TA/Prabhupada 0631 - நான் நிரந்தரமானவன் - உடம்பு நிரந்தரமானது அல்ல - இதுவே உண்மை
Lecture on BG 2.28 -- London, August 30, 1973
இது சம்மந்தமாக ஒரு கருத்து யாதெனில் இரவில் நான் கனவு காணும் பொழுது இந்த உடலை மறந்துவிடுகிறேன். கனவில், இந்த உடல், நான் வேறு இடத்திற்கு சென்றிருப்பதை பார்க்கின்றேன், வேறு மனிதர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், மேலும் என்னுடைய நிலை வேறுபட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு ஞாபகமில்லை அதாவது உண்மையிலேயே என் உடல் இல்லத்தில் படுக்கையில் உள்ளது என்று. ஆனால் இந்த உடல் நினைவில் இருப்பது இல்லை. இது அனைவருக்கும் உள்ள அனுபவம். அதேபோல், நீங்கள் மறுபடியும் விழித்த நிலைக்கு வரும் போது, காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன், கனவில் நான் உருவாக்கிய அனைத்து உடலையும் மறந்துவிடுகிறேன். ஆக எது சரியானது? இது சரியானதா? இந்த உடல் சரியானதா, அல்லது அந்த உடல் சரியானதா? ஏனென்றால் இரவில் நான் இந்த உடலை மறந்துவிடுகிறேன், மேலும் பகலில் நான் கனவில் கண்ட அந்த உடலை மறந்துவிடுகிறேன். ஆக இரண்டுமே சரியானதல்ல. அது வெறும் பிரமை. ஆனால் நான் சொல்வது சரியே ஏனென்றால் நான் இரவில் பார்க்கின்றேன், பகலில் பார்க்கின்றேன். ஆகையால் நான் நித்தியமாவேன், இந்த உடல் நித்தியமானதல்ல. இதுதான் உண்மை. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண: (ப.கீ. 2.18). ஷரீரிண: , உடலின் சொந்தக்காரர், நித்தியமானவர், ஆனால் உடல் அல்ல. பல வழிகளில், கிருஷ்ணர் இந்த பௌதீக உடலின் நிலைப்பாட்டை பற்றி விவரித்துள்ளார். ஆனால் சிறந்த புத்திசாலிகளாக இல்லாதவர்கள், குறைந்த அறிவுத் திறன் உள்ளவர்கள், புரிந்துக் கொள்வதற்கு சிரமப்படுகிறார்கள். இல்லையெனில், விஷயங்கள் மிக தெளிவாக உள்ளது. இந்த பகுதி மிக தெளிவாக உள்ளது. அதாவது இரவில் நான் இந்த உடலை மறந்துவிடுகிறேன், மேலும் பகலில் இரவில் கண்ட உடலை மறந்துவிடுகிறேன. இது உண்மையே. அதேபோல், என்னுடைய முன்ஜென்மத்து உடலை நான் மறக்கலாம், கடைசியாக நீடித்த வாழ்க்கை, அல்லது என் அடுத்த ஜென்மத்து உடலைப் பற்றி தெரிந்திருக்காது. ஆனால் நான் இருப்பேன், இந்த உடல் மாற்றமடையலாம், ஆனால் நான் தற்காலிகமான மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நான், நான் வாழ்ந்துக் கொண்டிருப்பதால், எனக்கு ஒரு உடல் உள்ளது என்று பொருள்படும். அதுதான் ஆன்மிக உடல்.
ஆகையால் ஆன்மிக உடல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மேலும் ஆன்மிக முன்னேற்றம் என்றால், முதலில் என்னைப்பற்றிய ஆன்மிக அடையாளத்தை தெரிந்துக் கொள்வது. ஸநாதன கோஸ்வாமி மந்திரி பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் சென்றது போல். முதலில் அவர் கூறியதாவது, கே ஆமி, கேனே ஆமாயா ஜாரே தாப-த்ரய: "உண்மையிலேயே, நான் யார் என்பது எனக்கு தெரியாது, மேலும் நான் ஏன் இந்த கவலைக்குரிய நிலையிலான வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்." ஆகையினால் வாழ்க்கையின் கவலைக்குரிய நிலை இந்த உடலே. ஏனென்றால் எனக்கு கனவிலும் வருகிறது. எனக்கு மற்றொரு உடல் கிடைக்கும் பொது, சில நேரங்களில் நாம் உயர்ந்த மூங்கில் மரத்தின் உச்சியில் அல்லது உயர்ந்த மலை மேல் நான் இப்பொது, கீழே விழுந்துக் கொண்டிருக்கிறேன். நான் பயப்படுகிறேன், சில சமயங்களில் அழுகின்றேன், "இப்பொது, நான் கீழே விழுந்துக் கொண்டிருக்கிறேன்." என்று நினைப்போம் ஆகையால் நானாக இருக்கும், நான் அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்த உடல், பௌதீக உடல், உண்மையிலேயே, நான் எந்த உடலுக்கும் சொந்தக்காரன் அல்ல. எனக்கு ஒரு தனி ஆன்மிக உடல் உள்ளது.
ஆகையால் இந்த மனித வாழ்க்கை அந்த மெய்ஞானத்திற்கானது, அதாவது "நான் இந்த பௌதீக உடல் அல்ல, எனக்கு ஒரு ஆன்மிக உடல் உள்ளது." பிறகு அடுத்த கேள்வி யாதெனில், "பிறகு என் செயல்பாடு என்ன?" இப்பொழுது உள்ள உடலில் சில பௌதிக நிலையில் நான் சிந்திக்கிறேன், "இது என்னுடைய உடல்", மேலும் இந்த உடல், இந்த நாடு அல்லது குடும்பத்தின் சில நிபந்தனையின் பேரில் படைக்கப்பட்டது, ஆகையினால், "இது என் குடும்பம், என் கிராமம், என் நாடு." அனைத்தும் உடல் சம்மந்தப்பட்ட கருத்து உடைய வாழ்க்கை. மேலும் நான் இந்த உடல் அல்ல என்றால், பிறகு இந்த உடல் தொடர்பான உறவோடு, என் குடும்பம், என் நாடு அல்லது என் சமூகம், அல்லது என் மற்ற உறவினர்கள், அவர்களும் பொய்யானவை ஏனென்றால் இந்த உடல் பொய்யானது.