TA/Prabhupada 0582 - கிருஷ்ணர் இதயத்தின் உள்ளே அமர்ந்துள்ளார்



Lecture on BG 2.21-22 -- London, August 26, 1973

எனவே சோதனை நம் கையில் உள்ளது மங்கள-ஆரத்தியின் போது நாம் சோம்பலை உணர்ந்தால், நாம் இன்னும் ஆன்மீக ரீதியில் முன்னேறவில்லை என்று அர்த்தம். ஒருவர் உற்சாகமாக உணர்ந்தால், "இப்போது மங்கள-ஆரத்தியின் நேரம் வந்துவிட்டது, நான் எழுந்து நிற்க வேண்டும், இதைச் செய்ய வேண்டும்," அது ஆன்மீகம். யார் வேண்டுமானாலும் சோதிக்கலாம். பக்தி: பரேஷானுபவோ விரக்திர் அன்யத்ர ஸ்யாத் (ஸ்ரீமத் பாகவதம் 11.2.42). பக்தி என்றால் ஆன்மீகம் என்று பொருள். ஆகவே, நீங்கள் பரமாத்மாவுடன் தொடர்பு கொண்டவுடன், விரக்திர் அன்யத்ர ஸ்யாத், இந்தப் பௌதீக உலகில் இனி இன்பம் இருக்காது. எனவே, கிருஷ்ணர் உள்ளார். கிருஷ்ணர் இதயத்திற்குள்ளும் அமர்ந்திருக்கிறார். ஒரே வசிப்பிடத்தில் இரண்டு நண்பர்களைப் போலவே நானும் இதயத்திற்குள் அமர்ந்திருக்கிறேன். இது உபனிஷத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்ன: அவர்கள் ஒரே மட்டத்தில், சமமாக, அமர்ந்திருக்கிறார்கள். நிமக்ன: பறவை மரத்தின் பழத்தைச் சாப்பிடுகிறது, அல்லது ஜீவாத்மா, ஒரு உயிர்வாழி, அவர் தனது பலனளிக்கும் செயலைச் செய்கிறார். க்ஷேத்ர-ஜ்ஞ இவை அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன. க்ஷேத்ர-ஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ-க்ஷேத்ரேஷு பாரத (பகவத் கீதை 13.3) உரிமையாளர் மற்றும் ஆக்கிரமிப்பாளர். நான் இந்த உடலின் ஆக்கிரமிப்பாளர், இதன் உரிமையாளர் கிருஷ்ணர். எனவே, கிருஷ்ணரின் மற்றொரு பெயர் ரிஷிகேஷா. ரிஷிகேஷா. எனவே அவர்தான் உண்மையில் என் கை, கால் மற்றும் கண்களின் உரிமையாளர். அனைத்திற்கும், என் எல்லா புலன்களுக்கும். நான் வெறுமனே ஆக்கிரமிப்பவன். நான் உரிமையாளர் அல்ல. ஆனால் அதை நாம் மறந்துவிட்டோம். நீங்கள் ஒரு வாடகை குடியிருப்பில் இருப்பதைப் போல, நீங்கள் ஆக்கிரமிப்பாளராக இருக்கிறீர்கள் அறையை ஆக்கிரமிக்க உங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் உரிமையாளர் அல்ல. ஆனால் நீங்கள் உரிமையாளர் என்று நீங்கள் நினைத்தால், அதாவது ஸ்தேன ஏவ ஸ உச்யதே (பகவத் கீதை 3.12) உடனடியாக அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். எனவே இதை எடுத்துக் கொள்ளுங்கள், இந்த உடல் அல்லது நாடு அல்லது தேசம் அல்லது உலகம், அல்லது பிரபஞ்சம், எதுவும் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. உரிமையாளர் கிருஷ்ணரே. உரிமையாளர் ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (பகவத் கீதை 5.29) "நான் உரிமையாளர்" என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே தவறு என்னவென்றால், உரிமையாளரை நமக்குத் தெரியாது, நாம் நாம் ஆக்கிரமித்திருந்தாலும், நமது ஆக்கிரமிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்துகிறோம் அதுதான் கட்டுண்ட நிலை. முறையற்றது. மற்றபடி, வழிகாட்டுதல் இருக்கிறது, வழிகாட்டுபவர் அமர்ந்திருக்கிறார். அவர் எப்போதும் உங்களுக்கு உதவுகிறார். ஆனால் நோய் என்னவென்றால், நாம் உரிமையாளர் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். என் விருப்பப்படி செயல்பட விரும்புகிறேன், அதுதான் கட்டுண்ட நிலை. எனது பணி உரிமையாளருக்காக வேலை செய்வதே. எனக்காக அல்ல. எனவே, அதுதான் என் நிலைப்பாடு. கிருஷ்ணர் என்னை உருவாக்கி இருக்கிறார், உருவாகவில்லை. ஆனால் கிருஷ்ணருடன் நாம் அனைவரும் இருக்கிறோம். ஆனால் நாம் நித்திய சேவகர்கள். இந்த உடலுடன் சேர்ந்து, விரலும் பிறக்கிறது. விரல் வித்தியாசமாகப் பிறக்கவில்லை. நான் பிறந்தபோது, ​​என் விரல்கள் பிறந்தன. அதேபோல், கிருஷ்ணர் இருந்தபோது, ​​ கிருஷ்ணர் ஒருபோதும் பிறக்கவில்லை. அப்பொழுது நாமும் ஒருபோதும் பிறக்கவில்லை. ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20). மிகவும் எளிமையான தத்துவம். ஏனென்றால் நாம் கிருஷ்ணரின் ஒரு பகுதி. கிருஷ்ணர் பிறந்தார் என்றால் நானும் பிறந்தேன். கிருஷ்ணர் பிறக்கவில்லை என்றால், நானும் பிறக்கவில்லை. கிருஷ்ணர் அஜ, எனவே நாமும் அஜ. அஜம் அவ்யயம் கிருஷ்ணர் அழியாதவர். மாறாதவர். நாமும் மாறாதவர்கள், ஏனென்றால் நாம் கடவுளின் ஒரு பகுதி. எனவே பகுதிகள் ஏன் உள்ளன? என் கை ஏன் இருக்கிறது? ஏனென்றால் எனக்கு அது தேவைப்படுகிறது எனக்கு என் கையின் உதவி தேவை, என் விரலின் உதவி தேவை. இது அவசியம். அயோக்கியர்கள் கூறுகின்றனர்,"கடவுள் ஏன் நம்மைப் படைத்தார்?" அயோக்கியர்கள், அது அவசியம். அவர் கடவுள் என்பதால், அவர் உங்கள் சேவையை விரும்புகிறார். பெரிய மனிதனைப் போலவே, அவர் பல சேவகர்களை வைத்திருக்கிறார். சில அயோக்கியர்கள் கேட்கின்றனர், "நீங்கள் ஏன் நிறைய சேவகர்களை வைத்திருக்கிறீர்கள்?" மேலும் "நான் பெரிய மனிதர் என்பதால், எனக்கு வேண்டும்!" எளிய தத்துவம். இதேபோல், கடவுள் தான் உயர்ந்த அதிகாரி என்றால், அவருக்குப் பல சேவகர்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், அவர் எவ்வாறு நிர்வகிப்பார்?