TA/Prabhupada 0839 - நாம் குழந்தைகளாகவும் களங்கமில்லாதவர்களாகவும் உள்ளபோது பாகவத தர்மத்தை பயிற்சி செய்ய



751203 - Lecture SB 07.06.02 - Vrndavana

பிரபுபாதர்: எனவே ஒன்றிணைவது பற்றிய கேள்வி இல்லை. இந்த ஒன்றிணைவது என்பது தவறானது. தனி இருப்பு இருக்க வேண்டும். பின்னர் திருப்தி ஏற்படும். ஒரு நண்பர் தனது நண்பரை நேசிக்கிறார், மற்ற நண்பர் அன்பை பரிமாறிக் கொள்கிறார். அதுதான் திருப்தி, "நீங்கள் என் நண்பர், நான் உங்கள் நண்பன். நாம் ஒருவராகி விடுவோம்." என்பதல்ல. அது சாத்தியமில்லை, அது திருப்தி அல்ல. ஆகையால், மாயாவதிகளாக இருப்பவர்கள், இறைவனிடம் ஒன்றிணைய, உண்மையில் திருப்தி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. செயற்கையாக அவர்கள் ஒன்றாக மாற முயற்சி செய்கிறார்கள். அது திருப்தி அல்ல. யே 'ந்யே 'ரவிந்தாக்ஷ விமுக்த-மானினஸ் த்வய்யஸ்த-பாவாத் அவிஷுத்த-புத்தய: (ஸ்ரீ.பா 10..2.32). "இப்போது நான் பிரம்மத்தை உணர்ந்தேன். நான் பிரம்மம், ஆத்மா. என்று மாயாவதி நினைக்கிறார். எனவே இந்த உடல் முடிந்தவுடன் நான் பரமாத்மாவிடம் ஒன்றாவேன். " கதாகாஷ போதகாஷ, இது கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையான திருப்தி அல்ல. யே 'ந்யே 'ரவிந்தாக்ஷ விமுக்த-மானின: "இப்போது நான் விடுவிக்கப்பட்டேன், நான் பரமாத்மாவுடன் ஒன்றாக இருக்கிறேன்." என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் அதை செயற்கையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். யே 'ந்யே 'ரவிந்தாக்ஷ விமுக்த-மானினஸ் த்வய்யஸ்த-பாவாத் அவிஷுத்த-புத்தய:. முழுமையாக திருப்தி அடைவது எப்படி என்பது அவர்களுக்கு சரியான தகவல் இல்லாததால், எனவே அவை அவிஷுத்த-புத்தய: அவர்களின் புத்தி இன்னும் தூய்மையாக இல்லை. இது தூய்மையற்றது, பௌதிக நிலையில் உள்ளது. ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்யதோ அநாத்ருத-யுஷ்மத்-அங்க்ரய: (ஸ்ரீ.பா 10.2.32).

