TA/Prabhupada 0800 - தொழிலாளர் புலன்களை எவ்வாறு மகிழ்ச்சியுற செய்வதென்று காரல் மார்க்ஸ் சிந்தித்தார்



730906 - Lecture SB 05.05.01-8 - Stockholm

பிரபுபாதா : காரல் மார்க்ஸ். அவர் தொழிலாளர்களின் புலன்களை எப்படி திருப்திப்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அதுதான் அவருடைய தத்துவம். இல்லையா.

பக்தர் : ஆம்.

பிரபுபாதா : அவர், முதலாளிகள் தங்களது புலன்களை மட்டும் ஆடம்பரமாக திருப்தி செய்து கொண்டிருப்பதாக நினைத்தார். உண்மையில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஏன் இது கிடைக்கக்கூடாது. இதுதான் அவருடைய கொள்கை. மையப்புள்ளி புலன் இன்பம் தான். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முழு உலகமும் பல்வேறு தலைப்புகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மையப்புள்ளி என்னவோ புலன் இன்பம் தான். அவ்வளவே. இங்கு இதனை யாராவது மறுத்துப் பேச முடியுமா? ஆனால் இங்கு ரிஷபதேவர் ந்ரு'லோகே கஷ்டான் காமான் அர்ஹதே, ந அர்ஹதே என்று கூறுகிறார். ந அயம் தே3ஹோ தே3ஹ-பா4ஜாம்' ந்ரு'லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்3-பு4ஜாம்' யே (ஸ்ரீமத்.பா 5.5.1). இந்த வகையான கடுமையான உழைப்பு, நாய்களாலும், பன்றிகளாலும் கூட செய்யப்படுகிறது எனவே மனித பிறப்பை அடைந்துள்ள நாமும், இது போன்ற செயலை செய்ய வேண்டும் என்று பொருளா, நாய்களையும் பன்றிகளையும் போல மட்டும் வேலை செய்து கொண்டிருப்பதா? உண்மையில் அவர்கள் அதைப்போலத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட பெரிதாக எதுவுமில்லை. நாய்களும் பூனைகளும் இரவு பகலாக அதே விஷயத்திற்காக தான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன : எப்படி சாப்பிடுவது, எப்படி தூங்குவது, எப்படி உடலுறவு கொள்வது, எப்படி பாதுகாத்துக் கொள்வது. மனிதர்களும் இதே வகையில் தான் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், தேசியவாதம், சமூக வாதம், அந்த இஸம் இந்த இஸம் என்று, ஆனால், பூனைகளின், பன்றிகளின் செயல்களிலும், மனித சமுதாயத்தின், பெயரளவிலான நாகரீக சமுதாயத்தின் செயல்களிலும் மையப்புள்ளி ஒன்று தான். எனவே ரிஷபதேவர், நாய்களும் பன்றிகளும் புலன் இன்பத்திற்காக கடுமையாக உழைக்கின்றன, ஆனால் இந்த மனித வாழ்க்கை அதற்காக அல்ல. அது வேறு ஒரு பாதைக்காக உள்ளது.

அதனை இந்த நவீன நாகரீகம் உணர்வதில்லை. நவீன மனிதன், சமூகம், அவர்களுக்கு இது தெரியாது. அவர்கள் வெறுமனே, " நாய் வீதியில் உறங்குகிறது. நமக்கு அழகான கட்டிடம், அழகான வீடு, அழகான மெத்தை இருக்க வேண்டும்" என்று நினைக்கின்றனர். இதுதான் நாகரீகத்தின் முன்னேற்றம். இல்லை என்றால் கற்காலத்தது தான் நாம் இதே தரத்தில், எங்கு வேண்டுமானாலும் உறங்கிக்கொண்டு, எந்த சாமான்களும் இல்லாமல், எதுவும் இல்லாமல் இருந்தோமென்றால்..." எப்படியும் விஷயம் தூக்கம்தான், அதைவிட அதிகமாக எதுவும் இல்லை. அதைப்போலவே உண்ணுவதை எடுத்துக் கொண்டோமானால், அல்லது உடலுறவைக் கூட. பிறகு, மனித வாழ்க்கை எதற்கு என்று கூறுகிறீர்கள் என்ற கேள்வி தான் இருக்கும் அதற்கு பதில் தபோ தி3வ்யம்' புத்ரகா யேன ஸத்த்வம்' ஷு2த்3த்4யேத்3 (ஸ்ரீமத்.பா 5.5.1) மனித வாழ்க்கை தவத்திற்கு ஆனது. தபஸ்ய தபஸ்ய என்றால் தவம். மறுத்தல், இவற்றை மறுத்தல். பூனைகளும் நாய்களும் திருப்தியாக உள்ளன- நன்றாக உண்டு, இன்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளன. தற்போது மனிதர்களும் அவ்வாறே உள்ளனர். அவர்கள் பலவிதமான பசியை தூண்டும் பானங்களை பயன்படுத்துகின்றனர். நாம் இதனை ஏரோபிளேனில் தெரிந்துகொண்டோம். சாப்பாட்டிற்கு முன் அவர்கள் ஒயினை அளிக்கின்றனர். அது பசியை தூண்டும், பிறகு அவர்கள் அதிக அளவில் உண்ணுவார்கள். நீங்கள் இதனை குறித்து கொண்டீர்களா?

பக்தர் : ஆம்.

பிரபுபாதா : ஆம், இதுதான் அவர்களுடைய இன்பம் ஆனால் ரிஷபதேவர் கூறுகிறார் அல்லது சாஸ்திரம் கூறுகிறது : இல்லை இல்லை நீங்கள் உண்ணவே கூடாது. அதுதான் பக்குவம்" பாருங்கள். இந்த, மிருகங்களைப் போன்ற மனிதர்கள் அதிகமாகவே சாப்பிடுகிறார்கள், அவர்கள் அனுபவிக்கிறார்கள், ஆனால் உங்கள் வேலை குறைப்பதுதான் உணவே தேவையில்லை என்பது வரைக்கும் குறைப்பதுதான். எனவே அவர்கள் தயாராக உள்ளனரா? இல்லை. இது மிகவும் கடினம். ஆனால் அதுதான் குறிக்கோள். எனவே, நீங்கள் பார்க்கலாம், ஆன்மீகத்தில் முன்னேறியவர்கள்.... ரகுநாத தாச கோஸ்வாமி போல, ரகுநாத கோஸ்வாமி பெரும் பணக்காரனின் மகன் அவரின் தந்தையும், பெரியப்பாவும் மிகப் பெரும் பணக்காரர்கள்.. 500 வருடங்களுக்கு முன், அவர்களுடைய வருமானம் வருடத்திற்கு 12 லட்சம் ரூபாய்கள் ஆகும். அந்த ஒரு லட்ச ரூபாயின் மதிப்பு... தற்போதைய நிலையில், லட்சம் மடங்கு அதிகரித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.