TA/Prabhupada 0733 – காலம் மதிப்புமிக்கது, பல்லாயிரம் பொன் கொடுத்தாலும் ஒரேயொரு விநாடியைகூட திரும்ப பெறம

(Redirected from TA/Prabhupada 0733)


Lecture on SB 7.6.1 -- San Francisco, March 15, 1968

சாணக்கியரின் ஸ்லோகத்தில் ஒரு மிக நல்ல ஸ்லோகம் இருக்கிறது. நேரம் எவ்வளவு விலை மதிப்பற்றதாக கருதப்பட்டது என்பதை நீங்கள் காணலாம். இந்த ஸ்லோகத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். சாணக்கிய பண்டிதர் கூறுகிறார்...... சாணக்ய பண்டிதர் ஒரு பெரும் அரசியல்வாதி. அவர் ஒரு காலத்தில், இந்தியாவின் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரியாக இருந்தவர். எனவே அவர் கூறுகிறார், ஆயுஷ: க்ஷண ஏகோ 'பி ந லப்4ய ஸ்வர்ண-கோடிபி:4. அதாவது "ஒரு நொடி, உங்கள் வாழ்வின் ஒரு நொடி நேரம் கூட......" நொடி. மணி நேரங்களையும், நாட்களையும் பற்றி பேசவில்லை, நொடி. அவர் ஒரு நொடியை கூட கருதினார். இன்றைய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், இன்று 15 மார்ச் 1968, மணி இப்போது ஏழரை அல்லது 7. 35 இப்போது இந்த 1968, 7. 35, கடந்து விட்டது. உடனே இப்போது 7. 36, நீங்கள் திரும்பவும் அந்த 1968 15 மார்ச் மாலை 7. 35 ஐ திரும்பப் பெற முடியாது. நீங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொடுத்தால்கூட, " தயவு செய்து அந்த நொடி திரும்ப வேண்டும்" . இல்லை முடிந்துவிட்டது. எனவேதான் சானக்கிய பண்டிதர் கூறுகிறார், " காலம் மிகுந்த விலைமதிப்பற்றது, நீங்கள் கோடிக்கணக்கான தங்க நாணயங்களை கொடுத்தால்கூட, ஒரு நொடியை கூட உங்களால் திரும்பபெற முடியாது." போனது போனதுதான். ந சேன் நிரர்த2கம்' நீதி:: " இவ்வளவு விலைமதிப்பற்ற காலத்தை ஒன்றுமில்லாததற்காக, எந்த லாபமும் இல்லாமல் நீங்கள் கெடுத்துக் கொண்டீர்கள் என்றால்," ந ச ஹானிஸ் ததோ 'தி4கா, " நீங்கள் எவ்வளவு பெரும் விஷயத்தை இழக்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு இழந்தவராக இருக்கிறீர்கள் என்று எண்ணிப்பாருங்கள்." கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாத விஷயத்தை, ஒன்றுமில்லாததற்காக நீங்கள் இழந்தீர்கள் என்றால், அது எவ்வளவு பெரிய இழப்பு என்று கற்பனை செய்து பாருங்கள்.

எனவே அதே விஷயத்தை பிரகலாத மகாராஜா கூறுகிறார் அதாவது ,த4ர்மான் பா4க3வதன் (SB 7.6.1), கிருஷ்ண உணர்வு அல்லது கடவுள் உணர்வை அடைவது மிக முக்கியம், எனவே, நாம் வாழ்வின் ஒரு நொடியை கூட இழக்கக் கூடாது . உடனேயே தொடங்க வேண்டும். ஏன்? து3ர்லப4ம்' மானுஷம்' ஜன்ம (SB 7.6.1). மானுஷம்' ஜன்ம. இந்த மனிதப் பிறப்பு மிகவும் அரிதானது என்று அவர் கூறுகிறார். பலப் பல பிறவிகளுக்கு பின்தான் இது கிடைக்கிறது. எனவே நவீன நாகரிகம், இந்த மனிதப் பிறப்பின் மதிப்பு என்ன என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பூனைகளையும் நாய்களையும் போல புலன் இன்பததிற்காகத்தான் இந்த உடல் உள்ளது என்று அவர்கள் நினைக்கிறார்கள். பூனைகளும் நாய்களும். அவைகளும் கூட வாழ்க்கையை நான்கு வழிகளில் அனுபவிக்கின்றன. உண்ணுதல், உறங்குதல், பாதுகாத்தல் மற்றும் உடலுறவு கொள்ளுதல். எனவே மனித வாழ்க்கை பூனைகளையும் நாய்களையும் போல கெடுத்துக் கொள்வதற்காக அல்ல. மனித வாழ்க்கை வேறொன்றிற்கானது. மேலும் அந்த "வேறொன்று" என்பது கிருஷ்ண உணர்வு அல்லது கடவுள் உணர்வு ஆகும். காரணம், இந்த மனித உடலைத் தவிர வேறு எந்த உடலிலும், நம்மால் கடவுள் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகம் என்ன, நான் யார், நான் எங்கிருந்து வந்திருக்கிறேன், நான் எங்கே செல்லவேண்டும். இவையெல்லாம் மனித வாழ்க்கைக்கானது. எனவே அவர் கூறுகிறார் " குழந்தைப் பருவத்திலிருந்தே......" உண்மையில் இது மிக முக்கியம். குழந்தைப் பருவத்தில் இருந்தே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இந்த பாகவத தர்மம் அல்லது கிருஷ்ண உணர்வின் வழி முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது மிகவும் அவசியமானது, ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இந்த வாழ்க்கை தான் எல்லாம், மேலும் இந்த உடல் தான் எல்லாம் என்று நினைக்கிறார்கள். வேறு எந்த வாழ்க்கையும் இல்லை. அடுத்த பிறவியில், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. இதற்குக் காரணம் அறியாமை வாழ்க்கை என்பது நித்தியமானது, மேலும் தற்போதைய வாழ்க்கை அடுத்த பிறவிக்கான தயார்படுத்துதல் தான்.