TA/Prabhupada 0689 – நீங்கள் தெய்வீக சகவாசத்திலிருந்தால், உமது பிரக்ஞையும் தெய்வீகமாயிருக்கும்



Lecture on BG 6.35-45 -- Los Angeles, February 20, 1969

பக்தர் : " தனது பூர்வ ஜென்ம திவ்ய உணர்வின் காரணத்தால், யோகத்தின் கொள்கைகளை நாடாமலேயே, அவன் அவற்றால் இயற்கையாக கவரப்படுகிறான். அத்தகைய ஆர்வம் உடைய ஆன்மீகி, சாத்திரங்களின் சடங்குகளில் இருந்து உயர்ந்து நிற்கிறான்". (BG 6.44)

பிரபுபாதா : ஆம்.

பக்தர்: "மாறாக......"

பிரபுபாதா : இல்லை. இதை, நான் விளக்குகிறேன். "தனது பூர்வஜென்ம திவ்ய உணர்வின் காரணத்தால்" நாம் நமது உணர்வை , கிருஷ்ண உணர்வை, திவ்யமான உணர்வை தயார்படுத்திக் கொள்கிறோம் மேலும் இந்த உணர்வு தொடர்கிறது. ஒரு ரோஜா மலரின் நறுமணம், காற்றால் சுமந்து செல்லப்படுவதை போல, அந்த காற்று நம்மை கடக்கும் போது நாமும் அந்த நறுமணத்தை உணர்வோம். அதைப் போல நாம் இறக்கும் போது, இந்த பௌதீக உடல் முடிந்துவிடும். "மண்ணிலிருந்து வந்து, மண்ணுக்குத் திரும்பும்" இந்த உடல் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே...... நிலம் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதனுடன் கலக்கின்றது சிலர் உடலை எரிக்கிறார்கள், சிலர் புதைக்கிறார்கள், சிலர் மிருகங்களுக்கு இரையாக எறிந்து விடுகிறார்கள். மனித சமுதாயத்தில் மூன்று முறைகள் உள்ளன இந்தியாவில், ஹிந்துக்கள் உடலை எரிக்கின்றனர். எனவே, உடல் சாம்பலாகி, மண்ணாக மாறுகிறது. சாம்பல் என்றால் மண் தான் சிலர் தங்கள் மூதாதையரின் உடலை புதைக்கிறார்கள். அந்த உடல், மண்ணாக மாறுகிறது. கிறிஸ்துவத்தில், பைபிளில் கூறப்படுவதை போல "மண்ணிலிருந்து வந்தாய்". மண்ணிலிருந்து வந்த உடல் மீண்டும் மண்ணுக்கு திரும்புகிறது. சிலர் விலங்குகளுக்கு-- பறவைகள் விலங்குகள், கழுகுகள், இவற்றுக்கு இரையாக உடலை எறிகின்றனர். இந்தியாவில் பார்சி இன மக்களைப் போல. அவர்கள் உடலை புதைப்பதுமில்லை, எரிப்பதுமில்லை. அவர்கள் உடலை எறிந்த உடனேயே, கழுகுகள் வந்து சாப்பிடுகின்றன. அந்த உடல் , அந்தப் பறவைகளின் எச்சமாக மாறுகிறது.

