TA/Prabhupada 0730 – சித்தாந்த போலியா சித்தே – கிருஷ்ணரைப் புரிந்துக்கொள்வதில் சோம்பலாய் இருக்காதீர்



Lecture on SB 7.9.32 -- Mayapur, March 10, 1976

பிரபுபாதர்: கடவுள் எப்போதுமே நல்லவர்தான். ஆனால் நம்முடைய கணக்கின் படி, எல்லைக்குட்பட்ட கணக்கின்படி, அவர் சில பாவச் செயல்களை செய்வது போல தோன்றினால், அது பாவமல்ல; தூய்மைப்படுத்துதல். அதே உதாரணம் தான்: தெஜீயஸாம் ந தோஷாய (ஸ்ரீ.பா 10.33.29). அவருடைய திருநாமத்தை ஜபம் செய்வதால் நாம் பாவமற்றவர் ஆகும்போது, எப்படி கடவுள் பாவம் செய்பவர் ஆகக்கூடும்? இது சாத்தியமல்ல. இது இயல்பாகவே அறிந்துகொள்ளக்கூடியது தான். நாம் அவருடைய திருநாமத்தை, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண...

பக்தர்கள்: கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

பிரபுபாதர்: ... எனவே நாம் தூய்மை அடையும் போது, கிருஷ்ணர் எப்படி அசுத்தம் ஆவார்? இது சாத்தியமல்ல. பவித்தரம் பரமம் பகவான் (BG 10.12). கிருஷ்ணரை புரிந்து கொள்ள

முயற்சி செய்யுங்கள். இதோ ஒரு விளக்கம், தத் ஸ்திதோ ந து தமோ ந குணாம்ஷ் ச யுங்க்ஷே (SB 7.9.32). இதுதான் கிருஷ்ணர். இதுதான் விஷ்ணு, கிருஷ்ணர். நீங்கள் இப்படி நினைக்கக் கூடாது..... சில மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் "நாங்கள் குழந்தை கிருஷ்ணரை வழிபடுகிறோம், பாலகிருஷ்ணன்.'" என்று கூறுகிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், ஏன் வளர்ந்த வாலிபனாகிய கிருஷ்ணரை வழிபடுவதில்லை என்பதற்கு, சில சமயம் அவர்கள் ஒரு காரணத்தைச் சொல்வார்கள்..... அவர்கள், "வளர்ந்த கிருஷ்ணர், ராசலீலையினால் அசுத்தம் அடைந்து இருக்கிறார்" என்று சொல்வார்கள். இந்த முட்டாள்தனத்தை பாருங்கள்! அப்படியல்ல....... கிருஷ்ணர் எப்போதுமே கிருஷ்ணர் தான். யௌவன பருவத்திலுள்ள கிருஷ்ணரை விட குழந்தைப்பருவ கிருஷ்ணர் தூய்மையானவர் என்று நினைப்பது முட்டாள்தனமான முடிவு. இது தவறான கருத்து. கிருஷ்ணர்..... கிருஷ்ணர் மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது, மிகப்பெரிய அரக்கி ஆகிய பூதனாவை அவரால் கொல்ல முடிந்தது. ஒரு மூன்று மாத குழந்தையினால் இவ்வளவு பெரிய அரக்கியை கொல்ல முடியுமா.....? இல்லை. கிருஷ்ணர் எப்போதுமே கடவுள்தான். அவர் மூன்று மாத குழந்தையாக தோன்றினாலும் அல்லது முன்னூறு வயதானாலும் அல்லது 3000 வயதானாலும், அவர் அதே நபர் தான். அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் அத்யம் புராண புருஷம் நவ-யௌவனம் ச (பி.சம். 5.33). இதுதான் கிருஷ்ணர்.

எனவே கிருஷ்ணரை படிப்பதனால், நீங்கள் விடுதலை பெறுகிறீர்கள். எனவே இந்த ஸ்லோகங்களை கவனமாக படித்து ஒவ்வொரு வார்த்தையும் மிக கவனமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகு நீங்கள் கிருஷ்ணரை புரிந்துகொள்ளலாம். கவிராஜ கோஸ்வாமி கூறியுள்ளது என்னவென்றால்,

ஸித்தாந்த போலியா சித்தே நா கர அலஸ, இஹா ஹைதே க்ருஷ்ண லாகே ஸுத்ருத மானஸ (CC Adi 2.117). சித்தாந்தம், கிருஷ்ணர் என்றால் என்ன, நீங்கள் சாத்திரங்களில் இருந்து படித்தீர்களானால், பிறகு, ஸித்தாந்த போலியா சித்தே... கிருஷ்ணரை புரிந்து கொள்வதில் சோம்பேறியாக இருக்காதீர்கள், ஏனென்றால், சாது, சாஸ்த்திரம் மற்றும் குரு மூலம்...நீங்கள் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முயற்சி செய்தால், பிறகு நீங்கள் கிருஷ்ணரை புரிந்து கொள்ளலாம், கிருஷ்ணர் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு முட்டாள் மனிதர்களைப்போல நீங்கள் அவரை சாதாரண மனிதராக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரித: (BG 9.11). மூடர்கள், மூர்க்கர்கள், இவர்கள்தான் கிருஷ்ணரை நம்மில் ஒருவராக நினைப்பார்கள். பிறகு நீங்கள் முட்டாளாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள். மேலும் அதன் விளைவு என்ன? கிருஷ்ணரே கூறுகிறார், ஜன்ம கர்ம ச திவ்யம் மே யோ ஜாநாதி தத்த்வத (BG 4.9):. நீங்கள் கிருஷ்ணரை புரிந்துகொள்வதில் முழுமையடைந்தால்..... நம்மால் கிருஷ்ணரை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது என்பது என்னவோ உண்மைதான். அவர் மிகப் பெரியவர், மேலும் நாம் மிகச் சிறியவர்கள் எனவே இது அசாத்தியம். இது சாத்தியமல்ல ஆனால் பகவத்கீதையில் அவரே விளக்கியுள்ளபடி நீங்கள் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு உங்களுக்கு உதவி கிடைக்கும். உங்களால் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடியாது. அது சாத்தியமல்ல. கிருஷ்ணராலேயே தன்னை புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அவர் தன்னை புரிந்து கொள்வதற்காக சைதன்யராக வந்தார்.

எனவே கிருஷ்ணரே புரிந்து கொள்வது சாத்தியம் அல்ல, நம்மால் புரிந்துகொள்ள முடிந்த அளவிற்கு அவரைப் பற்றின ஞானம், இதுதான் பகவத் கீதை. எனவே, பகவத் கீதையின் அறிவுரைகளின் அளவிற்காவது, கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். யாரே தேக தாரே கஹ க்ருஷ்ண-உபதேஷ (சை.சரி மத்ய 7.128), இது தான் சைதன்ய மஹாபிரபுவின் பரிந்துரை. மனித வாழ்க்கை கிருஷ்ணரை புரிந்து கொள்வதற்காகத் தான் இருக்கிறது. வேறு எந்த வேலையும் இல்லை. இந்த வேலையில் நீங்கள்‌ முழுவதுமாக ஈடுபட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை வெற்றியடையும். நம்முடைய இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இதற்காகத் தான் இருக்கிறது. நாம் பல மையங்களை திறப்பது, உலகத்தில் உள்ள மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணரை புரிந்துகொண்டு, தங்களது வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்குத் தான்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜய! (முடிவு)