TA/Prabhupada 0718 – எப்பொழுதும் பிள்ளைகளும் சீடர்களும் தண்டிக்கப்பட வேண்டும்



Morning Walk -- February 1, 1977, Bhuvanesvara

பக்தர் (1) : ஸ்ரீல பிரபுபாதர், கத்திரிக் கோலின் கதையில் வருவதைப் போல, நாம் எவ்வாறு விஞ்ஞானிகளை, கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவது? நாம் எவ்வாறு விஞ்ஞானிகளை பகவத்கீதையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவது? பிரச்சனை என்னவென்று தோன்றுகிறது என்றால்...

பிரபுபாதர்: இல்லை, இது உண்மை என்றால், நீங்கள் கட்டாயப்படுத்தலாம், அது உண்மையானால். மேலும் அது உண்மை அல்ல என்றால், பிறகு அது வரட்டுப் பிடிவாதம் தான். அது உண்மை என்றால் நீங்கள் கட்டாயப்படுத்தலாம். ஒரு தந்தை, தன் குழந்தையை "பள்ளிக்கு செல்" என்று கட்டாயப் படுத்துவது போல. ஏனென்றால், கல்வி இல்லை என்றால் வாழ்க்கையில் விரக்தி தான் மிஞ்சும் என்று அவருக்குத் தெரியும். எனவே அவர் கட்டாயப் படுத்தலாம். நான் கட்டாயப்படுத்த பட்டேன். நான் பள்ளிக்கு செல்லவில்லை. ஆம். (சிரிப்பு) என் தாயார் என்னை கட்டாயப்படுத்தினார். என் தந்தையார் மிகவும் மென்மையானவர். என் தந்தை, இல்லை என் தாய் என்னை கட்டாயப் படுத்துவார். என்னை பள்ளிக்கு இழுத்துச் செல்வதற்காகவே என் தாயார் ஒரு மனிதரை நியமித்திருந்தார். எனவே கட்டாயப்படுத்துதல் தேவைப்படுகிறது.

குரு கிருபா: ஆனால் அது அதிகார தன்மை உடையது. உங்கள் பெற்றோர்கள் உங்களுடைய அதிகாரிகள்.

பிரபுபாதர்: ஆம்.

குரு கிருபா: ஆனால் அவர்கள் நம்மை அதிகாரிகளாக ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்கள், "நானும் உங்களுக்கு சரி சமமானவன். உண்மையில், உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்" என்று கூறுகின்றனர்.

பிரபுபாதர்: அது மற்றொரு முட்டாள்தனம், மற்றொரு முட்டாள்தனம். தந்தை-தாய், இயல்பான அதிகாரி, இவர்கள் கட்டாயப்படுத்தலாம்.

ஸ்வரூப தாமோதரா: நாம் அவர்களுக்கு உன்னதமான புரிதலை, ஞானத்தின் உயர்ந்த பகுதியை காண்பிக்க வேண்டும்.

பிரபுபாதர்: ஆமாம். குழந்தை முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் தந்தையும், தாயும் தங்கள் குழந்தை முட்டாளாக இருப்பதைப் பார்க்க முடியாது. அவன் கட்டாயப்படுத்தலாம். அரசாங்கம் கூட. ராணுவம் இருப்பதன் காரணம் என்ன? காவல்துறை இருப்பதன் காரணம் என்ன? நீங்கள் சட்டத்தை மீற விரும்பினால், நீங்கள் சட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்த படுவீர்கள். கட்டாய படுத்துதல் தேவைப்படுகிறது.

பக்தர் (1) : ஆனால் குழந்தைக்கு முதலில் பள்ளி செல்வதினால் சில நன்மை கிடைக்கிறது என்பது தெரிய வேண்டும்.

பிரபுபாதர்: குழந்தையால் அதை தெரிந்துகொள்ள முடியாது. அவன் ஒரு முட்டாள். அவன் செருப்பால் அடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு அவன் பார்ப்பான். ஒரு குழந்தையால் தெரிந்து கொள்ள முடியாது. புத்ரம்' ச ஷிஷ்யம்' ச தாடயேன் ந து லாலயேத் (சாணக்ய பண்டிதர்): "மகன்களும் சீடர்களும் எப்போதுமே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்." இதைக் கூறியவர் சானக்கிய பண்டிதர். "எப்போதும் அவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டாம்." லாலனே பஹவோ தோஷாஸ் தாடனே பஹவோ குணா:..."நீங்கள் தட்டிக் கொடுத்தால் அவன் கெட்டுப் போவான். மேலும் நீங்கள் கண்டித்தால், அவன் மிக நல்லவனாக வருவான். எனவே சீடனாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்." இதுதான் சானக்கிய பண்டிதரின் கூற்று. தட்டிக் கொடுப்பது என்ற கேள்வியே இல்லை.

குரு கிருபா: மனிதர்கள், முகஸ்துதியை விரும்புகிறார்கள். அவர்கள், கண்டிப்பான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை.

பிரபுபாதர்: மேலும் சீடர்களின் நிலையும் இதுதான். சைதன்ய மஹாபிரபு குரு மோரே மூர்க தேகி' (சை.சரிஅதி 7.71) கூறினார். சைதன்ய மகாபிரபு கடவுள்தான் , அவர் கூறினார் "என்குரு மகாராஜா என்னை ஒரு முதல்தர முட்டாளாக பார்த்தார்." கண்டிப்பு. அது தேவைப்படுகிறது. சாணக்ய பண்டிதர், மிகப்பெரும் நீதி ஆசிரியர், அறிவுறுத்தி உள்ளார், தாடயேன் ந து லால: "எப்போதும் அவர்களை கண்டியுங்கள். இல்லையென்றால், அவர்கள் கெட்டுப் போவார்கள்." ஸ்வரூப தாமோதரா: புத்திசாலி பையன், இந்த கண்டிப்பு என்பது கருணையே என்று புரிந்து கொள்வான்.

பிரபுபாதர்: ஆமாம்.