எனவே உடல், சாம்பலாகவோ, மண்ணாகவோ , மலமாகவோ மாறுகிறது. உங்களால், சோப்புப் போட்டு, மிக நன்றாகப் பராமரிக்கப்படும் இந்த உடல், இந்த மூன்று விதங்களில் மாறுகிறது-- மலம், சாம்பல் அல்லது மண். மற்ற சூட்சும மூலப் பொருட்களான -அதாவது மனம், புத்தி, அகங்காரம்- இவை, ஒன்று சேர்ந்து, உணர்வு என்று அழைக்கப்படுகிறது அது, மிகச் சிறிய ஆன்மீகத் துகளான, ஆன்மீக ஆத்மாவான உங்களைச் சுமந்து செல்கிறது. ஆத்மா, சூட்சும மூலப் பொருட்களான- மனம், புத்தி மற்றும் அகங்காரத்தால் சுமந்து செல்லப்படுகிறது எதைப் பொறுத்து என்றால்...... வாசனையைப் போல, காற்று ரோஜாவின் நறுமணத்தை சுமந்து செல்லும் போது "அருமையாக இருக்கிறது" என்று நீங்கள் அனுபவிக்கறீர்கள். ஆனால் மலம் போன்ற அசுத்தமான விஷயங்களை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது உடனே நீங்கள் "இது துர்நாற்றம்" என்று கூறுகிறீர்கள் துர்நாற்றத்தைப் போல அல்லது நறுமணத்தை போல இந்த உணர்வு உங்களை சுமந்து செல்கிறது. உங்களுடைய செயல்களுக்கு தக்க உங்கள் உணர்வை அமைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய உணர்வை கிருஷ்ண உணர்வில் பயிற்சியில் ஈடுபடுத்தினால், உங்கள் உணர்வு உங்களை கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்லும் இது புரிந்து கொள்வதற்கு கடினமான விஷயம் இல்லை. காற்றை உங்களால் பார்க்க முடியாது ஆனால் வாசனையை நுகர்ந்து உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். " இப்போது காற்று இதை போல் இருக்கிறது" அதைப்போலவே, உணர்வுகளை பொறுத்தே பல்வேறு வகையான உடல்கள் ஏற்படுகின்றன.

ஆக, நீங்கள் உங்கள் உணர்வை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருந்தீர்கள் என்றால், அதைப்போன்ற ஒரு உடலை பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும், உங்களுக்கு நல்ல பெற்றோர்கள், நல்ல குடும்பம் ,உங்களை இந்த பாதையில் பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கக் கூடிய நல்ல குடும்பம் கிடைக்கும். உங்கள் முற்பிறவியில் எந்த உணர்வில் உடலை விட்டீர்களோ, அந்த உணர்வை திரும்பவும் பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு தானாகவே கிடைக்கும். இதுவே இங்கு விளக்கப்பட்டுள்ளது. "பூர்வஜென்ம திவ்ய உணர்வின் காரணத்தால்" தற்போதைய நமது கடமை, இந்த உணர்வை எப்படி திவ்யமாக்குவது என்பதுதான். இதுதான் நமது வேலையாக இருக்கவேண்டும். நீங்கள் திவ்யமான வாழ்வை விரும்புகிறீர்கள் என்றால், உங்களுடைய சொந்த ஆன்மீக திருநாட்டிற்கு ஏற்றம் பெற விரும்புகிறீர்கள் என்றால், அதாவது நித்தியமான, ஆனந்தமான, பூரண அறிவு நிரம்பிய வாழ்க்கை, நாம், நம்மை இந்த திவ்ய உணர்வின் அல்லது கிருஷ்ண உணர்வின் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனை சத்சங்கத்தால் எளிமையாக அடைந்துவிடலாம்.ஸங்கா3த் ஸஞ்ஜாயதே காம (BG 2.62): நீங்கள், உன்னத சகவாசத்தை வைத்திருந்தீர்கள் என்றால் உங்களுடைய உணர்வும் உன்னதமாக இருக்கும். நீங்கள் மோசமான அசுரத்தனமான சகவாசத்தில் இருந்தீர்களென்றால், உங்கள் உணர்வும் அவ்வகையிலேயே பழக்கப் படுத்தப் படும் எனவே,

நாம் நமது உணர்விற்கு திவ்யமான பயிற்சியளிக்க வேண்டும். இதுவே மனிதவாழ்வில் நமக்குறிய கடமையாகும். நாம் நமது உணர்வை உன்னதமாக்கினால், அடுத்த உன்னதமான வாழ்க்கைக்குத் தயாராகிறோம். பல்வகை பிறவிகளில், நமது அடுத்த பிறப்பு முற்றிலும் உன்னதமான, பிறவியாக ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு தான் இந்த மனித பிறவி. முற்றிலும் உன்னதமான என்றால் நித்தியமான, ஆனந்தமயமான, பூரண அறிவு நிரம்பிய வாழ்வாகும். எனவே இந்த திவ்ய உணர்வின் காரணத்தால், நீங்கள் திவ்ய உணர்வை வளர்த்துக் கொள்ளும் நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். இதுவே இந்தப் பதத்தில் விளக்கப்பட்டுள்ளது.