TA/Prabhupada 0469 - தோல்வியோ, வெற்றியோ கிருஷ்ணரை சார்ந்திருங்கள். ஆனால் சண்டையிடுவது இருக்க வேண்டும்



Lecture on SB 7.9.9 -- Mayapur, March 1, 1977

ஆகையால் நம்முடைய இந்த இயக்கம் நடைமுறை செயலைப் சார்ந்துள்ளது. எவ்வகையான திறமை உங்களுக்கு இருந்தாலும், எவ்வகையான வல்லமை நீங்கள் பெற்றிருந்தாலும், உங்களிடம் கல்வி உள்ளது .... நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. உங்களிடம் இருப்பது எதுவாயினும், எம்மாதிரியான பதவியில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்யலாம். நீங்கள் ஏதோ ஓர் அளவுக்கு முதலில் கற்றிருக்க வேண்டும் பிறகு தான் நீங்கள் சேவை செய்ய முடியும் என்பதில்லை. இல்லை அந்த சேவையே கற்றல் ஆகும். எவ்வளவுக்கு நீங்கள் சேவை செய்கிறீர்களோ, நீங்கள் இன்னும் அதிகமாக அனுபவமிக்க சேவகனாக முன்னேற்றமடைகிறீர்கள். நமக்கு தேவைக்கு அதிகமான அறிவாற்றல் தேவையில்லை. இல்லையெனில் .... அதன் உதாரணம் யாதெனில் கஜ-யூத-பாய. அந்த யானை, யானைகளின் ராஜா, அவன் மனா நிறைவு கொண்டான். அவன் ஒரு விலங்கு. அது ஒரு பிராமணன் அல்ல. அது ஒரு வேதாந்தி அல்ல. ஒருவேளை ஒரு பெரிய, கொழுப்பு உள்ள விலங்கு, ஆனால் பார்க்கப் போனால் அது ஒரு விலங்கு. அனுமன் ஒரு விலங்கு. இது போல் அங்கு பல விஷயங்கள் உள்ளன. ஜடாயு ஒரு பறவையாகும். எனவே அவர்கள் எவ்வாறு திருப்தி கொண்டார்கள்? ஜடாயு ராவணனுடன் சண்டையிட்டது. நேற்று நீங்கள் பார்த்தீர்கள். ராவணன் சீதா தேவியை கடத்திக் கொண்டிருந்தான், அத்துடன் ஜடாயு, அந்த பறவை, அது பறந்து போய்க் கொண்டிருந்தது. ராவணன் இயந்திரம் இல்லாமல் பறக்க தெரிந்தவன். அவன் மிகவும் அதிகமாக பௌதிக சக்தி நிறைந்தவன். ஆகையால் ஜடாயு அவனை ஆகாயத்தில் தாக்கியது: " யார் நீ? நீ சீதாவை கடத்திக் கொண்டு போகிறாய். நான் உன்னுடன் சண்டை போடுவேன்." ஆனால் ராவணன் மிகவும் சக்தியுடையவன். ஜடாயு தோற்கடிக்கப்பட்டது, ஆனால் அது சண்டை போட்டது. அது அவருடைய சேவை. தோற்கடிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அதேபோல், நாமும் சண்டை போடவேண்டும். கிருஷ்ண பக்தி இயக்கத்தை எதிர்ப்பவருடன், நம்முடைய சிறந்த சக்தியுடன் சண்டை போட வேண்டும். நாம் தோற்கடிக்கப்பட்டால் பரவாயில்லை. அதுவும் சேவைதான். கிருஷ்ணர் சேவையைப் பார்க்கிறார். தோல்வியோ அல்லது வெற்றியோ, கிருஷ்ணரை சார்ந்திருங்கள். ஆனால் சண்டையிடுவது இருக்க வேண்டும். கர்மண்யே வாதி காரஸ் தே மா பலேஷு கதாசன (ப.கீ. 2.47). அதுதான் பொருள். நீங்கள் கிருஷ்ணருக்கு விசுவாசமாக, திறமையுடன் பணி புரிய வேண்டும், மேலும் வெற்றியோ அல்லது தோல்வியோ, அதனால் பரவாயில்லை. எவ்வாறு என்றால் ஜடாயு ராவணனுடன் சண்டையிட்டு தோல்வி கண்டது போல். அதனுடைய இறகுகள் வேட்டப்பட்டது. ராவணன் மிகவும் பலசாலி. மேலும் பகவான் ராமசந்திரர், அதனுடைய கடைசி ஈமக்கிரியை நடத்தினார் ஏனென்றால் அது ஒரு பக்தன். இதுதான் செயல்முறை, நாம் ஏதாவது கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. நம்மிடம் என்ன திறன் இருக்கிறதோ, பகவானுக்கு சேவை செய்ய முடிவெடுப்போம். நீங்கள் வசதிப்படைத்தவராக அல்லது மிகவும் அழகாக, உடல் பலமிக்கவராக இருக்க அதற்கு தேவையில்லை. அந்த மாதிரி எதுவும் தேவையில்லை. ஸ் வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோகஷஜே அஹைதுகி அப்ரதிஹதா (ஸ்ரீ.பா. 1.2.6). எந்த நிலைமையிலும், உங்களுடைய பக்தி தொண்டு நிறுத்தப்படக் கூடாது. அது கொள்கையாக இருக்க வேண்டும், எந்த சூழ்நிலையிலும் நாம் நிறுத்தப் போவதில்லை. கிருஷ்ணர் ஒரு சிறிய மலர், சிறிதாவு தண்ணீர் கூட ஏற்றுக் கொள்ளா தயாராக இருக்கிறார். பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (ப.கீ. 9.26). "எனக்கு மிகவும் ஆடம்பரமான மேலும் சுவையுள்ள உணவை கொடுங்கள். பிறகு நான் ...," என்று கிருஷ்ணர் கூறவில்லை, அவர் திருப்பதி அடைவார். இல்லை. உண்மையாக தேவைப்படுவது பக்தி. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி. இதுதான் உண்மையான தேவை - பக்த்யா. பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத: (ப.கீ. 18.55) ஆகையினால் நாம் நம்முடைய பக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், கிருஷ்ணர் மீது பாசம். பிரேமா பூமர்தோ மஹான், சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்தி இருக்கிறார். மக்கள் நாடி செல்வது தர்ம அர்த்த-கம மோக்ஷ, ஆனால் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், "இல்லை, நீங்கள் உயர்ந்த நிலை அடைந்தாலும், மோக்ஷ, கிருஷ்ணரை அடையும் சாதகமான தகுதி அது அல்ல." பிரேமா பூமர்தோ மஹான். பஞ்சம-புருஷர்தா. மக்கள் மதசார்ந்தவர்களாக இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் நல்லது. பிறகு பொருளாதாரம். தர்ம அர்த்த. அர்த்த என்றால் பொருளாதாரத்தில் மிகவும் பணக்காரர், செல்வச் சிறப்பு. பிறகு காம, புலன் மகிழ்ச்சியில் மிகவும் கைதேர்ந்தவர். அதன் பிறகு முக்தி. இது பொதுவான கோரிக்கை. ஆனால் பாகவதம் கூறுகிறது, "இல்லை, இந்த காரியங்கள் தகுதிகள் அல்ல." தர்ம: ப்ரோஜ்ஹித-கைதவோ அத்ர (ஸ்ரீ.பா. 1.1.2).