TA/Prabhupada 0656 – பக்தர்களுக்கு எவரிடமும் விரோதமில்லை

From Vanipedia


பக்தர்களுக்கு எவரிடமும் விரோதமில்லை
- Prabhupāda 0656


Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

பக்தர்: "நேர்மையான நலன்விரும்பிகள் பாசத்துடன் நன்மை செய்வோர் - நடுநிலை கொண்டவர், சமாதானம் செய்வோர், பொறாமை கொண்டோர், நண்பர்கள், எதிரிகள், சாதுக்கள், பாவிகள் என அனைவரையும் சமமான மனதுடன் நடத்துபவன் மேலும் முன்னேறியவனாக கருதப்படுகிறான். (ப.கீ. 6.9)."

பிரபுபாதர்: ஆமாம். இதுவே முன்னேற்றத்தின் அறிகுறி. ஏனெனில் பௌதிக உலகத்தில், நண்பன் எதிரி என்ற கணக்கெல்லாம், உடலோடோ புலன் இன்பத்தோடோ தொடர்புடையது. ஆனால் பரமஉண்மையையோ பகவானையோ அறிவதற்கு இந்த பௌதிக தொடர்பு அவசியமில்லை. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அனைத்து கட்டுண்ட ஆன்மாக்களும் மாயையில் இருக்கின்றன. ஒரு மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் மருத்துவர் நோயாளி இடம் செல்கிறார். அவனுக்கு வலிப்பு வந்துள்ளது, அவன் கண்டதையும் பேசுகிறான். அதனால் அவர் அவனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பார் என்று அர்த்தமில்லை. அவனை நண்பராகவே அவர் கருதி சிகிச்சை அளிக்கிறார். மேலும் நோயாளி அவரை தவறாக பேசினாலும் அவனுக்கு மருந்து அளிக்கிறார். இயேசு கிறிஸ்து சொல்லியதுபோல், "பாவத்தை வெறு பாவியை அல்ல" பாவியை அல்ல. அது சரிதான். பாவி மாயையில் இருக்கின்றான். மூடனாக இருக்கின்றான். அவனை நீ வெறுத்தால், அவனுக்கு விமோசனம் அளிப்பது எப்படி? எனவே பக்தர்களாக இருப்பவர்கள், உலகிலேயே பகவானின் சேவகர்களாக இருப்பவர்கள் யாரையும் வெறுத்தல் கூடாது.

இயேசு கிறிஸ்துவும் தான் சிலுவையில் அறையப்படும் போது கடவுளிடம்: "கடவுளே! அவர்களை மன்னித்து விடுங்கள். நாம் என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியாது." என்றே கூறினார். அதுதான் ஒரு பக்தனின் நிலையும். ஆமாம். பௌதிக ரீதியாக எண்ணி மூடர்களாக இருப்பதனால் அவர்களை வெறுத்து விடக்கூடாது. யாராக இருந்தாலும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் வெறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் வரவேற்கப்படுகின்றன. வாருங்கள் வந்து ஹரிகிருஷ்ணா ஜெபியுங்கள். கிருஷ்ண பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள் பகவத் கீதையிலிருந்து நல்ல தத்துவங்களை கேளுங்கள், அதன்மூலம் பௌதிக கட்டுண்ட வாழ்க்கையில் இருந்து விடுபட முயலுங்கள். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். பகவான் சைதன்யர் இந்த இயக்கத்தை அறிமுகம் செய்தார். யாரே தேக, தாரே கஹ 'க்ருஷ்ண'-உபதேஷ (சை.ச. மத்திய 7.128). "யாரைக் கண்டாலும் எங்கு கண்டாலும் கிருஷ்ண பக்தியை போதியுங்கள்." கிருஷ்ண கதை. பகவான் கிருஷ்ணரின் வார்த்தைகள். நீயும் மகிழ்வாய் அவர்களும் மகிழ்வார்கள். மேலே படியுங்கள்.

பக்தர்: "ஆன்மீகவாதி பரம புருஷ பகவான் மேல் எப்போதும் தன் மனதை ஒரு நிலைப் படுத்த முயல வேண்டும். எப்போதும் தனிமையில் அமர்ந்து தன் மனதை கட்டுப்படுத்த வேண்டும். ஆசைகளில் இருந்தும் தனது என்னும் எண்ணத்தில் இருந்தும் விடுபடவேண்டும்.

