TA/Prabhupada 0440 - மாயாவதியின் தத்துவம் என்னவென்றால் இறுதியான ஆன்மா தனித்தன்மை வாய்ந்தது



Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

பிரபுபாதர்: தொடருங்கள். பக்தர்: ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில், அங்கு சொல்லபப்பட்டுள்ளது அதாவது முழுமுதற் கடவுள் கணக்கில்லாத ஜீவாத்மாக்களின் பராமரிப்பாளர் அவர்களுடைய வேறுபட்ட சூழ்நிலைக்கேற்ப தனிப்படட தொழிலுக்கு, மேலும் வேலை செய்யும் எதிர் நடவடிக்கைகு ஏற்றப்படி. அந்த முழுமுதற் கடவுளும், அவருடைய முழுமையான பங்காக, அனைத்து ஜீவாத்மாக்களின் மனத்திலும் உயிரோடு இருக்கிறார். புனிதமானவர்கள் மட்டும், உள்ளும் புறமும் அதே முழுமுதற் கடவுளை பார்க்க கூடியவர்கள், உண்மையிலேயே பூரணமான அமைதியான நித்தியத்தை அடைய முடியும். அதே வேத உண்மை கணக்கிட்டு இங்கு அர்ஜுனுக்கு, மேலும் அதன் தொடர்பில் உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்பட்டது தன்னை மிகுந்த கற்றறிந்த அறிவாளியாக காட்டி ஆனால் உண்மையிலேயே குறைந்த அறிவுடையவர்கள். பகவான் தெள்ளத் தெளிவாக கூறுகிறார் அதாவது அவரும், அர்ஜுன், போர் களத்தில் கூடியுள்ள அனைத்து மன்னர்களும், தனித்தனியே நித்தியமானவர்கள், மேலும் நித்தியமான பகவான் ஜீவாத்மாக்களை தனித்தனியே பராமரிக்கிறார்." பிரபுபாதர்: மூலமான செய்யுள் என்ன? நீ வாசி. பக்தர்: "நான் இல்லாத நேரமே இருந்ததில்லை, நீயும், இந்த மன்னர்கள் அனைவரும்... (ப. கீ. 2.12)" பிரபுபாதர்: இப்போது "நான் இல்லாத நேரமே இருந்ததில்லை, நீயும், இந்த மக்களும் கூட ." இப்போது அவர் பகுத்து ஆராய்ந்து கூறுகிறார், "நான், நீ, மேலும்..." முதல் நபர், இரண்டாம் நபர், மேலும் மூன்றாம் நபர். அது முழுமை பெற்றுவிடடது. "நான், நீ, மேலும் மற்றவர்கள்." ஆகையால் கிருஷ்ணர் கூறுகிறார், "இவ்வாறு ஒரு நேரம் இருந்ததில்லை நான், நீ, மேலும் இந்த போர்க்களத்தில் ஒன்று கூடி இருக்கும் இந்த நபர்கள் அனைவரும் இருந்ததில்லை." எவ்வாறு என்றால் "கடந்த காலத்தில், நான், நீ, மேலும் அவர்கள் அனைவரும், அவர்கள் தனிப்பட்டு இருந்தார்கள்." தனிப்பட்டு. மாயாவதியின் தத்துவம் என்னவென்றால் இறுதியான ஆன்மா தனித்தன்மை வாய்ந்தது. பின்னர் எவ்வாறு கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "இவ்வாறு ஒரு நேரம் நான், நீ, இந்த நபர்கள் அனைவரும் இல்லாமல் இருந்ததில்லை?" அவ்வாறு என்றால், "நான் தனியாக இருந்தேன், நீ தனியாக இருந்தாய், நம் முன் இருக்கும் இந்த அணைத்து நபர்களும், அவர்களும் தனியாக இருந்தார்கள். இவ்வாறு ஒரு நேரம் இருந்ததில்லை." இப்போது உன் பதில் என்ன தீனதயாள? கிருஷ்ணர் கூறுகிறார் நாம் கலந்து இருக்கவே இல்லை. நாம் அனைவரும் தனித்தனியானவர்கள். மேலும் அவர் கூறுகிறார், "நாம் தொடர்ந்து இருக்கப் போவதில்லை... நாம் இல்லாமல் இருக்க கூடிய நேரம் இருக்கப் போவதில்லை." அப்படியென்றால் நாம் கடந்த காலத்தில் தனியாக இருந்தோம், நிகழ் காலத்தில் நாம் தனியாகவே இருந்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை, மேலும் எதிர் காலத்திலும் கூட, நாம் தொடர்ந்து தனியாகவே இருப்போம். பிறகு இந்த தனித்தன்மை கருத்து எப்போது வந்தது? கடந்த காலத்தில் , நிகழ் காலத்தில், எதிர் காலத்தில், இங்கு மூன்று காலங்கள் உள்ளன. மூன்று காலங்களிலும் நாம் தனியாகவே இருப்போம். பிறகு பகவான் தனித்தன்மை வாய்ந்தவராகிவிடடால், அல்லது நான் தனித்தன்மை வாய்ந்தவராகிவிடடால், அல்லது நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவராகிவிடடால்? எங்கே சந்தர்ப்பம்? கிருஷ்ணர் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார், "இவ்வாறு