TA/Prabhupada 0725 – விசயங்கள் அனைத்தும் விளைவுகளாவது அவ்வளவு சுலபமல்ல – மாயை மிக மிக வலியது

From Vanipedia


விசயங்கள் அனைத்தும் விளைவுகளாவது அவ்வளவு சுலபமல்ல – மாயை மிக மிக வலியது
- Prabhupāda 0725


Lecture on SB 7.9.22 -- Mayapur, February 29, 1976

இதுதான் மனித வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் இதனை புரிந்து கொள்ளும்போது.... மிருக வாழ்க்கை, அவைகளுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரிவதில்லை. பூனைகளும் நாய்களும், தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனித வாழ்க்கையில் அவர்கள், "உண்மையில் நான் சந்தோஷமாக வாழவில்லை. காலச்சக்கரத்தால் பல வழிகளில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் வரும் போதுதான், அவன் மனிதன். இல்லையென்றால் அவன் மிருகமே. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தால்... அதாவது 99.9 சதவிகித மக்கள் "எல்லாம் சரியாகவே இருக்கிறது" என்று தான் நினைக்கிறார்கள். பன்றிகளையும், நாய்களையும் போன்ற மிக மோசமான நிலையிலான வாழ்க்கையில் கூட, "எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது" என்றுஅவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த அறியாமை தொடரும் வரை, அவன் ஒரு மிருகம் தான். யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம-இஜ்ய-தீ: (ஸ்ரீ.பா 01.84.13). இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆத்ம-புத்தி:, த்ரி-தாதுகே. கபம், வாயு, பித்தம் இவற்றால் ஆன இந்த உடலை எல்லோரும் "நான் தான் இந்த உடல்"என்று நினைக்கிறார்கள். மொத்த உலகமும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மிகச் சில நபர்கள் ஆகிய நாம் மட்டும்தான், வீடு வீடாகச் சென்று, "ஐயா நீங்கள் இந்த உடல் அல்ல" என்று கூறி அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்ய முயற்சிக்கிறோம். அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. "நான்". "நான் இந்த உடல், நான் திரு ஜான்." "நான் ஒரு ஆங்கிலேயன்" "நான் ஒரு அமெரிக்கன்", "நான் இந்தியன்", "நான் இந்த உடல் அல்ல என்று சொல்கிறாய்" எனவே இது மிக கடினமான பணியாகும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினை தொடர்ந்து நடத்த பெரும் பொறுமையும், விடா முயற்சியும், சகிப்புத் தன்மையும் தேவை. ஆனால் சைதன்யா மஹாபிரபுவின் கட்டளை,

த்ரு'ணாத் அபி ஸுநீசேன
தரோர் அபி ஸஹிஷ்ணுனா
அமானினா மாநதேன
கீர்தனீய: ஸதா ஹரி:
(சை.சரி ஆதி 17.31)

எனவே கிருஷ்ண உணர்வினை பிரச்சாரம் செய்யும் பணியை எடுத்துக் கொண்டவர்கள், அவர்கள் இந்த விஷயங்கள் எல்லாம் மிக எளிதாக நடந்துவிடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மாயை மிகமிகக் கடினமானது, மிக மிகக் கடினமானது. ஆயினும் நாம் மாயையே எதிர்த்து போர் புரிந்தே ஆகவேண்டும். இது மாயைக்கு எதிராக அறிவிக்கப்பட்ட ஒரு போர்தான். மாயை, உயிர்வாழிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள், மேலும் நாம் உயிர்வாழிகளை அவளுடைய பிடியிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறோம்... அதுதான் வித்தியாசம். காலோ வஷீ-க்ரு'த-விஸ்ரு'ஜ்ய-விஸர்க-ஷக்தி (SB 7.9.22):. இந்த சக்தியானது, விஸர்க சக்தியானது, மிக மிக உறுதியானது. ஆனால் இதுவும் கட்டுப்பாட்டில் உள்ளது. மாயை, மிக மிக உறுதியாக இருந்தாலும், அவள் கிருஷ்ணருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறாள். மயாத்யக்ஷேண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸ-சராசரம் (ப.கீ 9.10). பிரக்ருதி மிக அருமையாக வேலை செய்தாலும், மிக மிக, அதாவது நான் சொல்வது என்னவென்றால், அவர் செய்வது, மிகப் பெரும் பணி, அதாவது,...உடனடியாக மேகம் வந்து விடுகிறது. இப்போது நல்ல வெளிச்சமாக இருக்கிறது. ஆனால் ஒரு நொடியில் ஒரு பெரும் கருமேகம் வரலாம், வந்து உடனடியாக அழிவை ஏற்படுத்தலாம். அது சாத்தியம் தான். இவையெல்லாம் மாயையின் அருமையான வேலைகள் ஆகும். ஆனாலும்கூட அவள் முழுமுதற் கடவுளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறாள். இந்த சூரியன் மிகப்பெரியதாக இருப்பதை நாம் பார்க்கிறோம். பூமியைவிட 14,00,000 மடங்கு பெரியது, ஆனால் காலையில் எவ்வளவு சீக்கிரமாக அது வெளியே வருகிறது, உடனடியாக, என்பதை நீங்கள் பார்க்கலாம். அதனுடைய வேகம், ஒரு நொடிக்கு 16000 மைல்களாகும். ஆக இது எவ்வாறு நடக்கிறது? யஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸம்'ப்ரு'த-கால-சக்ரோ கோவிந்தம் ஆதி-புருஷம்' தம் அஹம்'... (பி.சம் 5.52). அது கோவிந்தனின் ஆணையின் கீழ் நடக்கிறது. எனவேதான் அவர் விபு. அவர் மிகப் பெரியவர். ஆனால் அவர் எந்த அளவிற்கு பெரியவர் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவேதான், ஏதாவது ஒரு போலியானவரை, ஏமாற்றுக்காரரை, முட்டாள்தனமாக நாம் கடவுள் என்று ஏற்றுக் கொள்கிறோம். கடவுள் என்பதன் அர்த்தம் என்ன என்று நமக்குத் தெரியாது. ஆனால் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் முட்டாள்கள் தான். அந்தா யதாந்தைர் உபனீயமானாஸ் (SB 7.5.31). நாம் குருடர்களாக இருந்து, மற்ற குருடர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறோம்: "நான் கடவுள், நீயும் கடவுள், எல்லோரும் கடவுள்களே." ஆனால் கடவுள் அப்படிப்பட்டவர் அல்ல. இங்கே கடவுள் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது... காலோ வஷீ-க்ரு'த-விஸ்ரு'ஜ்ய-விஸர்க-ஷக்தி: "காலத்தின் மீதும் படைப்புச் சக்தியின் மீதும் கட்டுப்பாட்டினைக் கொண்டிருப்பவர்." - அவர் தான் கடவுள்.