TA/Prabhupada 0537 - ஏழைகளின் வழிப்பாடுகளை ஏற்கவும் கிருஷ்ணர் சித்தமாகவே இருக்கிறார்



Janmastami Lord Sri Krsna's Appearance Day Lecture -- London, August 21, 1973

சாஸ்திரத்தில் ஜனஸ்ய மோஹோ 'யம் அஹம் மமேதி என்று கூறப்படுகிறது (SB 5.5.8). இந்த "நான், எனது" என்ற தத்துவம் மருட்சி. இந்த மருட்சி என்றால் மாயா என்று பொருள். மாயா ... இந்த மாயா, மருட்சியிலிருந்து நீங்கள் வெளியேற விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரின் சூத்திரத்தை ஏற்க வேண்டும். மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே. வழிகாட்டலுக்காக பகவத்-கீதையில் எல்லாம் இருக்கிறது பகவத்-கீதை உண்மையுருவின் தத்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டால். எல்லாம் இருக்கிறது. அமைதி இருக்கிறது, செழிப்பு இருக்கிறது. எனவே அது ஒரு உண்மை. துரதிர்ஷ்டவசமாக, நாம் அதை ஏற்கவில்லை. அதுவே நமது துரதிர்ஷ்டம். அல்லது அதை தவறாகப் புரிந்துகொள்கிறோம். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், மன்- மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (BG 18.65). "நீங்கள் எப்போதும் என்னைப் பற்றி நினைக்கவும்" என்று கிருஷ்ணர் கூறுகிறார், மன்- மனா பவ மத் பக்தோ. "என் பக்தராகுங்கள்." மத் யாஜீ "நீங்கள் என்னையே வணங்குங்கள் ." மாம் நமஸ்கூரு. "மேலும் எனக்கு உங்கள் வணக்கத்தை சமர்ப்பிக்கவும்." இது மிகவும் கடினமான பணியா? இங்கே கிருஷ்ணரின் திருவுருவம் உள்ளது. ராதா-கிருஷ்ணா என்ற இந்த தெய்வத்தைப் பற்றி நீங்கள் நினைப்பது, அது மிகவும் கடினமா? மன்- மனா. நீங்கள் கோவிலுக்குள் வந்து, ஒரு பக்தராக, தெய்வத்திற்கு உங்கள் மரியாதையை செலுத்துங்கள், மன்- மனா பவ மத் பக்தோ. முடிந்தவரை தெய்வத்தை வணங்க முயற்சி செய்யுங்கள், பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி (BG 9.26). உங்கள் முழு சொத்தையும் கிருஷ்ணர் கேட்கவில்லை. கிருஷ்ணர் ஏழ்மையான மனிதர் கூட தன்னை வணங்குவதற்காக, தன் வழிபாட்டை எளிமையாக அமைத்துள்ளார். அவர் என்ன கேட்கிறார்? அவர் சொல்கிறார், பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி : "பக்தியுடன், ஒரு நபர் எனக்கு ஒரு சிறிய இலை வழங்கினால், ஒரு சிறிய பழம், கொஞ்சம் தண்ணீர், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். " கிருஷ்ணருக்கு பசி இல்லை, ஆனால் கிருஷ்ணர் உங்களை தனக்கு பக்தராக்க விரும்புகிறார். அதுதான் முக்கிய குறிகோள். யோ மே பக்த்யா பிரயச்சத்தி. அதுதான் முக்கிய கொள்கை. நீங்கள் கிருஷ்ணருக்கு சிறிய விஷயங்களை வழங்கினால் ... கிருஷ்ணருக்கு பசி இல்லை; கிருஷ்ணர் அனைவருக்கும் உணவு வழங்குகிறார். ஏகோ யோ பஹுநாம் விடதாதி காமான். ஆனால் கிருஷ்ணர் உங்கள் அன்பை, உங்கள் பக்தியை விரும்புகிறார். எனவே அவர் கொஞ்சம் கெஞ்சுகிறார் - பத்ரம் புஷ்பம் பலம் தோயம். மன்- மனா பவ மத் பக்தோ. கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதிலும், கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்வதிலும் சிரமம் இல்லை. ஆனால் நாம் அதை செய்ய மாட்டோம்; அது தான் நமது நோய். இல்லையெனில், அது ஒன்றும் கடினம் அல்ல. நாம் கிருஷ்ணரின் பக்தராக மாறியவுடன், முழு சூழ்நிலையையும் புரிந்துகொள்கிறோம். நமது தத்துவம், பாகவத தத்துவம், இதுவும் ஒரு வகை பொதுவுடைமை ஏனென்றால், கிருஷ்ணரை மிக உயர்ந்த தந்தையாக நாங்கள் கருதுகிறோம், மற்றும் அனைத்து உயிரினங்களும், கிருஷ்ணரின் மகன்கள்.

