TA/Prabhupada 0816 - இந்த உடல் ஒரு இயந்திரம்- ஆனால் அதனையே நாமென்று ஏற்றுக்கொள்கிறோம்
751015 - Lecture SB 01.07.05-6 - Johannesburg
- யயா ஸம்மோஹிதோ ஜீவ
- ஆத்மானம் த்ரி-குணாத்மகம்
- பரோ 'பி மநுதே 'நர்தம்
- தத்-க்ருதம் சாபிபத்யதே
ஸம்மோஹித, நம்முடைய தற்போதைய நிலை இதுதான், மாயையால் புரியாமலும் குழம்பியும். நாம் பகவானின் நித்ய அம்சங்கள், ஆனால் இந்த ஜட சக்தியினால் பகவானின் வெளிப்புற சக்தியினால் கவரப்பட்டு, நாம் நம்மையே மறந்து மாட்டிக் கொண்டு விட்டோம். வாழ்க்கையின் லட்சியத்தை நாம் மறந்து விட்டோம். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா யே பஹிர்-அர்த-மானின: (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31). கட்டுண்ட ஆத்மா... கட்டுண்ட ஆத்மா என்றால் உயிர் வழிகளைக் குறிக்கும். ஜட இயற்கையின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மீக ஆத்மா. ஜட இயற்கையின் சட்டங்களின்படி நம்முடைய இயற்கை குணத்திற்கு ஏற்ப ஒருவிதமான உடலை நாம் ஏற்கிறோம். இயற்கை குணங்களை நாம் ஏற்படுத்துகிறோம். கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர் என்பதால் அதற்கு அவர் வழி வகுக்கிறார். "சரி போகட்டும்." புலியைப் போல, அது ரத்தத்தை குடிக்க விரும்புகிறது. அல்லது எந்த மனிதனும், ரத்தத்தை குடிக்க விரும்பினால், அவனுக்குப் புலியின் உடல் கொடுக்கப்பட்டு அதற்கு வழி வகுக்கப்படும். உண்பதில் ஒருவனுக்கு பாகுபாடு இல்லை என்றால் - எது கிடைக்குமோ உண்ணலாம் என்று இருந்தால் - அவனுக்குப் பன்றியாக இருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மலத்தை கூட உண்ணலாம்.
இது பகவத்கீதையில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
- ஈஷ்வர: ஸர்வ-பூதானாம்
- ஹ்ருத்-தேஷே 'ர்ஜுன திஷ்டதி
- ப்ராமயன் ஸர்வ-பூதானி
- யந்த்ராரூடானி மாயயா
அது முக்கியமானது. யந்த்ராரூடானி மாயயா நாம் ஒரு இயந்திரத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த உடல் என்பது ஒரு இயந்திரம், ஆனால் இதனை நாம் நாமாகவே கருதுகிறோம். அதற்குப் பெயர்தான் ஸம்மோஹித, "குழப்பநிலை." நீங்கள் காரை ஓட்டிக் கொண்டு இருந்தால், "நான் கார்" என்று நினைத்தால், அது முட்டாள்தனம். அதுபோல்தான் நமக்கு இந்த இயந்திரம் கிடைத்திருக்கிறது, உடல் என்னும் இயந்திரம், நான் இருப்பதால்தான் அது செயல்படுகிறது, அல்லது நான் ஓட்டுகிறேன், அல்லது கிருஷ்ணர் அதனை ஓட்டுவதற்கான அறிவினை எனக்குக் கொடுக்கிறார். ஆனால் நான் ஒரு முட்டாளைப் போல இந்த உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வேன் என்றால் - அவர் காரை ஓட்டுகிறார், அவர் காரைத் தன்னோடு அடையாளம் கண்டுகொண்டால், அவர் ஒரு முட்டாள் மனிதன் - இதற்குப் பெயர்தான் ஸம்மோஹித. யயா ஸம்மோஹிதோ ஜீவ. நான் நேற்று கூறிய உதாரணத்தைப் போன்று, நம்மால் ஓட்டுனரை காண முடியாது, ஓட்டுனர் சென்றவுடன் கார் நகர்வதும் நின்றுவிடுகிறது, அப்போது நாம் உணர்கிறோம், "அந்த ஓட்டுனர் என் தந்தை அல்லது என் மகன் சென்று விட்டான்." நாம் சில சமயம் அழுகிறோம், "என் தந்தை போய் விட்டார் அல்லது என் மகன் போய்விட்டார்," ஆனால் நாம் ஸம்மோஹிதா என்பதால், நாம் உண்மையில் தந்தையையும் மகனையும் பார்த்ததில்லை. கோட்டு சூட்டு அணிந்த இந்த உடலை நாம் மகன் என்றும் தந்தை என்றும் நினைக்கிறோம். அதற்குப் பெயர்தான் ஸம்மோஹ, குழப்பநிலை,