ஒரு நேரம் இருந்ததில்லை நான், நீ, தனி அரசர்கள் அல்லது போர் வீரர்கள்... நாம் கடந்த காலத்தில் இருந்ததில்லை என்று பொருள்படாது." ஆக கடந்த காலத்தில் நாம் தனியாக இருந்தோம், நிகழ் காலத்தில் சந்தேகமே இல்லை. நாம் தனியாக இருக்கிறோம். நீங்கள் என்னுடைய சீடர்கள், நான் உங்களுடைய ஆன்மிக குரு, ஆனால் உங்களுக்கு உங்களுடைய தனித்த தன்மை உள்ளது, எனக்கு என்னுடைய தனித்த தன்மை உள்ளது. நீங்கள் என்னுடன் உடன்பாடு கொள்ளவில்லை என்றால், நீங்கள் என்னை விட்டு விலகலாம். அது உங்களுடைய தனித்தன்மை . ஆகையால் உங்களுக்கு கிருஷ்ணர் மீது அன்பில்லை என்றால், நீங்கள் கிருஷ்ண உணர்விற்கு வர முடியாது அது உங்கள் தனித்தன்மை. ஆகையால் இந்த தனித்தன்மை தொடர்கிறது. அதேபோல் கிருஷ்ணருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு கிருஷ்ண உணர்வில் மறுப்பு தெரிவிப்பார். நீங்கள் விதிகள் விதிமுறைகளை பின்பற்றுவதால், கிருஷ்ணர் உங்களை ஏற்றுக் கொள்ள கடப்பாடு கொண்டுள்ளார் என்பதில்லை. இல்லை. அவர் நினைத்தால் அதாவது "அவன் ஒரு முட்டாள், நான் அவனை ஏற்றுக் கொள்ள முடியாது," அவர் உங்களை மறுத்துவிடுவார். ஆகையால் அவருக்கு தனித்தன்மை உள்ளது, உங்களுக்கு தனித்தன்மை உள்ளது, எல்லோருக்கும் தனித்தன்மை உள்ளது. தனித்தன்மை என்னும் கேள்வி எங்கிருக்கின்றது? அதற்கு சாத்தியமில்லை. மேலும் நீங்கள் கிருஷ்ணரை நம்பவில்லை என்றால், நீங்கள் வேதங்களை நம்பவில்லை, மற்று அனைத்தையும் தவிர்த்து, கிருஷ்ணர் ஒப்புயர்வற்ற அதிகாரி, முழுமுதற் கடவுள். அதன்பின்னும் நாம் அவரை நம்பவில்லை என்றால், பிறகு அறிவில் முன்னேறுவதற்கு சாத்தியம் ஏது? அதற்கு சாத்தியமே இல்லை. ஆகையால் தனித்தன்மை என்ற கேள்விக்கு இடமேயில்லை. இது தான் அதிகாரியின் வாக்குமூலம். இப்போது, அதிகாரியின் வாக்குமூலம் தவிர்த்து, நீங்கள் உங்களுடைய காரணத்தையும் வாக்குவத்தையும் விண்ணப்பம் செய்ய வேண்டும். எங்கேயாவது இரண்டு கடசிக்குள் உடன்பாடு இருக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? இல்லை. நீங்கள் செல்லுங்கள், படியுங்கள். அரசாங்கத்தில், சமூகத்தில், நாட்டில், அங்கு உடன்பாடு இல்லை. நாடாளுமன்றத்தில் கூட, உங்கள் நாட்டில் கூட. ஒருவேளை அங்கு ஒரு சட்டமன்ற குழு இருந்தால், எல்லோருக்கும் நாட்டின் மேல் அக்கறை இருக்கும், ஆனால் அவர்கள் தனிப்படட முறையில் சிந்திக்கிறார்கள். ஒருவர் சிந்திக்கிறார் அதாவது "என்னுடைய நாட்டின் சுபிட்ஷம் இந்த முறையில் இருக்கும்." இல்லையெனில், அதிபர் தேர்தலின் போது ஏன் அங்கு போட்டி நடக்கிறது? எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதாவது "அமெரிக்காவிற்கு நிக்சன் தேவை." மேலும் மற்றோருவர் கூறுகிறார், "அமெரிக்காவிற்கு நான் தேவை." ஆனால் ஏன் இரண்டு? நீங்கள் அமெரிக்காவானால், மேலும் நீங்கள் இருவரும்... இல்லை. அங்கு தனித்தன்மை உள்ளது. திரு நிக்சனின் கருத்து வேறொன்று. திரு மற்றோரு வேட்பாளரின் கருத்து வேறொன்று. நாடாளுமன்றத்தில், சட்டமன்ற குழுவில், காங்கிரஸில், ஐக்கிய நாடுகளில், எல்லோரும் தன் சொந்த கருத்துடன் சண்டை போடுகிறார்கள். இல்லையெனில் ஏன் உலகில் இதனை கொடிகள் இருக்கின்றன? நீங்கள் தனித்தன்மை என்று எங்கும் கூற முடியாது. மனோபாவம் எங்கும் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கும், மனோபாவம், தனித்தன்மை, மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய காரணத்தையும், வாக்குவத்தையும், விண்ணப்பம் செய்யது அதிகாரிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு கேள்வி விடை காணும். இல்லையெனில் அது மிகவும் கஷ்டமாக இருக்கும்.