TA/Prabhupada 0731 – பாகவத தர்மம் பகையுணர்வு மிக்கவர்களுக்கு ஏற்றதல்ல



Departure Lecture -- London, March 12, 1975

பக்தர்களுக்கு , ஒரு இலக்கியம், பெயரளவிலான இலக்கியம், மிக நன்றாக எழுதப்பட்டிருந்தாலும், மிக அழகான வார்த்தைகளால், உதாரணங்களுடன் எழுதப்பட்டிருந்தாலும்..... தத்3-வாக்3-விஸர்கோ3 (ஸ்ரீமத்பா.1.5.11), .. தத்3 வசஷ்2 சித்ர-பத3ம் (ஸ்ரீமத் பா 1.5.10), மிக அருமையாக, மிக நல்ல இலக்கணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும், ந தத்3 வசஷ்2 சித்ர-பத3ம்' ஹரேர் யஷோ2 ந ப்ரக்3ரு'ணீத கர்ஹிசித், கிருஷ்ணரைப் பற்றியும், அவருடைய பெருமைகளைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை என்றால்...... குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நீங்கள் செய்தித்தாள்களைப் பெற்றிருப்பது போல, கொத்துக்கொத்தாக நிறைய செய்தித்தாள்கள், ஆனால் அவற்றில் ஒரு வரிகூட கிருஷ்ணரைப் பற்றி இல்லை. ஒரு வரி கூட இல்லை. எனவே பக்தர்களுக்கு இந்த வகையான இலக்கியம், குப்பைக்கு சமமாக ஒப்பிடப்படுகிறது. தத்3 வாயஸம்' தீர்த2ம் (ஸ்ரீமத் பா 1.5.10). காக்கைகளை போல காக்கைகள் எங்கு ஒன்று கூடும்? எல்லா குப்பைகளை கொட்டும் இடத்தில் அவை ஒன்று கூடும். நீங்கள் இதனைக் காணலாம். அந்த இனப் பறவைகளில் இது இயல்புதான். எங்கு குப்பைகள் எல்லாம் எறியப்படுகிறதோ, அங்கு காக்கைகள் கூடுகின்றன. மற்றொரு பறவையான அன்னப்பறவை, அங்கே போகாது. அன்னப்பறவைகள், தெளிந்த நீர் நிறைந்த மிக அழகிய பூங்காக்களில் கூடும். அழகிய தாமரைப் பூக்கள் நிறைந்த, பறவைகளின் கானம் நிறைந்த இடம். அங்கேதான் அவை கூடும். எனவே....... இயல்பாகவே பல வகையான மிருகங்கள், பல வகையான பறவைகள் கூட இருக்கின்றன. "இனம் இனத்தைச் சேரும்." ஆக, காக்கைகள் கூடும் இடத்திற்கு அன்னப்பறவைகள் செல்லாது. மேலும் அன்னப்பறவை செல்லும் இடத்திற்கு காக்கையால் செல்ல முடியாது.