யயா ஸம்மோஹிதோ ஜீவ ஆத்மானம்: ஆன்மீக ஆத்மா, ஆத்மானம் த்ரி-குணாத்மகம்... இந்த உடல் த்ரி-குணாத்மகம். இந்த உடல் ஜட இயற்கையின் முக்குணங்களால் ஆனது. காரணம் குண-ஸங்கோ 'ஸ்ய (பகவத் கீதை 13.22). பகவத்கீதையில் அனைத்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது மேலும் விளக்கப்பட்டுள்ளது. பகவத் கீதை... நீங்கள் பகவத் கீதையை புரிந்துகொண்டால், பகவான் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பகவான் கிருஷ்ணரின் கடைசி வார்த்தைகள் ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). நீங்கள் பகவத் கீதையை உண்மையாகப் புரிந்து கொண்டால் அதன் முடிவு இதுவே. ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது, த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரே: (ஸ்ரீமத் பாகவதம் 1.5.17). ஸ்வ-தர்ம, கிருஷ்ணர் சொல்கிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய. அதாவது நாம் ஒவ்வொருவரும் ... தர்மம் என்றால் தொழில் கடமை. அது தர்மம், பண்பு. எனவே கிருஷ்ணர் ஆணையிடுகிறார் ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). மனதளவிலாவது அதனை ஏற்றுக் கொள்வோமானால்... பாகவதத்தில் இது உறுதி செய்யப்படுகிது. த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரே பதேத் ததோ யதி, பஜன்ன் அபக்வோ 'த. நாரத முனி சொல்கிறார், " மனதளவிலேனும் ஒருவர் - 'சரி கிருஷ்ணர் சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று கூறுகிறார். நாம் வேறு தர்மங்களை நிறுத்திவிட்டு கிருஷ்ண உணர்வு கொள்வோம்' - அப்படி உணர்வுபூர்வமாக ஒருவர் ஏற்றுக் கொண்டால் கூட, முற்றிலும் புரியாவிட்டாலும் கூட, அவர் பாக்கியவான்." அவரும் பாக்கியவான் ஏனென்றால் அவர் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால்தான் நாரத முனி கூறினார், "உணர்வு ரீதியாக ஏற்றுக் கொண்டால் கூட என்று, பின்னர்," பஜன்ன் அபக்வோ (அ)த, "அவனுடைய பக்தி தொண்டு பக்குவம் அடையாவிட்டாலும், அவன் கீழே விழுந்தாலும்," நாரத முனி சொல்கிறார், யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம், "அந்த மனிதனுக்கு இழப்பு என்பது எங்கே?" அதே சமயம் இதனை ஏற்றுக்கொள்ளாத மற்றொருவர், தன்னுடைய பௌதிக பொறுப்புகளைச் சரியாகச் செயல்படுத்துபவராக இருந்தாலும் - அவர் அதனால் அடையும் பயன் என்ன? இதுவே கருத்து. "கிருஷ்ண உணர்வை உணர்ச்சிபூர்வமாகக் கூட ஏற்றுக்கொண்டால், அதற்குப் பின் அவன் வீழ்ச்சி அடைந்தாலும் அதனால் எந்த இழப்பும் இல்லை. நம் பௌதிக கடமைகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், அதனால் கிடைக்கும் பயன் என்ன?" ஆகவே இது முக்கியம் என்று நாரத முனிவர் கூறுகிறார்.