TA/Prabhupada 0499 - வைஷ்ணவன் அடுத்தவரைப் பற்றி யோசிக்கும் இரக்ககுணமும், கருணையும் கொண்டவன்



Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972


ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி (ப.கீ 18.54). அந்தப் பொழுதில், ஒவ்வொரு உயிர்வாழியும் தன்னைப்போலவே இருப்பதை உணரலாம். அவன் கற்றறிந்த பிராமணனாக இருந்தாலும் சரி நாயாக இருந்தாலும் சரி சண்டாளனாக இருந்தாலும் சரி யானையாக இருந்தாலும் சரி

வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே ச
பண்டிதா: ஸம-தர்ஷின:
(ப.கீ 5.18)

அது வேண்டும். அதுவே ஆன்மீகப் பார்வை. பண்டிதா: ஸம-தர்ஷின:. ஆக பக்தன் என்பவன் ஒரு முதல்தர பண்டிதன். ஒரு பக்தன். ஏனெனில் அவன் ஸம-தர்ஷின:. ஸம-தர்ஷின:. என்றால் அவன் அடுத்தவர்களுக்காக யோசிக்கிறான். ஒரு வைஷ்ணவன் பர-து:க-து:கீ, க்ருபாம்புதிர் ய:. வைணவன் மிகவும் இரக்க குணம் உடையவன் அருளாளன் அடுத்தவர்களுக்காக யோசிப்பான் அவன் அடுத்தவர்களுக்காக யோசிப்பான் ஏனென்றால் அடுத்தவனுக்கு என்ன நிலை என்பதை இவன் அறிந்திருப்பான். ஒவ்வொரு உயிர் வாழியையும் கடவுளின் அங்கமாகவே அவன் பார்க்கிறான். " இப்போது அவன் கடவுளின் ஒரு அங்கம். கடவுளின் திரு வீட்டிற்கு சென்றிருப்பான், அவனுடன் ஆடியிருப்பான் வாழ்ந்திருப்பான் நன்றாக நித்தியமாக ஆனந்தமயமாக. இங்கு அவன் பன்றியாகவும் மனிதனாக அரசனாக இருந்து அழிந்து கொண்டிருக்கிறான். அதேதான். இதெல்லாம் சில வருடங்களுக்கு மட்டும்தான்." எனவே ஒரு பக்தன் இந்த மாயையிலிருந்து அவனை வெளிக்கொணர முயல்கிறான். அதனால் அவன் பர-து:க-து:கீ, என்று அழைக்கப்படுகிறான் அவன் உண்மையில் அடுத்தவருடைய துயர நிலையை கண்டு வருந்துகிறான். இந்த சமூக அரசியல் தலைவர்களை போன்றதல்ல அது.... அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களை தங்களுக்காகவே சொத்து சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வளவுதான். ஆனால் அது என்னதான் சொத்து அது வெறும் வெத்து. பாவம். யார் ஒருவர், "என்னிடம் பணம் இருக்கிறது நான் பெரும் பாக்கியசாலி" என்று எண்ணினால், அது உண்மையிலேயே பாக்கியம் அல்ல. கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதே உண்மையான பாக்கியம். அவனே பாக்கியசாலி. மற்றவர்கள் பாக்கியமற்றவர்கள். அனைவரும் பாக்கியமற்றவர்கள்.

இந்த வழியில் ஒருவர் ஆன்மீக புரிதலுக்கு வரவேண்டும், அதன் அறிகுறி பௌதீக பாதிப்புகள் குழப்பம் அடையாமல் இருப்பது. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப, ஸம-து:க-ஸுகம் (ப.கீ 2.15). ஸம-து:க-....என்பதே அறிகுறி ஏனெனில் அவனுக்கு இது கனவு என்பது தெரியும். நீ கனவு காண்கிறாய் என்றாள் நீ புலியால் பயப்பட்டாலும் அரசனாக இருந்தாலும் அதனால் என்ன மதிப்பு? இரண்டும் ஒன்றுதான். அதில் வேறுபாடு இல்லை. அது வெறும் கனவு தான். எனவே ஸம-ஸுக து:க-ம் நான் ஒரு மன்னனாகவோ பெரிய மனிதனாகவோ ஆனதால் சந்தோஷப்படுவேனானால் அதுவும் ஒரு கனவு தான் நான் ஏழையாக இருக்கிறேன் நான் மிகவும் துயரம் படுகிறேன் வியாதிக்கு உள்ளாகிறான் என்று நினைப்பான் ஆனால் அதுவும் அப்படித்தான். அதனால்தான் கிருஷ்ணர் முந்தைய ஸ்லோகத்தில் சொல்கிறார்: தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத. (ப.கீ 2.14). "சகித்துக்கொள்ள சற்றே பழகுங்கள். உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். அதுவே கிருஷ்ணபக்தி" யுத்யஸ்வ மாம் அனுஸ்மர (ப.கீ 8.7). நம்முடைய உண்மையான வேலை கிருஷ்ணர் செல்வதுபோல், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (ப.கீ 18.65). "எப்போதும் என்னை நினை" இந்தப் பழக்கம் தொடர வேண்டும். நான் துயரப்படுகிறேனோ சுகப்படுகிறேனோ கவலை இல்லை. இங்கே.... சைதன்ய சரிதாம்ருதத்தில், 'த்வைதே' பத்ராபத்ர-ஜ்ஞான ஸப 'மநோதர்ம', 'ஏஇ பால ஏஇ மந்த' ஏஇ ஸப 'ப்ரம'. 'த்வைதே' இரட்டை யான இந்த உலகில், இங்கு இந்த பௌதிக உலகில், "இந்தப் பொருள் நன்றாக இருக்கிறது அந்தப் பொருள் நன்றாக இல்லை" என்பதெல்லாம் வெறும் மன கற்பனை. இங்கு உள்ள அனைத்தும் கெடுதல்தான் எதுவும் நன்மை இல்லை. இதெல்லாம் நம்முடைய கற்பனைதான். "இது நன்மை எது தீமை" நாம்தான் அதனை செய்கின்றோம். அரசியல் களத்தில் உள்ளதுபோல, "இந்தக் கட்சி கெடுதல் கெட்டது இந்த கட்சி நல்லது" ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு செல்கிறதோ நிலைமை அதேதான். விலைவாசி உயர்ந்து கொண்டே தான் போகிறது. அது இறங்கவே போவதில்லை, எந்தக் கட்சியை மாற்றினாலும். ஏனெனில் இதெல்லாம் வெறும் கற்பனை.