TA/Prabhupada 0505 - உடலைப் பாதுகாக்க முடியாது, அது சாத்தியமில்லை



Lecture on BG 2.18 -- London, August 24, 1973

பிரத்யும்னன்: அறிவற்ற அளவிடமுடியாத நித்தியமான உயிர் வழிகளின் பௌதீக உடல் மட்டுமே அறிவிற்கு உள்ளாகிறது; எனவே போரிடு பரதனின் வழித்தோன்றலே!"

பிரபுபாதர்:

அந்தவந்த இமே தேஹா
நித்யஸ்யோக்தா:
அனாஷினோ 'ப்ரமேயஸ்ய
தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
(BG 2.18)

பிரபுபாதர்: அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண: ஷரீரிண: ,இது ஒரு பன்மைச் சொல். ஷரீரிண: ஷரீரின் அல்லது ஷரீரி என்றால் இந்த ஷரீர அல்லது உடலின் சொந்தக்காரர். ஷரீர என்றால் உடம்பு, ஷரீரின் என்றால் இந்த உடம்பின் சொந்தக்காரர். அதன் பன்மையே ஷரீரிண: பல்வேறு வழிகளில் கிருஷ்ணர் அர்ஜுனனை ஏற்க வைக்கிறார், ஆன்மா உடலில் என்றும் வேறுபட்டது என்பதை. அந்தவத், இந்த உடல், முடிவுக்கு வந்துவிடும் நீ எப்படி வேண்டுமானாலும் முயற்சி செய் விஞ்ஞான பூர்வமாக முகப் பூச்சுகள் மற்றும் பலவற்றை பயன்படுத்தி, இந்த உடலை பாதுகாக்க முடியாது. சாத்தியமில்லை. அந்தவத். அன்தவத் என்றால் முடிவு, வத் என்றால் கொண்டது எனவே "போரிட வேண்டியது உன்னுடைய கடமை, ஆனால் நீயோ உன் பாட்டனார், குரு மற்றும் உறவினர்களின் உடலுக்காக வேதனை வருகிறாய், அவர்கள் அழிக்கப்படுவார்கள் நீ துன்பப்படுவாய். நீ தூண்டப்படுவதால் தவறில்லை, ஆனால் நீ போரிட வில்லை என்றாலும் அவர்கள் உடல் இன்றோ நாளையோ அழியத்தான் போகிறது. எனவே நீ ஏன் உன்னுடைய கடமையைச் செய்வதிலிருந்து தவற வேண்டும்? அதுதான் விஷயம். "மேலும் ஆன்மாவைப் பொறுத்தவரையில், உன் பாட்டனார் குரு மற்ற அனைவருடைய ஆன்மாவும் நித்தியமானது" முன்பே சொன்னது போல நித்யஸ்ய உக்தா:

இங்கும் கிருஷ்ணர் உக்த என்று கூறுகிறார் அப்படி என்றால் "சொல்லப்பட்டது" என்று பொருள்படும். நான் வெறும் கருத்தாக மட்டும் சொல்லவில்லை. அது சொல்லப்பட்டுவிட்டது. அது முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது. வேத இலக்கியங்களில் அதிகாரிகளினால், சாட்சிகளை இவ்வாறு தான் சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் முழுமுதற்கடவுள் ஆகியவர் கூட வெறும் கோட்பாடாக மட்டும் சொல்வதில்லை. அது முன்பே சொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்றே சொல்கிறார். அனாஷினோ 'ப்ரமேயஸ்ய. அனாஷினோ என்றால் அழியக்கூடியது, நாஷினோ என்றால் அழிவில்லாதது. ஷரீரிண:, ஆன்மா, அனாஷின: ஆன்மா அழிவில்லாதது மேலும், அப்ரமேயஸ்ய. அப்ரமேயஸ்ய அளவிட முடியாதது அதனை அளக்க முடியாது. வேத இலக்கியங்களில் அதன் அளவு கூறப்பட்டிருந்தாலும் அதனை அளக்க முடியாது. பல்வேறு விஷயங்கள் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன. நீங்கள் விஞ்ஞான அறிவில் முன்னேறியவர்கள், அது உண்மை இல்லை என்று நீங்கள் கூட சொல்ல முடியாது. உங்களால் அளவிடக் கூட முடியாது. பல்வேறுவிதமான உயிர் வழிகளைப் பற்றி பத்ம புராணத்தில் ஜலஜா நவ-லக்ஷாணி என்று சொல்லப் படுவது போல: நீர்வாழ் விலங்குகள் மட்டும் 9 லட்சம் வகைகள். நாம் இதனை மறுக்க முடியாது. "ஒன்பது லட்சம் இல்லை, அதை விட அதிகம் குறைவு" எத்தனை வகைகள் இருக்கின்றன என்று நீருக்குள் சென்று நம்மால் அறிய முடியாது சில உயிரியல் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்திருக்கக்கூடும், ஆனால் ஒன்பது லட்சம் வகைகளை காண்பது என்பது நிச்சயமாக அரிது. அது சாத்தியமில்லை. ஜலஜா நவ-லக்ஷாணி. ஸ்தாவரா லக்ஷ-விம்ஷதி.