TA/Prabhupada 0663 – தொலைந்துபோன கிருஷ்ண உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள் – அதுவே யோகப்பயிற்சி
Lecture on BG 6.13-15 -- Los Angeles, February 16, 1969
தமால் கிருஷ்ணா: பொருளுரை: "யோகப் பயிற்சி செய்வதின் இறுதி இலக்கு இங்குத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது."
பிரபுபாதர்: இப்போது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. யோகத்தின் நோக்கம் என்ன? அவர்கள் யோகியாக மாறி யோக சமுதாயத்தில் கலந்துகொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறார்கள், தியானம் செய்வது. ஆனால் இங்கு யோகப்பயிற்சி தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலே தொடருங்கள்.
தமால் கிருஷ்ணா: "இந்தப் பௌதீக வசதியையும் அடைவதற்காக யோகப்பயிற்சி செய்யப்படுவதில்லை. பௌதீக இருப்பு அனைத்தையும் நிறுத்தவே அது வழிவகுக்கிறது."
பிரபுபாதர்: உங்களுக்குப் பௌதீக வசதிகளின் தேவை இருக்கும் வரை நீங்கள் பௌதீக வசதிகளைப் பெறுவீர்கள். ஆனால் நம் வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு அது தீர்வு இல்லை. பௌதிக வசதிகள், அமெரிக்க சிறுவர்-சிறுமியரான உங்களுக்கு மற்ற அனைத்து நாடுகளையும் விட அதிகமான பௌதீக வசதிகள் இருக்கின்றன. இந்தியாவை விட நிச்சயமாக அதிக வசதி உள்ளது, இதை நான் என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். நான் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன். ஜப்பானில் கூடப் பார்த்திருக்கிறேன், அதைவிட நீங்கள் சிறந்த நிலையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அமைதியை அடைந்து விட்டீர்களா என்ன? இங்கு யாராவது நான் முழுவதுமாக அமைதியாக இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? பின்னர் ஏன் இளைஞர்கள் விரக்தியுடனும் குழப்பத்துடனும் இருக்கிறார்கள்? பௌதீக வசதிகளுக்காக இந்த யோகப் பயிற்சியைப் பயன்படுத்தும் வரை நமக்கு அமைதி என்ற கேள்விக்கே இடமில்லை. யோகப் பயிற்சி கிருஷ்ணரை புரிந்து கொள்வதற்காகச் செய்யப்பட வேண்டும். அவ்வளவுதான். அல்லது கிருஷ்ணர் உடனான உங்கள் இழந்த உறவைப் புதுப்பித்துக் கொள்வதற்காக. அதுவே யோகப்பயிற்சி. தொடருங்கள்.
தமால் கிருஷ்ணா: "பௌதீக முன்னேற்றத்தையும் உடல்நலத்தில் முன்னேற்றத்தையும் நாடுபவர்..."
பிரபுபாதர்: பொதுவாக இந்த யோகப் பயிற்சி உடல்நலத்தை முன்னேற்றுவது என்ற பெயரில்தான் நடத்தப்படுகிறது. சிலர் கொழுப்பைக் குறைக்க செல்கின்றனர். தெரிகிறதா? கொழுப்பைக் குறைக்க. நீங்கள் செல்வச்செழிப்பு உள்ள நாட்டவர், ஆதலால் அதிகமாக உண்கிறீர்கள் அதனால் அதிகப் பருமனாக இருக்கிறீர்கள். அதன் பின் மறுபடியும் யோகப் பயிற்சிக்காகப் பணம் செலவழித்து பருமனை குறைக்கிறீர்கள். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நான் அன்று ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன் "பருமனை குறையுங்கள்" பருமனை ஏன் அதிகப்படுத்தினீர்கள்? முட்டாள்தனம் அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். அதை நான் குறைக்க வேண்டும் என்றால் ஏன் அதிகப்படுத்தினேன்? ஏன் எளிமையான உணவு பண்டங்களில் திருப்தி அடையக் கூடாது? பருப்பு வகைகள் காய்கறிகள் மற்றும் லேசான உணவு வகைகளை உண்பதால் பருமன் ஆவதில்லை. நீங்கள் பருமன் அடையமாட்டீர்கள். உண்ணுவதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறையுங்கள். இரவில் உண்ணாதீர்கள். யோகத்தை இதுபோலப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் அதிகப்படியாக உண்டால் நீங்கள்... வியாதிகளில் இரண்டு வகை உள்ளன. அதிகப்படியாக உண்பவர்கள் அவர்களுக்குச் சர்க்கரைநோய் வருகிறது அதிகம் உண்ணாதவர்கள் அவர்களுக்குக் காசநோய் வருகிறது. எனவே அதிகமாகவும் உண்ண கூடாது குறைவாக உண்ணக் கூடாது. உங்களுக்கு என்ன தேவையோ அதை உண்ண வேண்டும். அதிகமாக உண்டாலும் வியாதி. குறைவாக உண்டாலும் வியாதி. அது விளக்கப்படுகிறது. யுக்தாஹார-விஹாரஸ்ய… யோகோ பவதி ஸித்தி ந (பகவத் கீதை 6.17). நீங்கள் பட்டினி கிடக்க வேண்டாம், ஆனால் அதிகப்படியாக உண்ணாதீர்கள். நம்முடைய நிகழ்ச்சியில் கிருஷ்ண பிரசாதம் உள்ளது, அதனை உண்ணுங்கள். உண்பது அவசியம் - உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். எனவே உண்ணுதல் அவசியம். ஆனால் அதிகமாக உண்ணாதீர்கள். உண்ணுங்கள்... குறைவாகவும் உண்ணாதீர்கள். குறைவாக உண்ணுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. உங்களால் பத்து பவுண்டுகள் சாப்பிட முடியுமென்றால், சாப்பிடுங்கள். உங்களால் பத்து பவுண்டுகள் சாப்பிட முடியவில்லை என்றால் பேராசையால் பத்து பவுண்டுகள் சாப்பிட்டால், பின்னர் நீங்கள் கஷ்டப்படுவீர்கள். பார்த்தீர்களா? எனவே இங்கு, அது என்ன? பௌதீக வசதிகள் இல்லை. மேலே தொடருங்கள்.