TA/Prabhupada 0580 - கடவுளின் அனுமதியின்றி நமது தேவைகளை நிறைவுபடுத்த இயலாது



Lecture on BG 2.21-22 -- London, August 26, 1973

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்ட: நான் அனைவரின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். கடவுளைக் கண்டுபிடியுங்கள், கிருஷ்ணரை கண்டுபிடியுங்கள். பல இடங்களில், அனைத்து வேத இலக்கியங்களும், குஹாயாம். குஹாயாம் என்றால் இதயத்தில். ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம் அபோஹனம் ச: (பகவத் கீதை 15.15) பரம வழிகாட்டியான கிருஷ்ணர் அங்கே அமர்ந்திருக்கிறார், அவர் வழிகாட்டுகிறார், இப்போது இந்த உயிர்வாழி தனது விருப்பத்தை இந்த வழியில் நிறைவேற்ற விரும்புகிறது. அவர் ஜட இயற்க்கைக்கு வழிகாட்டுகிறார். "இப்போது, ​​இந்த அயோக்கியனுக்கு இந்த உடல் எனும் வாகனத்தைத் தயார்படுத்து. அவர் அனுபவிக்க விரும்புகிறார். சரி, அவர் அனுபவிக்கட்டும்." இதுதான் தொடர்ந்து நடக்கிறது. நாம் எல்லோரும் அயோக்கியர்கள், நாம் நம் வெவ்வேறு வாழ்க்கை முறைகளை உருவாக்கிக் கொள்கிறோம். "நான் நினைக்கிறேன்." எனவே நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் நினைத்தவுடன்... ஆனால் கடவுளின் அனுமதியின்றி நம் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால் நாம் விடாப்படியாயிருப்பதால், "நான் என் விருப்பத்தை இந்த வழியில் நிறைவேற்ற விரும்புகிறேன்," "சரி" என்று கிருஷ்ணர் அனுமதிக்கிறார். ஒரு குழந்தை எதற்காவது விடாப்படியாயிருப்பது போல. தந்தை, "சரி, எடுத்துக்கொள்" என்று கொடுக்கிறார். ஆகவே, இந்த உடல்கள் அனைத்தும் நாம் பெறுகிறோம், இருப்பினும் பரம இறைவனின் அனுமதியால், ஆனால் "இந்த அயோக்கியன் ஏன் இப்படி விரும்புகிறார்?" என்று அவர் பிரியம் இல்லாமல் அனுமதிக்கிறார். இதுதான் நமது நிலைப்பாடு. ஆகையால், கடைசியாகக் கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய (பகவத் கீதை 18.66) "இந்த அயோக்கியத்தனத்தை விட்டுவிடுங்கள், 'எனக்கு அந்த உடல் வேண்டும், எனக்கு இந்த உடல் வேண்டும், வாழ்க்கையை இந்த வழியில் அனுபவிக்க விரும்புகிறேன்' என்ற இந்த முட்டாள்தனத்தை விட்டுவிடுங்கள்." எனவே இங்கே வேத இலக்கியங்களில்

பரமாத்மா மற்றும் ஆத்மா இரண்டையும் காணலாம். அவை இதயத்தில் அமைந்துள்ளன. ஜீவன் என்ற உயிரினம் விரும்புகிறது, எஜமானர் அனுமதிக்கிறார். மற்றும் பிரக்ருதி அல்லது ஜட இயற்கை உடலைக் தருகிறது. "இதோ உடல், தயார், ஐயா. இங்கே வா." நம்முடைய விருப்பமே நாம் ஜட வாழ்க்கையில் சிக்கிக் கொள்வதற்கும் அல்லது முக்தி பெறுவதற்கும் உண்மையான காரணமாகும். நாம் விரும்புவதைப் போல. நீங்கள் விரும்பினால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுபட விரும்பினால், அது தயாராக உள்ளது. இந்த உடல் மாற்றத்தை நீங்கள் தொடர விரும்பினால், வாஸாம்ஸி ஜீர்ணானி... ஏனெனில் இந்த ஜட உடலில் நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. இந்த ஜட உடலுடன் இந்த ஜட உலகத்தை நீங்கள் அனுபவிக்க முடியும். நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், நீங்கள் ஆன்மீக உடலில் அனுபவிக்க வேண்டும். ஆனால் ஆன்மீக வாழ்க்கை, ஆன்மீக இன்பம்பற்றிய எந்தத் தகவலும் நம்மிடம் இல்லை என்பதால், நாம் வெறுமனே இந்த உலகத்தை அனுபவிக்க விரும்புகிறோம். புன: புனஷ் சர்வித-சர்வணானாம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30), மெல்லப்பட்டதையே மெல்லுதல். பாலியல் உறவு, ஆணும் பெண்ணும் வீட்டில் அனுபவிக்கிறார்கள். அதே விஷயம் மீண்டும், நிர்வாண நடனத்திற்கு செல்லுதல். விஷயம் இங்கே ஒன்றுதான், பாலியல் உறவு, இங்கே அல்லது அங்கே. ஆனால், "நாம் திரையரங்கம் சென்றால் அல்லது நிர்வாண நடனம் ஆடினால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்" என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனேவே இது புன: புனஷ் சர்வித-சர்வணானாம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30) என்று கூறப்படுகிறது, மெல்லப்பட்டதையே மெல்லுதல். வீட்டில் பாலியல் வாழ்க்கை, மெல்லுதல், மற்றும் நிர்வாண கிளப்புக்குச் சென்று, மெல்லுதல். மெல்லப்பட்டதையே மெல்லுதல். இதில் இன்பம் இல்லை. மகிழ்ச்சி இல்லை, இன்பம் இல்லை; எனவே அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். ஏனென்றால் விஷயம் ஒன்றுதான். நீங்கள் ஒரு கரும்பை மென்று சாறு வெளியே எடுப்பது போல. மீண்டும் நீங்கள் மென்றால், உங்களுக்கு என்ன கிடைக்கும்? ஆனால் அவர்கள் மிகவும் மந்தமானவர்கள், அயோக்கியர்கள், அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஏற்கனவே அனுபவித்த இன்பம், ஏற்கனவே ருசிக்கப்பட்ட இன்பத்தைப் பெற முயற்சிக்கிறார்கள். புன: புனஷ் சர்வித-சர்வணானாம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30), அதாந்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம் புன: புனஷ் சர்வித-சர்வணானாம். ஒரு மனிதர் ... நீங்கள் அதைக் கவனித்திருப்பீர்கள் நாய்கள். பாலியல் உறவு கொண்டிருக்கும்போது அவைகளுக்கு வெட்கம் இல்லை. எனவே, பல காமுகர்கள் அங்கே நின்று பார்க்கிறார்கள். நானும் இப்படி தெருவில் அனுபவிக்க முடிந்தால்" என்று அவர்கள் சிந்திக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அது போல நடந்துகொள்கிறார்கள். இதுதான் நடக்கிறது. புன: புனஷ் சர்வித-சர்வணானாம். (ஸ்ரீமத் பாகவதம் 7.5.30)