எனவே கிருஷ்ணர் தான் எல்லா கிரகங்களுக்கும் உரிமையாளர் என்று கூறுகிறார், ஸர்வ லோக மஹேஸ்வரம் (ப கீ 5.29). எனவே எது இருந்தாலும், வானத்தில் அல்லது தண்ணீரில் அல்லது நிலத்தில், அவை அனைத்தும் கிருஷ்ணரின் சொத்து. நாம் அனைவரும் கிருஷ்ணரின் மகன்கள் என்பதால், நாம் ஒவ்வொருவரும் தந்தையின் சொத்தைப் பயன்படுத்த உரிமை உண்டு. ஆனால் நாம் மற்றவர்களை ஆக்கிரமிக்கக்கூடாது. இது அமைதியின் சூத்திரம். மா கிருத கஸ்ய சுவிதனம் ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் (ISO 1). எல்லாம் கடவுளுக்கு சொந்தமானது. நீங்கள் கடவுளின் மகன்கள். தந்தையின் சொத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கு கிடைத்துள்ளது, ஆனால் உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது தண்டனைக்குரியது. இந்த விஷயங்கள் ஸ்ரீமத்-பாகவதத்தில் கூறப்பட்டுள்ளன. ஸ்டேன ஏவ ஸ உச்யதே (BG 3.12), என்று பகவத் கீதையில், "அவர் ஒரு திருடன்." யாராவது தனக்குத் தேவையானதை விட அதிகமாக எடுத்துக் கொண்டால், அவன் ஒரு திருடன். யஞனார்தாத் கர்மனோ ஞயத்ர லோகோ யம் கர்ம பந்தனாஹ் (BG 3.9). கிருஷ்ணரின் திருப்திக்காக இருந்தால் ... யஜ்ஞ என்றால் கிருஷ்ணர். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் யஜ்னேஸ்வர. எனவே நீங்கள் கிருஷ்ணருக்காக செயல்படுகிறீர்கள், நீங்கள் கிருஷ்ணரின் பிரசாதத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். அது, நாம் இங்கே கற்பிக்கிறோம். இந்த கோவிலில், நாங்கள் வசிக்கிறோம் அமெரிக்கர்கள், இந்தியர்கள், ஆங்கிலேயர்கள், கனடியர்கள், ஆப்பிரிக்கர்கள், உலகின் பல்வேறு பகுதிகள். உங்களுக்கு அது தெரியும். இந்த கோவிலில் மட்டுமல்ல, உலகம் முழுவதும். ( இடைவேளி )

கிருஷ்ணர் உன்னத அனுபவிப்பாளர், கிருஷ்ணர் அனைவருக்கும் மிக உயர்ந்த நண்பர். இதை மறக்கும் போது, நாம் இந்த பௌதிக உலகத்திற்கு வருகிறோம் வாழ்வுக்காகப் போராட்டம், ஒருவருக்கொருவர் போராட்டம். இது பௌதிக வாழ்க்கை. எனவே நீங்கள் பெற முடியாது ... அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், தத்துவவாதிகள், அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தார்கள், ஆனால் உண்மையில் எதுவும் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகளைப் போல. இது இரண்டாவது பெரிய போருக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டது, எல்லாவற்றையும் சமாதானமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. சண்டை நடக்கிறது, பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில், வியட்நாமுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இதுவும் அதுவும். இது செயல்முறை அல்ல. கிருஷ்ண உணர்வே செயல்முறை. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் உரிமையாளர் அல்ல. உரிமையாளர் கிருஷ்ணர். அது ஒரு உண்மை. அமெரிக்காவைப் போலவே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்கள், ஐரோப்பிய குடியேறியவர்கள், அவர்கள் உரிமையாளர் அல்ல - யாரோ உரிமையாளர். அவர்களுக்கு முன், யாரோ உரிமையாளர் அல்லது அது காலியாக இருந்த நிலம். உண்மையான உரிமையாளர் கிருஷ்ணர். ஆனால் செயற்கையாக நீங்கள் "இது எனது சொத்து" என்று கூறுகிறீர்கள். ஜனஸ்ய மொஹொ அயம் அஹம் மமேதி (ஸ்ரீ பா 5.5.8). இது மாயா என்று அழைக்கப்படுகிறது.