ஆகையால், நீங்கள் மாயாவாத சந்நியாசிகளைக் காண்பீர்கள், அவர்கள் மீண்டும் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வருகிறார்கள், விலங்குகளுக்கு சேவை செய்ய….. நாடு, சமூகம் என்று சேவை செய்ய. இது மாயாவாத. அவிஷுத்த-புத்தய. அவர் சேவையாளர் மற்றும் சேவகம் பெறுபவர் என்ற உயர்ந்த பதவியில் இருக்க முடியவில்லை. நித்தியமான இறைவன் சேவை செய்யப்படுகிறான், நாம் சேவை செய்யும் வேலைக்காரர்கள். நம்மால் அந்த நிலைக்கு வர முடியவில்லை, எனவே ... சேவை செய்வதே எனது நிலைப்பாடு. கிருஷ்ணருக்கு சேவை செய்வது எனக்கு பிடிக்கவில்லை. நான் அவருடன் ஒன்றாக மாற விரும்பினேன். எனவே எனது நிலைப்பாடு தெளிவாக இல்லை. எனவே, கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்கு பதிலாக, மனிதகுலத்திற்கு சேவை செய்ய நான் மீண்டும் வருகிறேன், சமூகம், தேசம் மற்றும் பல, பல. சேவையை நிராகரிக்க முடியாது. ஆனால் அவிஷுத்த-புத்தய:. என்பதால், ஒழுங்காக பயிற்சி பெறவில்லை, கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்கு பதிலாக அவரது அசுத்தமான மனநிலை, ஏனென்றால், அவர் சேவையை விரும்புவதால், ஆனால் நிராகார, நிர்விஷேஷ, கிருஷ்ணர் இல்லாமல், அவர் எங்கே சேவை செய்வார்? சேவை எவ்வாறு பயன்படுத்தப்படும்? எனவே அவர்கள் மீண்டும் வருகிறார்கள் - நாடு, சமூகம் ... அவர்கள் கைவிட்டவுடன், ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா: "இவை அனைத்தும் மித்யா." ஆனால் உண்மையில் சேவையை வழங்குவது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரியாது என்று. ஆருஹ்ய க்ருச்ச்ரேண பரம் பதம் தத: பதந்த்யத:(ஸ்ரீ.பா 10.2.32) எனவே அவர்கள் கீழே விழுகின்றனர், மீண்டும் பௌதிக நடவடிக்கைகள்.

எனவே இந்த விஷயங்கள் வாழ்க்கையின் தெளிவற்ற கருத்தாக்கத்தின் காரணமாக நடக்கின்றன. அதுதான் பிரஹ்லதா மஹாராஜா. எனவே வாழ்க்கையின் தெளிவான கருத்து, கிருஷ்ண பகவானை எவ்வாறு சேவிப்பது, என்பது பாகவத-தர்மம் என்று அழைக்கப்படுகிறது. இதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர் பல முட்டாள்தனமான சேவையில் ஈடுபடும்போது, ​​அது மிகவும் கடினமாக இருக்கும் இந்த தவறான ஈடுபாட்டிலிருந்து அவரை இழுத்து மீண்டும் அவரை கிருஷ்ணருக்கு சேவை செய்ய சொல்லவேண்டும். ஆகவே, நாம் குழந்தைகளாக இருக்கும்போது-நாம் மாசுபடவில்லை-பாகவத-தர்மத்தில் பயிற்சி பெற வேண்டும். அதுதான் பிரஹ்லதா மஹாராஜாவின் பொருள். கௌமார ஆசரேத் ப்ராஜ்ஞோ தர்மான் பாகவதான் இஹ துர்லபம் மானுஷ (ஸ்ரீ.பா 7.6.1). நாம் சேவை செய்கிறோம். பறவைகள் சேவை செய்கின்றன. அவர்களுக்கு சிறிய குழந்தைகள் கிடைத்துள்ளது. அவர்கள் உணவை எடுத்துக்கொண்டு மிகவும் கடினமாக உழைத்து வாயில் கொண்டு வருகிறார்கள், சிறிய குழந்தைகள், "அம்மா, அம்மா, எனக்குக் கொடுங்கள், எனக்குக் கொடுங்கள்" என்று கோஷமிட்டு, உணவை உண்ணுகிறார்கள். அங்கே சேவை இருக்கிறது. சேவை இருக்கிறது. யாரும் சேவை இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். எல்லோரும் சேவை செய்கிறார்கள் . ஒரு மனிதன் இரவும் பகலும் கடினமாக உழைக்கிறான். ஏன்? குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு, மனைவிக்கு சேவை செய்ய. சேவை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அவருக்கு எங்கு சேவை வழங்குவது என்று தெரியவில்லை. எனவே கிருஷ்ணர் கூறினார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் (ப.கீ 18.66): "எனக்கு சேவையை கொடுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்." இந்த தத்துவம், பாகவத-தர்மம்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய ஸ்ரீல பிரபுபாதர்.