TA/Prabhupada 0584 - நாம் அனைவரும் சுதா, கீழே விழக்கூடியவர்கள் - கிருஷ்ணரோ அச்சுதா



Lecture on BG 2.20 -- Hyderabad, November 25, 1972

எனவே ஆத்மாவை கொல்ல முடியாது ந ஹன்யேதே ஹன்யமானே சரீரே. மேலும் ஆத்மாவுக்கு பிறப்பும் இல்லை, மரணமும் இல்லை கிருஷ்ணர் நித்தியமானவர் என்பதால், கிருஷ்ணருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லை அஜ பி சன் அவ்யயாத்மா. நான்காவது அத்தியாயத்தில் கூறுகிறார் கிருஷ்ணர் அஜ. கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அஜ. அல்லது விஷ்ணு தத்வம். அஜ. நாமும் அஜ. அஜ என்றால் பிறப்பற்றவர். எனவே கிருஷ்ணர்- கடவுள் மற்றும் உயிர்வாழிகள் இரண்டும் நித்தியமானவை. நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ( கத உபநிஷத் 2.2.13) ஒரே வித்தியாசம் என்னவென்றால், நாம் ஒரு சிறிய துகள் எனவே நாம் ஜட சக்தியால் மூடப்பட்டிருக்கிறோம். இதுதான் வித்தியாசம் நாம் வீழ்ந்தவர்களாகிறோம் ச்யுத, ஆனால் கிருஷ்ணர் அச்சுதர். அவர் ஒருபோதும் வீழ்ச்சியடைவதில்லை. அதுதான் வித்தியாசம். மேகம் போல - சூரிய ஒளியின் ஒரு பகுதியை மேகத்தால் மறைக்க முடியும் எல்லா சூரிய ஒளியையும் மேகங்கள்மறைக்க முடியாது. அது சாத்தியமில்லை. இப்போது இந்த வானம் மேகத்தால் மூடப்பட்டிருக்கும் என்று வைத்துக்கொள்வோம், ஒருவேளை நூறு மைல், இருநூறு மைல் அல்லது ஐநூறு மைல். ஆனால் ஐநூறு மைல் என்பது, கோடி கோடி கணக்கான மைல் பெரிதான சூரியனுடன் ஒப்பிடும்போது, பெரிதா என்ன? எனவே மேகம் சூரியனை அல்ல, நம் கண்களை மூடுகிறது இதேபோல், மாயை ஜீவன்களின் கண்களை மறைக்க முடியும் மாடை பரமாத்மாவை மறைப்பதில்லை. அது சாத்தியம் இல்லை எனவே இந்த பெயரளவிலான பிறப்பு மற்றும் இறப்பு , மாயை யினால் மறைக்கப்படுவதன் காரணமாக ஏற்படுகிறது. நடுநிலை சக்தி நாம் … கிருஷ்ணருக்கு பல சக்திகள் உள்ளன. பராஸ்யா சக்திர் விவிதைவ ஸ்ரூயதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 13.65, பொருளுரை). அதுவே வேதங்களின் போதனை. பரம சத்தியம் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நாம் எதைப் பார்த்தாலும்... பரஸ்ய ப்3ரஹ்மன ஷ2க்திஸ் ததே2டம் அகி2லம் ஜக3த் நாம் எதைப் பார்த்தாலும், அது வெறுமனே உன்னத சக்தியின் விநியோகம்தான். சூரிய ஒளி மற்றும் சூரிய கோளம், மற்றும் சூரிய-கடவுள். அவற்றைப் போல். சூரியக் கடவுள், அவரிடமிருந்து ... சூரியக் கடவுள் மட்டுமல்ல, பிற ஜீவன்களும்கூட. அவர்களின் உடல் ஒளிர்கிறது. அவர்களுக்கு நெருப்பு உமிழும் உடல் கிடைத்துள்ளது. நமக்கு பூமிக்குரிய உடல் கிடைத்திருப்பதைப் போல்....... இந்த கிரகத்தில் மண் முக்கியமானது இதேபோல், சூரிய கிரகத்தில், தீ முக்கியமானது பூமி ஐந்து பூதங்களில் ஒன்றாகும் அது போல, நெருப்பு ஐந்து பூதங்களில் ஒன்றாகும் ஆன்மா ஒருபோதும் நெருப்பால் எரிக்கப்படுவதில்லை என்று இந்த விஷயங்கள் விளக்கப்படும்.