TA/Prabhupada 0498 - நான் இந்த உடலை நீத்தவுடன் நான் கட்டிய கோட்டையும் வியாபாரமும் முடிந்துவிடும்
Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972
ஆக, இதோ இருக்கிறது ஆலோசனை. கிருஷ்ண பக்தர்கள் ஆக முயலுங்கள். அதன்பின் பௌதிக உலகில் ஏற்படும் வெளிப்புற தற்காலிக மாற்றங்களால் பாதிப்பு அடைய மாட்டீர்கள். உடல் ரீதியாக மட்டுமின்றி, நடைமுறையில் ஆன்மிக வாழ்வில் முன்னேறியவன், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் சமூக பாதிப்புகளால் குழப்பம் அடைய மாட்டான். இல்லை. இது வெறும் வெளிப்புற தோற்றம் என்பதை அவன் அறிவான், ஒரு கனவைப் போல. இதுவும் ஒரு கனவு தான். நம்முடைய தற்போதைய வாழ்வு கூட ஒரு கனவுதான். இரவில் கனவு வருவது போல. கனவில் நாம் பல்வேறு விஷயங்களை உருவாக்குகிறோம். அதுபோல இந்த பௌதிக உலகமும் ஒரு ஸ்தூலமான கனவுதான். ஸ்தூலமான கனவு. அது சூட்சுமமான கனவு இதில் ஸ்தூலமான கனவு. அந்தக் கனவு மனம் உடல் புத்தி ஆகியவற்றின் இயக்கம். அதுபோல் இங்கு ஐம்பூதங்கள் ஆன மண் காற்று நீர் நெருப்பு... ஆனால் இவை அனைத்தும் இந்த எட்டும் பௌதீக மயமானது தான். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் "நான் இப்போது மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை கட்டி விட்டேன்" என்று அதுவும் கனவன்றி வேறெதுவும் இல்லை. கனவுதான் வேறொன்றுமில்லை. கனவு என்பது இங்கு, நான் இந்த உடலை விட்டுப் பிரிந்த உடனே, என்னுடைய அடுக்குமாடி கட்டிடம் வியாபாரம் தொழில் அனைத்தும் முடிந்துவிடும். அதே கனவுதான்.
கனவு சில மணி நேரம் அல்லது சில நிமிடங்கள் இருக்கும். ஆனால் இந்தக் கனவு சில வருடங்கள் இருக்கும் அவ்வளவுதான். அது ஒரு கனவுதான். எனவே இந்தக் கனவு நிலையினால் ஒருவர் பாதிக்கப்படக் கூடாது. அதுவே ஆன்மீக வாழ்க்கை. பாதிப்படைதல் கூடாது. நாங்கள் பாதிப்படைவதில்லை அதுபோல. கனவில் நான் அரியாசனத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு ஒரு மன்னனாக செயல்படுகிறேன் என்று வைத்துக் கொள்வோம், அந்தக் கனவு முடிந்தவுடன் நான் வருத்தப் படுவதில்லை. அதுபோலவே கனவில் என்னை ஒரு புலி தாக்குவதாக உணர்கிறேன். நான் உண்மையில் கத்தக்கூட செய்கிறேன் "இதுவும் புலி இதோ புலி என்னை காப்பாற்றுங்கள்!" என்று. என் அருகில் உறங்குபவர், கேட்கிறான், "அட ஏன் அழுகிறாய்? எங்கே இருக்கிறது புலி?" என்று விழிப்பு வந்தவுடன் அவனுக்கு தெரிகிறது அங்கு புலி இல்லை என்று. அதுபோல்தான் அனைத்தும். ஆனா இந்த கனவு, இந்த ஸ்தூல சூக்ஷ்ம கனவுகள் வெறும் பிரதிபலிப்புகள். கனவைப் போல, கனவு என்பது என்ன? ஒரு நாள் முழுவதும் நான் என்ன நினைக்கிறேனோ அதன் பிரதிபலிப்பே கனவு. என் தந்தை வஸ்திர தொழிலில் இருந்தார். எனவே சில சமயங்களில் கனவில்கூட அவர் அவற்றின் விலையை கூறிக் கொண்டிருப்பார், "இதுதான் விலை" என்று. அதுபோல்தான் அனைத்தும் கனவு. இப்போதைய வாழ்க்கை ஐம்பூதங்களையும் 3 சூக்ஷ்ம அங்கங்களையும் கொண்ட இது கனவைப் போன்றதுதான். ஸ்மர நித்யம் அனியதாம். அதனால்தான் சானக்கிய பண்டிதர் சொல்கிறார், ஸ்மர நித்யம் அனியதாம். அனித்ய, இது தற்காலிகமானது. கனவு எப்போதுமே தற்காலிகமானது தான்.
எனவே நம்மிடம் உள்ள பொருட்கள் நாம் பார்ப்பவை அனைத்தும் கனவுதான் தற்காலிகமானது தான் என்பதை நாம் உணர வேண்டும். ஆக தற்காலிகமான பொருட்களில் நாம் ஊன்றி இருப்போமானால், பொதுவுடைமை நாட்டுப்பற்று குடும்பப் பற்று அந்தப் பற்று இந்தப்பற்று என்று சொல்லப்படுகின்ற அனைத்தையும் பற்றி நேரத்தை வீணடித்து கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ளாமல் விட்டு விடுவோமானால் ஷ்ரம ஏவ ஹி கேவலம் (SB 1.2.8), இதற்குப் பெயர்தான் அதுதான் நேர விரயம், இன்னொரு உடலைப் பெற வழி வகுப்பது. நம்முடைய வேலை "நான் இந்த கனவல்ல, நான் உண்மை ஆன்மீக உண்மை. அதனால் எனக்கு வேறு வேலை இருக்கிறது" என்பதை உணர்வது தான். அதற்குப் பெயர்தான் ஆன்மீக வாழ்க்கை. "நானே பிரம்மன். ஜடப்பொருள் அல்ல" என்பதைப் புரிந்து கொள்வதே ஆன்மிக வாழ்க்கை. ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா (BG 18.54). அப்போதுதான் நாம் ஆனந்தமயமாக இருப்போம். பௌதிக உலகில் பல மாற்றங்களுக்கும் நாம் ஆட்படுத்த படுவதால் வெளிப்புற செயல்களினால் பாதிக்கப்பட்டு வருத்தம் கொள்கிறோம் மகிழ்ச்சி கொள்கின்றோம், ஆனால் "இவற்றால் எனக்கு கவலை இல்லை" என்பதை சரிவர புரிந்து கொள்வோமானால் ஆனந்தம் அடைவோம்." எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எதுவும் இல்லை. இந்தப் பொருட்களால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை"