TA/Prabhupada 0583 - பகவத்கீதையில் அனைத்தும் உள்ளது



Lecture on BG 2.21-22 -- London, August 26, 1973

ஆகவே, பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் சேவகர்களால் நிர்வகிக்கப்படுகிறது, மிகச் சக்திவாய்ந்த சேவகரான பிரம்மாவின் கூற்றுப்படி. தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய: (ஸ்ரீமத் பாகவதம்1.1.1) பிரம்மாவின் இதயத்திலும் தேனே ப்ரஹ்ம ஹ்ருதா, ஹ்ருதா, மீண்டும் ஹ்ருதா. ஏனெனில் பிரம்மா தனியாக இருந்தார், எனவே என்ன செய்வது? பிரம்மா குழப்பமடைந்தார். ஆனால் கிருஷ்ணர், "நீங்கள் செய்யுங்கள், இந்தப் பிரபஞ்சத்தை இது போன்று உருவாக்குங்கள்" என்று அறிவுறுத்தினார். புத்தி-யோகம் ததாமி தம், "நான் அறிவை தருகிறேன்." எனவே எல்லாம் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது, கிருஷ்ணர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் கடவுளின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பினால், கிருஷ்ணர் உங்களுக்கு எல்லா அறிவுறுத்தல்களையும் கொடுக்கத் தயாராக உள்ளார். "ஆம், யேன மாம் உபயாந்தி தே." அவர் அறிவுறுத்துகிறார், "ஆம், நீங்கள் இவ்வாறு செய்யுங்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய இந்தப் பௌதீக பந்தத்தை முடிப்பீர்கள், இந்த உடலை விட்டுவிட்ட பிறகு, நீங்கள் என்னிடம் வருவீர்கள். " ஆனால் நீங்கள் இந்தப் பௌதீக இருப்பை தொடர விரும்பினால், பின்னர் வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (பகவத் கீதை 2.22) நீங்கள் ஒரு உடலை ஏற்க வேண்டும்; மேலும் இதைப் பயன்படுத்த முடியாதபோது, நீங்கள் இந்த உடலை விட்டுவிட்டு மற்றொரு உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் பௌதீக இருப்பின் தொடர்ச்சியாகும். ஆனால் நீங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், இந்த வகையான தொழிலால் நீங்கள் உண்மையில் வெறுப்படைந்தால், பூத்வா பூத்வா ப்ரலீயதே (பகவத் கீதை 8.19)ஒரு முறை பிறப்பது, மீண்டும் இறப்பது, மீண்டும் பிறப்பது. ஆனால் நாம் மிகவும் வெட்கமற்றவர்களாகவும், குப்பைகளாகவும் இருக்கிறோம், இவை காரணமாக நாம் இந்தத் தொழிலின் மீது வெறுப்பு அடைவதில்லை. நாம் தொடர விரும்புகிறோம், எனவே கிருஷ்ணரும் தயாராக இருக்கிறார்: "சரி, நீங்கள் தொடருங்கள்." அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, 'யந்த்ராரூடானி மாயயா.' ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ-பூதானி யந்த்ராரூடானி மாயயா (பகவத் கீதை 18.61) மிகவும் தெளிவாக உள்ளது. உங்கள் விருப்பத்தைக் கிருஷ்ணர் அறிவார். இந்தப் பௌதீக உலகத்தை நீங்கள் இன்னும் அனுபவிக்க விரும்பினால், "சரி, அனுபவியுங்கள்." எனவே பல்வேறு வகையான இன்பங்களை அனுபவிக்க, நமக்குப் பல்வேறு வகையான கருவிகள் தேவை. எனவே கிருஷ்ணர் உங்களைத் தயார் செய்கிறார், கருணையோடு, "சரி." தந்தை ஒரு பொம்மை கொடுத்தால், குழந்தை ஒரு மோட்டார் காரைக் கேட்பது போல. "சரி, ஒரு பொம்மை மோட்டார் காரை