TA/Prabhupada 0720 – உமது காம ஆசைகளை கிருஷ்ணப் பிரக்ஞையால் கட்டுப்படுத்துங்கள்



Lecture on BG 16.10 -- Hawaii, February 6, 1975

நாய் மிகவும் பெருமையுடன் " வொவ்! வொவ்! வொவ்! என்று குரைக்கிறது. அதற்கு தெரியாது " நான் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறேன்." (சிரிப்பு) தன்னுடைய எஜமானன் "இங்கே வா" என்று கூறியவுடன் ஓடும் அளவிற்கு அவன் முட்டாள். (சிரிப்பு) ஆக மாயைதான் எஜமானர் : "முட்டாளே, இங்கே வா". "இதோ வந்தேன்." மேலும் அதனிடத்தில் தற்பெருமையை நாம் பார்க்கிறோம்: " நான் ஏதோ ஒன்று." இந்த நாயின் நாகரீகம், நஷ்ட-புத்தய, எல்லாவித அறிவையும் இழந்து..... இவர்கள் புத்தி குறைவானவர்கள். காமம்' துஷ்பூரம் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே காமம், காம ஆசைகள்.... இந்த உடலின் அடிப்படையில் இந்த காம ஆசைகள் இருக்கின்றன. இதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இதனை துஷ்பூரம் ஆக செய்யாதீர்கள்-என்றும் திருப்திப்படுத்த முடியாத படியானதாக. பிறகு எல்லாம் முடிந்தது. அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதனை குறைத்துக் கொள்ளுங்கள். எனவேதான், வேத நாகரிகத்தின்படி, காம ஆசைகள் இருக்கின்றன, ஆனால் அதனை நல்ல குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்காக என்பதைத் தவிர, வேறு எதற்கும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. இதுவே பூரம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது கட்டுப்படுத்தப்பட்ட காமம்.

எனவே ஒரு பிரம்மச்சாரி இந்த வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறான். அவன் 25 வயது வரை எந்த இளம்பெண்ணையும் பார்க்க முடியாது. அவனால் பார்க்கக் கூட முடியாது. இதுதான் பிரம்மச்சாரி. அவன் பார்க்க முடியாது. இந்த வகையில் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, அவன் பிரம்மச்சாரி வாழ்க்கையை தொடரலாம். நைஷ்டிக-பிரம்மச்சாரி. ஆனால் அவனால் இயலாவிட்டால், அவன் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவது உண்டு. இதுதான் க்ரஹஸ்த வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது, இல்லற வாழ்க்கை. காரணம் 25 வயதிலிருந்து 50 வயது வரை, அது இளமையின் காலம், எனவே காம ஆசைகள் மிகவும் தீவிரமாக இருக்கும். கட்டுப்படுத்த முடியாத ஒருவனுக்கு.... எல்லோருக்குமல்ல. நைஷ்டிக-பிரம்மச்சாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவர்கள். ஆனால் இந்த யுகத்தில் அது சாத்தியமல்ல, பிரம்மச்சாரியாக இருப்பதும் சாத்தியமல்ல. தற்காலத்தில், காலம் மாறிவிட்டது. எனவே கிருஷ்ண உணர்வினால் நீங்கள் உங்களது காம ஆசைகளை கட்டுப்படுத்தலாம். இல்லையென்றால் அது சாத்தியமல்ல.

யத்-அவதி மம சேத: க்ரு'ஷ்ண-பதாரவிந்தே. ஒரு மாமன்னர், அவர் அரசனாக இருந்தார், எனவே இயல்பாகவே காம ஆசைகளுடனும் இருந்தார். எனவே அவர் ஒரு பக்தர் ஆகி தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் பக்குவ நிலையை அடைந்த பிறகு சொன்னது என்னவென்றால்..... யமுனாச்சார்யார் அவர் ராமானுஜாசாரியாரின் குரு- எனவே அவர் சொன்னார் யத்-அவதி மம சேத: க்ரு'ஷ்ண-பதாரவிந்தே: "நான் என்னுடைய மனதினை ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களின் சேவையில் ஈடுபடுத்திய பிறகு," யத்-அவதி மம சேத: க்ரு'ஷ்ண-பதாரவிந்தே நவ-நவ-தாமன்யுத்யதம்' ரஸ, " தினமும் நான் கிருஷ்ணருக்கு செய்யும் சேவையில், புதுப் புது இன்பங்களை அடைகிறேன் " ஆன்மீக வாழ்க்கை என்றால்..... ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் நிலை பெற்றிருந்தார் என்றால் அவருக்கு மேலும் மேலும் சேவை செய்வதால், ஆன்மீக இன்பம், உன்னத ஆனந்தம் கிடைக்கும். இதுவே ஆன்மீக வாழ்க்கை. எனவேதான் யமுனாச்சாரியார் கூறியிருக்கிறார், யத்-அவதி மம சேத: க்ரு'ஷ்ண-பதாரவிந்தே நவ-நவ-தாமன்யுத்யதம்' ரந்தும் ஆஸீத்: "கிருஷ்ணரது தாமரைப் பாதங்களுக்கு சேவை செய்யும் ஒவ்வொரு நொடியும் நான் உன்னதமான ஆனந்தத்தை உணர்ந்து கொண்டிருப்பதால்," தத்-அவதி, "அப்போதிலிருந்து", பத நாரீ-ஸங்கமே... சில சமயம் நாம், பாலுறவு வாழ்வை நினைத்து சூட்சுமமான இன்பத்தை அனுபவிக்கிறோம். இது தான் நாரி சங்கமே. நாரி என்றால் பெண், சங்கம் என்றால் உறவு . எனவே இதற்கு பழக்கப்பட்டவர்கள், உண்மையான பாலுறவு இல்லாத போது அவர்கள் பாலுறவைப் பற்றி நினைக்கிறார்கள். எனவே யமுனாச்சாரியார் கூறுகிறார், "உண்மையில் ஒரு பெண் ணுடன் உறவில் ஈடுபடுவதை அல்ல, அதைப் பற்றி நான் நினைத்தால் கூட, " தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே, ஸ்மர்யமானே, "நினைப்பதாலேயே," பவதி முக-விகார:, "ஓ, நான் உடனே அருவருப்பு அடைகிறேன்: இது என்ன அருவருக்கத்தக்கது?" ஸுஷ்து நிஷ்தி (துப்பும் சப்தம்) இதுதான் பக்குவம். இதுதான் பக்குவம் .ஆம். பாலுறவைப் பற்றிய நினைவு இருக்கும் வரை, அத்தகைய நினைவு சூட்சுமமான பாலுறவு என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் பாலுறவைப் பற்றி படிக்கிறார்கள். அதுவும் சூட்சமமான பாலுறவே. ஸ்தூலமான மற்றும் சூட்சுமமான பாலுறவு. எனவே ஒருவர் காம ஆசைகளில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும், துஷ்பூரம், திருப்தியடையாத, என்றுமே திருப்தியடையாத தாக்கத்திற்கு ஆட்படக் கூடாது.