TA/Prabhupada 0719 - சன்னியாசம் ஏற்பதை மிகச்சரியாக பாதுகாக்கவும்



Excerpt from Sannyasa Initiation of Viraha Prakasa Swami -- Mayapur, February 5, 1976

நீங்கள் சன்னியாசம் எடுத்துக்கொள்ளும் இந்த இடம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வசிப்பிடம் ஆகும். ஆக சன்யாசம் எடுத்துக் கொள்வதன் நோக்கம் என்ன? அவர், நிமாய் பண்டிதர், மதிப்பிற்குரிய பிராமணர். இந்தப்பகுதி, நவத்வீபம், முந்தைய காலங்களில் இருந்தே, மெத்தப் படித்த பிராமணர்களின் இடமாக இருந்தது. ஸ்ரீசைதன்ய மஹாபிரபு, ஒரு பெருமதிப்பிற்குரிய பிராமண குடும்பத்தை சேர்ந்தவர், அவர் ஜகந்நாத மிஸ்ரரின் மகன்; மேலும் அவருடைய தாத்தா நீலாம்பர சக்கரவர்த்தி. மிகவும் மதிக்கத்தக்க, மதிப்பளிக்கக்கூடிய நபர்கள். அவர் அந்தக் குடும்பத்தில் பிறந்தார். அவர் மிகவும் அழகானவர்; எனவே அவருடைய மற்றொரு பெயர் கௌர சுந்தரா. அவர் மிகப்பெரிய கற்றறிந்த பண்டிதராகவும் விளங்கினார்; எனவே அவருடைய மற்றொரு பெயர் நிமாய் பண்டிதர். மேலும் தன்னுடைய இல்லற வாழ்க்கையில், அவர் மிக அழகிய இளம் மனைவியும் பெற்றிருந்தார், விஷ்ணு பிரியா, மேலும் அன்பிற்குரிய அன்னையும் இருந்தார், மேலும் அவர் மிகுந்த செல்வாக்கும் பெற்றிருந்தார். இதனை நீங்கள் அறிவீர்கள். ஒரே நாளில், காஜியின் ஆணைக்கு எதிராக ஒரு லட்சம் பேரை திரட்டினார். எனவே இந்த வகையில் அவருடைய சமூக நிலை மிகவும் அனுகூலமாக இருந்தது. அவருடைய தனிப்பட்ட நிலை மிக அனுகூலமாக இருந்தது. இருந்தும் அவர் சன்னியாசம் எடுத்து வீட்டை விட்டுச் சென்றார். ஏன்? தயிதாய: இந்த உலகத்தின் வீழ்ந்த ஆத்மாக்களின் மீது கருணை காண்பிப்பதற்காக தான்.

எனவே அவர் விட்டுச்சென்ற பாரம்பரியம் என்னவென்றால், பாரத நாட்டில் பிறப்பெடுக்கும் எவரும்,

பாரத-பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல யார
ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார
(சை.சரி ஆதி 9.41)

எனவே அவர் பரஉபகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தானே செய்து காட்டினார், மற்ற வீழ்ந்த ஆத்மாக்களின் நலனுக்காக . எனவே, சந்நியாசம் என்றால் சைதன்ய மகாபிரபுவின் கட்டளையை, அதாவது,

ஆமார ஆஜ்ஞாய குரு ஹஞா தர' ஏஇ தேஷ
யாரே தேக தாரே கஹ 'க்ரு'ஷ்ண'-உபதேஷ
(சை. சரி மத்ய 7.128)

அதுமட்டுமல்ல..... இந்தியர்களுக்கு மட்டும் இந்தப் பொறுப்பு இருக்கிறது என்பதல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க நாம் முயற்சி செய்கிறோம், ஆனால் சைதன்ய மகா பிரபுவை பொருத்தவரை, யாராக இருந்தாலும்- ப்ரு'திவீதே ஆசே யத நகராதி க்ராம (சை. பா அந்த்ய-கண்ட 4.126) - அவர் இந்த திருப்பணியினை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அமெரிக்க பையன்கள் மற்றும் பெண்கள் ஆகிய உங்களுக்கு, நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன், ஏனெனில், நீங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை தீவிரமாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். மேலும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் கருணையால் உங்களில் சிலபேர் சன்யாசம் எடுத்துக் கொள்கிறீர்கள். இதனை சரியாக பாதுகாத்து, மேலும் நகரத்திலிருந்து நகரம், கிராமத்திலிருந்து கிராமம் சென்று, உலகம் முழுக்க இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புங்கள் அதன்மூலம் அனைவரும் ஆனந்தமாக இருப்பர். மக்கள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றனர். அவர்கள், காரணம் அவர்கள் முட்டாள்களாக, மூடர்களாக உள்ளனர், அவர்களுக்கு மனித வாழ்க்கையை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இது தான் எல்லா இடத்திலும் பாகவத தர்மம். எனவே மனித வாழ்க்கையென்பது, ஒரு நாயோ பூனையோ அல்லது பன்றியோ ஆவதற்காக அல்ல. நீங்கள் ஒரு பக்குவமான மனிதராக வேண்டும். ஷுத்த்யேத் ஸத்த்வ. உங்கள் வாழ்கையை தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏன் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய்க்கு ஆட்படுகிறீர்கள்? காரணம் நாம் தூய்மை அற்றவர்களாக உள்ளோம். இப்போது, நாம் நம்முடைய இருப்பை தூய்மைப்படுத்திக் கொண்டோமானால், பிறகு பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்றவை இருக்காது. இதுவே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மற்றும் கிருஷ்ணரின் கருத்தும் கூட. கிருஷ்ணரை புரிந்து கொள்வதால் மட்டுமே, நீங்கள் தூய்மை அடைவீர்கள். மேலும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் இவற்றின் களங்கங்களிலிருந்து தப்பிப்பீர்கள்.

எனவே, பொதுமக்களை, தத்துவவாதிகளை, மதவாதிகளை ஒத்துக் கொள்ளச் செய்ய முயற்சி செய்யுங்கள். நம்மிடம் எந்த குறுங்குழு வாத பார்வையும் இல்லை. யார் வேண்டுமானாலும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டு தூய்மை அடையலாம். ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார (சை. சரி ஆதி 9.41). எனவே நான் மிகுந்த திருப்தி அடைந்து உள்ளேன். நீங்கள் ஏற்கனவே உங்கள் சேவையை சமூகத்திற்கு அளித்துள்ளீர்கள். இப்போது நீங்கள் சன்யாசம் எடுத்துக் கொண்டு உலக மக்களின் நன்மைக்காக உலகம் முழுக்க பிரச்சாரம் செய்யுங்கள். மிக்க நன்றி. பக்தர்கள் : ஜெய ஸ்ரீல பிரபுபாதா.