TA/Prabhupada 0581 - நீ கிருஷ்ண சேவையில் ஈடுபடும்போது, ஒருவித ஊக்குவிப்பை உணர்வாய்



Lecture on BG 2.21-22 -- London, August 26, 1973

யன் மைதுநாதி க்ருஹமேதி ஸுகம் ஹி துச்சம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.45). எனவே இந்த ஜட வாழ்க்கை என்பது பாலியல் வாழ்க்கை என்று பொருள். மிக மிக அருவருப்பானது - துச்சம். இதை யாராவது புரிந்து கொண்டால், அவர் முக்தி பெற்றவராகிறார். ஆனால், ஒருவர் இன்னும் ஈர்க்கப்படும்போது, ​​விடுதலையில் இன்னும் தாமதம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்துகொண்டு அதை விட்டுவிட்ட ஒருவர், இந்த உடலில் இருக்கும் போதே முக்தி பெற்றவராகிறார். அவர் ஜீவன்-முக்த: ஸ உச்யதேஎன்று அழைக்கப்படுகிறார்.

ஈஹா யஸ்ய ஹரேர் தாஸ்யே
கர்மணா மனஸா கிரா
நிகிலாஸ்வப்யவஸ்தாஸு
ஜீவன்-முக்த: ஸ உச்யதே என

வே இந்த ஆசையிலிருந்து நாம் எவ்வாறு விடுபட முடியும்? ஈஹா யஸ்ய ஹரேர் தாஸ்யே நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினால், நீங்கள் விடுபடலாம். இல்லையெனில், இல்லை. அது சாத்தியமில்லை. கடவுள் சேவையைத் தவிர வேறு எதையும் நீங்கள் விரும்பினால், அப்பொழுது மாயா உங்களுக்குத் தூண்டுதலைக் கொடுக்கும் "இதை ஏன் அனுபவிக்கக் கூடாது?" எனவே யமுனாச்சார்யார் கூறுகிறார்,

யத்-அவதி மம சேத: க்ருஷ்ண-பதாரவிந்தே
நவ-நவ-ரஸ-தாமன்யுத்யதம் ரந்தும் ஆஸீத்
தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே
பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச

"யத்-அவதி, காலத்திலிருந்தே, மம சித, நான் என் வாழ்க்கையையும், ஆன்மாவையும், என் உணர்வையும், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களின் சேவையில் ஈடுபடுத்தியுள்ளேன். இந்த வசனத்தை யாமுனாசார்யர் வழங்கியுள்ளார். அவர் ஒரு பெரிய மன்னர், மன்னர்கள் பொதுவாக யாருக்கும் கீழ்படியாதவர்கள். ஆனால் அவர் பின்னர் ஒரு உயர்ந்த பக்தராக ஆனார். எனவே அவர் அவரது அனுபவத்தில் கூறுகிறார், "நான் கிருஷ்ணரின் தாமரை பாதங்களின் சேவையில் என் மனதை ஈடுபடுத்தியுள்ளேன். யத்-அவதி மம சேத கிருஷ்ணா-பதாரவிந்தே நவ-நவ சேவை, ஆன்மீக சேவை என்பது ஒவ்வொரு கணமும் புதியது. இது ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாது. ஆன்மீக ரீதியில் உணர்ந்தவர்களுக்கு அவர்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்வது என்பது புதிய அறிவொளிக்கு வழிவகுக்கும். நவ-நவ-ரச-தாமனி உத்யதம் ரன்தம் ஆசித் இங்கே, இந்த ஜட உலகில், நீங்கள் அனுபவிக்கிறீர்கள், அது சலிப்பை ஏற்படுத்தும். புன புனஸ் சர்வித(SB 7.5.30); எனவே நீங்கள் ஏமாற்றமடைகிறீர்கள். ஆனால் நீங்கள் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்டால், புதிய, புதிய ஊக்கத்தை நீங்கள் காண்பீர்கள். அதுதான் ஆன்மீகம். நீங்கள் அதைச் சலிப்பாக உணர்ந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, நீங்கள் இன்னும் ஆன்மீக ரீதியில்ச் சேவை செய்யவில்லை, நீங்கள் பௌதீக ரீதியாகச் சேவை செய்கிறீர்கள். சம்பிரதாயத்திற்காக ஒரே மாதிரியாகச் செய்யப்படும். ஆனால் புதிய, புதிய ஆற்றலை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஆன்மீக ரீதியில் சேவை செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுதான் சோதனை. உங்கள் உற்சாகம் அதிகரிக்கும், குறையாது.