அதைப்போலவே கிருஷ்ண பக்தி இயக்கம் அன்னப்பறவைகளுக்கானது. காக்கைகளுக்கானது அல்ல. எனவே அன்னப் பறவையாக இருக்க முயற்சி செய்யுங்கள், ராஜ ஹம்ஸ, அல்லது பரம ஹம்ச. ஹம்ஸ என்றால் அன்னப்பறவை. நம்மிடம் இந்த சிறிய இடம் மட்டுமே இருந்தால் கூட, காக்கைகளின் இடங்களான, பெயரளவிலான கிளப்புகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றிற்கு செல்லாதீர்கள்.மக்கள்.... குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இந்த வகையான இடங்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள. ஆனால் காக்கையாக இருக்காதீர்கள். கிருஷ்ணரைப் பற்றி ஜபம் செய்வது மற்றும் கேட்பது எனும் இந்த எளிமையான முறையினால் அன்னப்பறவையாக ஆகுங்கள். பரமஹம்சர்களாக இருப்பதற்கு இதுதான் வழிமுறை. த4ர்ம-ப்ரோஜ்ஜி2த-கைதவ அத்ர நிர்மத்ஸராணாம். த4ர்ம-ப்ரோஜ்ஜி2த-கைதவ அத்ர பரமோ நிர்மத்ஸராணாம் (ஸ்ரீமத் பா 1.1.2). இந்த பாகவத தர்மம் இந்த கிருஷ்ண உணர்வு பரமோ நிர்மத்ஸராணாம் -இவர்களுக்கானது. மத்ஸர, மத்ஸர. மத்ஸர என்றால் பொறாமை. நான் உங்களிடம் பொறாமை கொண்டுள்ளேன், நீங்கள் என்மீது பொறாமை கொண்டுள்ளீர்கள். இதுதான் பௌதீக உலகம். அதாவது இந்த குடியிருப்பில் உள்ள நிறைய பொறாமைக்காரர்களைப் போல, அவர்கள் நமக்கு எதிராக குற்றம் சாட்டுகிறார்கள். நமக்கு இதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே பாகவத தர்மம் பரமோ நிர்மத்ஸராணாம் இவர்களுக்கானது. மத்ஸர என்றால் பொறுத்துக் கொள்ள முடியாதவன் அல்லது பிறரது முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவன். இதுதான் மத்ஸர என்று அழைக்கப்படுகிறது. இதுதான் எல்லோருடைய இயல்பாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அதிகம் முன்னேறுவதற்கு முயற்சி செய்கிறார்கள். நம் அண்டை அயலார் பொறாமையுடன் உள்ளனர் : " ஓ, இவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான். என்னால் முடியவில்லை." இது..... அவன் சகோதரனாக இருந்தாலும், அவன் சொந்த மகனாக இருந்தாலும் ,இதுதான் இயற்கை....

எனவே பாகவத தர்மம் இவர்களைப் போன்ற பொறாமை உடைய நபர்களுக்கானது அல்ல. பொறாமையை அல்லது பொறாமைப்படும் மனநிலையை முழுமையாக விடுத்தவர் களான பரமோ நிர்மத்ஸராணாம் - இவர்களுக்கானது. எனவே இது எவ்வாறு சாத்தியம்? கிருஷ்ணர் மீது எப்படி அன்பு செலுத்துவது என்று நீங்கள் கற்றுக் கொண்டால் மட்டும் தான் இது சாத்தியம். அதற்குப் பிறகு இது சாத்தியமே. அதன்பிறகு நீங்கள் "எல்லோரும் கிருஷ்ணரது அங்க துணுக்குகளே" என்று காண்பீர்கள். எனவே அவன் கிருஷ்ண உணர்வின் தேவைக்காகத் தான் துன்பத்தில் இருக்கிறான். எனவே நான் அவனிடம் ஏதாவது கிருஷ்ணரைப் பற்றி பேசுகிறேன், அவனுக்கு கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு இலக்கியத்தை கொடுக்கிறேன், அதனால் அவன் என்றாவது ஒரு நாள் கிருஷ்ண உணர்விற்கு வந்து மகிழ்ச்சி அடைவான். இதுதான் ஸ்ரவணம் கீர்த்தனம் (ஸ்ரீமத் பா 7.5.23) ஸ்மரணம் வழிமுறையாகும். நாமும் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இலக்கியங்களிலிருந்து, நபர்களிடமிருந்து கேட்க வேண்டும், மேலும் தொடர்ந்து அதே விஷயத்தை திரும்ப சொல்ல வேண்டும் அதன் பிறகு எல்லாமே மகிழ்ச்சியான சூழ்நிலை ஆகிவிடும் இல்லை என்றால் குப்பைகூளத்தில் காக்கைகளின் சங்கம் தொடரவே செய்யும் மேலும் யாருமே மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.

மிக்க நன்றி.

பக்தர்கள் : எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதாவுக்கே! (முடிவு)