TA/Prabhupada 0462 - வைஷ்ணவ அபராதம் மிக தீவிரமானது



Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977

பிரபுபாதர்: வைஷ்ணவ அபராதம் மிக தீவிரமானது. ம்பாரிச மகாராஜரை அறிவீர்களா? அவர் ஒரு பக்தர், மற்றும்... துர்வாசர் தனது யோக சக்தியின் மேல் ஆணவம் கொண்டிருந்தார். அவர் அம்பாரிச மகாராஜரின் அடிகளில் அபராதம் செய்தார். அதனால் கிருஷ்ணர், சுதர்சன-சக்கிரத்தை ஏவி அவரை தண்டித்தார். அவர் உதவி கேட்டு பல நபர்களிடம் சென்றார் - பிரம்மா, விஷ்ணு. அவரால் விஷ்ணுலோகத்கிற்கே செல்ல முடியும், ஆனால் அங்கேயும் அவர் மன்னிக்கப் படவில்லை. இறுதியில் அவர் வைணவரிடம் வந்து அதாவது அம்பாரிச மகாராஜரின் தாமரை பாதங்களில் சரணடைந்தே ஆகவேண்டி இருந்தது. பிறகு அவரோ வைணவர், இயல்பாகவே, உடனேயே அவரை (துர்வாசரை) மன்னித்தார். ஆக வைஷ்ணவ அபராதம் என்பது மிக தீவிரமானது, ஹாதி-மத. ஆக நாம் வைஷ்ணவ-அபராதமிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


அர்ச்யே விஷ்ணு ஷில-தீர் குருஸு நர-மதிர் வைஷ்ணவ-ஜாதி-புத்தி(பத்ம புராணம்). வைஷ்ணவ-ஜாதி-புத்தி


அதுவும் ஒரு மிக தீவிரமான அபராதம். அதுபோலவே, குருவை சாதாரண மனிதன் என எண்ணுவதும் அபராதம் தான். அர்ச விக்கிரகத்தை, உலோகம், கல்லு என்று கருதுவது... இவை எல்லாம் அபராதங்கள். 'ஸ நாரகீ'. கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு வைணவர் குறித்த பாதையில் செல்லவேண்டும். மஹாஜனோ யேன ஸ கத:. பிரகலாத மகாராஜர் சாதாரண சிறுவன் என்று நினைக்காதீர்கள். நாம் பிரகலாத மகாராஜரிடமிருந்து பக்தித் தொண்டில் எப்படி முன்னேறுவது என்பதை கற்கவேண்டும். மிக நன்றி. பக்தர்கள்: ஜய பிரபுபாத.