எடுத்துக்கொள்." அவர் ஒரு இயந்திரத்தை விரும்புகிறார், அவர் ஒரு ரயில்வே அதிகாரியாக மாற விரும்புகிறார். இப்போது இந்த வகையான பொம்மைகள் உள்ளன. இதேபோல் கிருஷ்ணர் இந்தப் பொம்மை உடல்களை வழங்குகிறார். யந்த்ரா, யந்த்ரா என்றால் இயந்திரம். இது ஒரு இயந்திரம். இது ஒரு இயந்திரம் என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இயந்திரத்தை வழங்கியவர் யார்? இயந்திரம் இயற்கையால் வழங்கப்படுகிறது, ஜடப் பொருள்கள், ஆனால் அது கிருஷ்ணரின் உத்தரவின் கீழ் தயாரிக்கப்படுகிறது. மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம் (பகவத் கீதை 9.10) "ப்ரக்ருதி꞉ இயற்கை இவை அனைத்தையும் என் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கிறது." ஆகையால் கிருஷ்ண உணர்வைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம்? எல்லாம் பகவத்-கீதையில் உள்ளது. நீங்கள் சிரத்தையுடன் படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்தால், நீங்கள் எப்போதும் கிருஷ்ண உணர்வில் இருப்பீர்கள். எல்லாம் அதில் இருக்கிறது. எனது நிலை என்ன, நான் எப்படி வேலை செய்கிறேன், நான் எப்படி இறந்து கொண்டிருக்கிறேன், நான் எப்படி உடல் பெறுகிறேன், நான் எப்படி அலைந்து கொண்டிருக்கிறேன். எல்லா விவரமும் இங்கே இருக்கிறது. வெறுமனே ஒருவர் கொஞ்சம் புத்திசாலியாக மாற வேண்டும். ஆனால் நாம் முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் இருக்கிறோம், ஏனென்றால் நாம் அயோக்கியர்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்த அயோக்கிய தத்துவவாதிகள், மதவாதிகள், அவதாரம், பகவான், சுவாமி, யோகிகள் மற்றும் கர்மிகள். எனவே நாம் அயோக்கியர்கள் ஆகிவிட்டோம். ஸத்-ஸங்க சாடி கைனு அஸதே விலாஸ. எனவே நரோத்தம தாச தாகுரா வருந்துகிறார். "நான் பக்தர்களின் தொடர்பை விட்டுவிட்டேன். நான் வெறுமனே இந்த அயோக்கியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன்."அஸத், அஸத்-ஸங்க. தே காரணே லாகிலே மோர கர்ம-பந்த-பாங்ஸ: "ஆகையால், நான் இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்கிக்கொண்டேன்." தே காரணே. "எனவே இதை விட்டுவிடுங்கள்." சாணக்யா பண்டிதரும் கூறுகிறார், த்யஜ துர்ஜன-ஸம்ஸர்கம், "இந்த அயோக்கியர்களின் சங்கத்தை விட்டுவிடுங்கள்." பஜ ஸாது-ஸமாகமம், "பக்தர்களுடன் மட்டும் சங்கம் கொள்ளுங்கள்." இதுதான் சரியானதாக இருக்கும். நாங்கள் வெவ்வேறு மையங்களை நிறுவுகிறோம். புலனின்பத்திற்காக அல்ல, ஆனால் பக்தர்களின் நல்ல சங்கத்திற்காக. இதை நாம் தவறவிட்டால், இங்குப் பணிபுரிபவர்கள், இந்த நிறுவனத்தின் மேலாளர்கள், இந்த நிறுவனத்தையோ அல்லது இந்த இயக்கத்தையோ நாம் விபச்சார விடுதியாக மாற்ற முடியாது என்பதை அவர்கள் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். முன்னேற்றத்திற்கான நல்ல சங்கம் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். அத்தகைய நிர்வாகம் அல்லது அத்தகைய ஏற்பாடு இருக்க வேண்டும். அதுதான் தேவை. மிக்க நன்றி. (முடிவு)