டும் என்பதில்லை. தூய்மையற்றதாக இருந்தாலும் என்ன நம்முடைய ஜெபிக்கும் முறையை மிகவும் திடமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் நாம் தூய நிலையில் இல்லை. எனவே கட்டாயப் படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிக்குச் செல்லும் சிறுவன் போல. நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது இப்படி ஒரு பயிற்சி இருந்தது எங்கள் ஆசிரியர் சொல்வார் கையெழுத்து நன்றாக வருவதற்கு, "பத்து பக்கங்கள் எழுது" என்று அதுதான் பத்து பக்கங்கள் எழுதி பயிற்சி செய்தல் என்பது. அதனால் என் கையெழுத்து சீர்படும் எனவே 16 மாலைகள் ஜெபம் செய்வது இல்லை என்றால் ஹரேகிருஷ்ண ஜெபம் என்ற கேள்வி எங்கு வருகிறது? எனவே செயற்கையாக இருக்க வேண்டாம். நடிக்க வேண்டாம் உண்மையாக இருப்போம் அதுதான் அவசியம். ஆன்மீக வாழ்விலிருந்து உண்மையான பலன் கிடைக்க வேண்டுமானால் நடித்தல் கூடாது. காட்சிப்பொருள் என்றால் தெரியுமா? மருந்து கடைகளில் இருக்கும் பெரிய பாட்டில் அதில் நீர் நிறைக்கப்பட்டு இருக்கும் அதன் நிறம் சிவப்பு நீலம் எதுவாகவும் இருக்கும். ஆனால் உண்மையான மருந்துக்கு இது தேவையில்லை... (இல்லை இப்போது வேண்டாம்) உண்மையான மருந்துக்கு காட்சிப்பொருளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறு... ஒரே முறை கூட மிகத் தூய்மையாக ஒருவர் குற்றம் இன்றி ஹரே கிருஷ்ண ஜபம் செய்வாரானால் அனைத்து பௌதீக பந்தங்களில் இருந்து விடுபடுவார். ஒருமுறை போதும் ஏக க்ருஷ்ண நாமே யத பாப ஹய, பாபீ ஹய தத பாப கரி பரோ நாஹி(?)

எனவே சௌசம் சௌசம் என்பது அகம் புறம் இரண்டு தூய்மையையும் குறிக்கும் நாம் உள்ளில் இருந்து தூய்மையாக இருக்கவேண்டும் நமது சிந்தனை தூய்மையாக இருக்கவேண்டும். கலப்படம் இருத்தல் கூடாது. யாரையும் நாம் நம் எதிரியாக கருதுதல் கூடாது. "அனைவரும் நம்முடைய தோழர்கள் நான்... தூய்மையானவன் இல்லை. அதனால் யாரையாவது எதிரியாக கருதுகிறேன்." அதுபோல் பல குறியீடுகள் உள்ளன. சௌசம் அதாவது உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல். சத்தியம் சௌசம் தயா - தயாவை பற்றி நான் முன்பே விளக்கம் அளித்திருந்தேன். தயா என்பது தாழ்ந்தவர்களிடம் இரக்கம் கொள்வது. தாழ்ந்தவர்கள் இடம் துன்பப்படுபவர்கள் இடம்.. உண்மையில் பார்க்கப் போனால் இப்போது மொத்த மனித சமுதாயமே தாழ்ந்த நிலையில் தான் உள்ளது. கிருஷ்ணர் சொல்கிறார்,

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
(பகவத் கீதை 4.7)
பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே
(பகவத் கீதை 4.8)

எனவே, இந்தக் கலியுகத்தில் இப்போது இருக்கிற அனைவருமே உண்மையில் அசுரர்கள், இவர்களைக் கொல்வதற்கு என்று கிருஷ்ணர் ஒருமுறை வர வேண்டி இருக்கலாம். அதுதான் கல்கி அவதாரம். அதையே ஜெயதேவகோஸ்வாமி விளக்குகிறார். அது என்ன? கேஷவ த்ருத-கல்கி-ஷரீர ஜய ஜகதீஷ ஹரே. கலௌ, தூமகேதும் இவ கிம் அபி கராலம், ம்லேச்ச-நிவஹ-நிதனே கலயஸி கரவாலம். மலேசா எவனா போன்ற வார்த்தைகள் வேத மொழியில் கூறப்பட்டுள்ளது. எவனா என்றால் மாமிசம் உண்பவன் என்று பொருள். ஐரோப்பியர்கள் மட்டும்தான் எவனர்கள் என்பதில்லை அமெரிக்கர்கள் இந்தியர்கள் யாரும் எவனர்கள் இல்லை என்று கூறுவதற்கில்லை. யார் ஒருவர் மாமிசம் உண்கிறாரோ அவரே யவனர். எவனர் என்றாலே மாமிசம் உண்பவர். மலேசா என்றால் தூய்மை அற்றவர். வேதத்தின் கொள்கைகளை பின்பற்றாதவர். மலேசா எனப்படுகிறார் கஃபீர் என்று இஸ்லாமியர்கள் கூறுவது போல இஸ்லாமிய மதத்தை பின்பற்றாதவர் கஃபீர் என்று அழைக்கப்படுகிறார். இது மதம் சம்பந்தமான நோக்கு. கிறிஸ்தவர்கள் இத்தகையவர்களை கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாதவன் என்று அழைக்கிறார்கள் இல்லையா? அதுபோலவே வேதக் கொள்கைகளைப் பின்பற்றாதவனுக்கு மலேசா என்று பெயர். வேத கொள்கைகளை கடைப்பிடிக்க யாருமே இல்லை என்ற நிலை கூட ஒரு நாள் வந்து விடும். அப்போது அனைத்து மக்களுமே மலேசர்களாகிவிடுவரோ.. மலேச நிவாஹ நிதானே வேதக் கொள்கைகளைப் பின்பற்ற ஒருவரும் இல்லாத போது பிரச்சாரம் என்பதற்கு இடமே இல்லை. அங்கு கொலை மட்டும்தான் நடக்கும்.