பிரபுபாதர்: ஆமாம். இதுவே ஆன்மீக வாழ்க்கையின் தொடக்கம். இந்த அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் யோக முறையின் கொள்கைகளைப் பற்றி கூறுகிறார். இப்படியாக தொடங்குகிறார். ஆன்மீகவாதி பரம புருஷ பகவானிடம் தன் மனதை எப்போதும் ஒருமுகப்படுத்த முயல வேண்டும் பரமபுருஷ பகவான் என்றால் கிருஷ்ணர். அவரே பரம்பொருள், நான் இப்போது கூறியது போல நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் (Kaṭha Upaniṣad 2.2.13). அவரே பரம நித்தியமானவர். பரம புருஷர். எனவே மொத்த யோக முறையின் குறிக்கோளும் மனதை பரம புருஷர் இடம் ஒருமுகப்படுத்துவது ஆகும். நாம் பரம் பொருள் அல்ல. அதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். பரம்பொருள் என்பது பகவான். இது துவைத வாதம். இருமை தன்மை. இருமை தன்மை என்றால் பகவான் என்னிலிருந்து வேறுபட்டவர். அவர் உத்தமமானவர். நான் அவருக்குக் கீழ்ப்படிந்தவன். அவர் உயர்ந்தவர், நான் சிறியவன். அவர் எல்லைகள் அற்றவர், நான் எல்லைக்கு உட்பட்டவன். இதுவே உறவு. நாம் எல்லைக்கு உட்பட்டவர்கள், ஆதலால் எல்லையற்ற பரம்பொருள் இடம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அவன் தனியாக இருக்க வேண்டும் தனியாக. அது மிகவும் முக்கியம். தனியாக என்றால் கிருஷ்ண பக்தி இல்லாதவர்களிடம் இருந்து தனியேிருப்பது. தனிமையில். தனிமையான இடத்தில் தனியாக இருக்க வேண்டும். தனியாக, அதாவது காட்டிலோ, மலையிலோ தனிமையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் காட்டிற்குச் சென்று தனிமையான இடத்தை கண்டு பிடிப்பது என்பது மிகவும் அரிது. தனிமையான இடம் தான் கடவுள் பக்தியை கற்றுக் கொடுக்கும். அதுதான் தனிமையான இடம். பின்னர்? மனதை கவனமாக கட்டுப்படுத்த வேண்டும். மனதை எப்படி கட்டுப்படுத்துவது? முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் மேல் மனதை நிறுத்த வேண்டும். வேறு எதுவும் இல்லை.

ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ (ஸ்ரீ.பா. 9.4.18) பின்னர்... அன்று நான் கூறியது போல மனதை கிருஷ்ணர் பால் செலுத்தும்போது கிருஷ்ணர் சூரியனை போன்றவர். எனவே மனதை இருள் ஆட்கொள்ளும் என்ற பேச்சே இல்லை. அதற்கு சாத்தியமில்லை. சூரிய வெளிச்சத்தில் இருட்டிற்கு வாய்ப்பு இல்லாதது போல. அதுபோலவே கிருஷ்ணரை மனதில் வைக்கும்போது மாயை அதனை அடைவதில்லை. அவள் அதனை அடைய முடியாது. அதுவே வழி. ஆசை மற்றும் தனது எனும் எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும். தனது என்ற எண்ணமும் ஆசையுமே பௌதிக நோய். எது தொலைந்தது, அதற்காக வருந்துதல், எது இருக்கிறதோ எது நம்மிடம் இல்லையோ அதன்மேல் ஆசைப்படுவது. எனவே ப்ரஹ்ம-பூதாஹ பிரசனாத்மா (ப.கீ.18.54) - உண்மையில் கடவுள் பக்தி, கிருஷ்ண பக்தி உடையவர், பௌதிக பொருட்களின் மேல் ஆசை கொள்வதில்லை. கிருஷ்ணருக்கு எப்படி சேவை செய்வது என்று அவர் விரும்புகிறார். அதாவது அவருடைய ஆசை தூய்மை அடைந்து விட்டது. அந்த ஆசை ஆசையை கைவிட முடியாது. இது சாத்தியமில்லை. நீ ஒரு உயிர் வாழி, உனக்கு ஆசை இருக்க வேண்டும். ஆனால் தற்போது நமது ஆசைகள் அசுத்தம் அடைந்து உள்ளன. "பௌதிக பொருட்களை அடைவதன் மூலம் என் புலன்களை நான் திருப்திப் படுத்த ஆசைப்படுகிறேன்." ஆனால் கிருஷ்ணரை ஆசைப்பட்டால், பௌதிக பொருட்களை அடையும் ஆசை தானாக மறைந்து விடும். மேலே படியுங்கள்.