TA/Prabhupada 0414 - உண்மையான முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை அணுகுங்கள்



Lecture & Initiation -- Seattle, October 20, 1968

பிரபுபாதர் : கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி.

கூடியுள்ளோர்: கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி.

பிரபுபாதர்: கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது முழுமுற் கடவுளான கிருஷ்ணரை அணுகுவது, இதுவே நேரடியான கிருஷ்ண பக்தி. இது பகவான் சைதன்யரின் விசேஷப் பரிசு. இன்றைய காலகட்டத்தில் பல குற்றங்கள் நிகழ்கின்றன. மனிதனின் வாழ்வில் குறைபாடுகள் நிறைந்துள்ளன. அவர்கள் மெதுமெதுவே கிருஷ்ண பக்தியை - கடவுள் பக்தியை கைவிட்டு வருகின்றனர். மெது மெதுவே விடுவது மட்டுமல்ல ஏற்கனவே விட்டுவிட்டார்கள். எனவே வேதாந்த சூத்திரம் சொல்கிறது அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. நாம் ஒன்றும் புதுவிதமான சமயக் கொள்கையை அறிமுகம் செய்துவிடவில்லை. அது தான் இந்நாளில் மிகப் பெரிய தேவை. அதனால் தான் நான் சொல்கிறேன் சாஸ்திரங்களை பைபிள் குர்ஆன் வேதங்கள் எதை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள். குறிக்கோள் கடவுளாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது கலியுகத்தின் ஆதிக்கத்தால், கலியுகம் என்பதே சண்டைகளும் சச்சரவுகளும் நிரம்பிய யுகம் அதனால் இக்கால மக்கள் பல தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறார்கள் முதல் கஷ்டமே என்னவென்றால் அவர்களுக்கு வாழ்நாள் குறைந்து விட்டது சராசரி வாழ்நாள் இந்தியாவைப் பொருத்தவரை 35 என்றாகிவிட்டது. இங்கு என்ன சராசரி வாழ்நாள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஜன நெருக்கம் அதிகமாகிவிட்டது. அவர்களுக்கு அந்த வித அறிவு இல்லை. இந்தியாவிற்கு வெளியே சென்று குடியேற வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு இல்லை. அனைவரும் இந்தியாவை சுரண்டுவதற்கு வந்தார்கள் தான் மற்ற நாடுகளை சுரண்ட வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை, இதுவே அவர்கள் பண்பாடு... அடுத்தவர்களின் சொத்துக்களை ஆக்கிரமிக்க அவர்கள் நினைப்பதில்லை எப்படியோ இந்தியாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடம் தான். ஏனெனில் அவர்கள் தங்கள் பண்பாட்டை விட்டுவிட்டனர் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்ற முயற்சி செய்கின்றனர் ஆனால் அவர்களால் அது முடியாது. அதனால் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்கிறார்கள்.

இந்த யுகம் அப்படிப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன. பிரச்சனை வேறு விதமாக இருக்கின்றன ஆனால் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவும் அனைத்து இடங்களிலும் உலக அமைதிக்காக திட்டம் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். உங்கள் நாட்டில் கூட, அமெரிக்காவில் கூட பிரபல மனிதர்களான கென்னடி போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தெரியுமா? யாரும் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே அங்கு வேறு விதமான பிரச்சனை. பொதுவுடமைக் கொள்கை நாடுகளில் குடிமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சி செய்யப்படுகிறார்கள். எத்தனையோ ரஷ்யர்கள் எத்தனையோ சீனர்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். இந்தப் பொதுவுடமை கொள்கை அவர்களுக்கு பிடிப்பதில்லை. எனவே பிரச்சனை இந்த யுகம் சம்பந்தப்பட்டது. இது கலியுகமாக இருக்கும் படியால் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கின்றது. என்ன பிரச்சினைகள்? பிரச்சனை என்னவென்றால் இந்த யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுள் உடையவர்களாக இருக்கின்றார்கள் நான் எப்போது இறப்போம் என்று நமக்கே தெரியாது எந்த நிமிடத்திலும் அது நடக்கலாம் பகவான் ராமச்சந்திரனின் ஆட்சியில் ஒரு பிராமணர் மன்னனிடம் வந்து "மன்னா எனது மகன் இறந்து விட்டான் தந்தை இருக்கும் போது மகன் எப்படி இறக்கலாம்? இதைக் கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்" என்று கேட்டானாம். அப்போது மன்னர் எத்தகைய பொறுப்பு உள்ளவராக இருந்திருக்கிறார் பாருங்கள். இந்த வயதான தந்தை மன்னனிடம் வந்து தன் குறையை முறையிட்டுள்ளார். தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மகன் ஏன் இறந்தான் அதற்கு காரணம் என்ன விளக்கமாகச் சொல் என்று கேட்டிருக்கிறான். எத்தகைய பொறுப்பு மிக்க அரசாக இருந்திருக்கிறது அரசாங்கம். அப்போது தந்தை இறப்பதற்கு முன் மகன் இறத்தல் என்பதற்கு அரசு பொறுப்பாக இருந்திருக்கின்றது. தந்தை மகனை விட மூத்தவராகவே இருப்பதனால் அவர் தானே முதலில் இறக்க வேண்டும் அதுதானே இயற்கை? அப்படிப்பட்ட பொறுப்பான அரசாங்கங்கள் அப்போது இருந்தன. ஆனால் இப்போது உள்ள நாகரிகமடைந்த உலகத்தில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை