TA/Prabhupada 0931 - ஒருவன் பிறக்கவில்லை என்றால் அவன் எப்படி இறப்பான்



730424 - Lecture SB 01.08.32 - Los Angeles

ஏனெனில் நாம் கிருஷ்ணருடைய அங்க துணுக்கு. கிருஷ்ணர் அஜ. அஜ என்றால், பிறப்பும் இறப்பும் அற்றவர் என்று பொருள். எனவே நாம் கூட அஜ. வேற எப்படி இருக்கமுடியும்? கிருஷ்ணர், நான் கிருஷ்ணருடைய அங்கத்துணுக்கு. அதே உதாரணத்தை நாம் காணலாம். என்னுடைய, என்னுடைய தந்தை, மகிழ்ச்சியாக இருந்தால், நான் அவருடைய மகன். நான் ஏன், நான் எப்படி மகிழ்ச்சியற்றவனாக இருப்பேன்? இதுவே இயற்கையான முடிவு. ஏனெனில், என் தந்தை அனுபவிப்பதைப் போல, நானும் அவருடைய சொத்தை அனுபவிப்பேன். அதைப் போலவே, கடவுள் எல்லா சக்தியும் உடையவர். கிருஷ்ணர் உடல் வலிமையும், எல்லா அழகையும், எல்லா ஞானத்தையும், எல்லாவற்றையும், பூரணமாக பெற்றிருப்பவர். நான் பூரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் அங்க துணுக்கு என்பதால், நான் கடவுளின் எல்லா குணங்களையும் துளியின் அளவுக்கு பெற்றுள்ளேன். அதாவது...... பகவான் இறக்க மாட்டார். அவர் அஜ. எனவே நானும் கூட இறக்க மாட்டேன். இதுவே என்னுடைய நிலை. மேலும் இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது: ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித். கிருஷ்ணர், ஆத்மாவைப் பற்றி விளக்கும்போது, ஆத்மா என்றும் பிறப்பதில்லை என்று கூறுகிறார், ந ஜாயதே ந ம்ரியதே. மேலும் ஒருவன் பிறக்கவே இல்லை என்றால் அவன் எப்படி இறப்பான்? இறப்பைப் பற்றிய கேள்வியே இல்லை. பிறப்பெடுத்தவனுக்கு இறப்பும் உண்டு. ஒருவன் பிறக்கவில்லை என்றால் பிறகு இறப்பைப் பற்றிய கேள்வியே இல்லை. ந ஜாயதே ந ம்ரியதே வா . எனவே, நாம் கிருஷ்ணருடைய அங்க துணுக்கு. கிருஷ்ண அஜ என்பதை போலவே நாமும் அஜ. அதை நாம் அறிய மாட்டோம். இதுதான் அறியாமை. இதுதான் அறியாமை.

அவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு உயிர்வாழியும் ஆன்மீக ஆத்மா என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவனுக்கு பிறப்பு இல்லை. அவனுக்கு இறப்பு இல்லை. அவன் நித்தியமானவன். நித்ய: ஷாஷ்வதோ 'யம், நித்தியமாக உள்ளவன், புராண: புராதனமானவன், ந ஹன்யதே. முடிவு என்னவெனில்: ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (ப.கீ. 2.20) எனவே இந்த உடல் அழிந்தபிறகு, ஆத்மா அழிவதில்லை. அவன் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்கிறான். இதுவே நம்முடைய நோய். இது பவ-ரோக என்று அழைக்கப்படுகிறது. பவ ரோக என்றால் பௌதிக நோய். எனவே கிருஷ்ணர், உன்னத உயிர்வாழி என்பதால், நித்யோ நித்யானாம்' சேதனஷ் சேதனானாம் (கட உபனிஷத் 2.2.13) கிருஷ்ணர் நம்மை போலவே இருக்கிறார். அல்லது நாம் கிருஷ்ணரின் பிரதி. வித்தியாசம் என்னவென்றால் கிருஷ்ணர் விபு, எல்லையற்றவர் மேலும் நாம் அணு, எல்லைக்கு உட்பட்டவர்கள். இதுவே வித்தியாசம். மற்ற வகையில், குணத்தின் படி நாம் கிருஷ்ணரைப் போன்றவர்கள். எனவேதான் கிருஷ்ணர் எந்தெந்த தன்மைகளை பெற்றிருக்கிறாரோ, நாமும் அந்த எல்லாத் தன்மைகளையும் பெற்றுள்ளோம். கிருஷ்ணர் எதிர்பாலினத்தவரை விரும்பும் தன்மையை பெற்றிருக்கிறார். எனவே நமக்கும் அந்தத் தன்மை, எதிர்பாலினரை விரும்பும் தன்மை உள்ளது. அந்த அன்பின் தொடக்கம் ராதா - கிருஷ்ணரிடம் உள்ளது, ராதா கிருஷ்ணருக்கு இடையிலான நித்தியமான அன்பு. எனவே நாம் கூட நித்தியமான அன்பை விரும்புகிறோம், ஆனால் நாம் பௌதிக விதிகளால் பந்தப்பட்டிருப்பதால், அது தடைபடுகிறது. அது தடைபடுகிறது.

எனவே நாம் அந்த தடையை விட்டு வெளியே வந்தால், கிருஷ்ணர் மற்றும் ராதாராணியிடம் உள்ள அன்பு லீலைகளைப் போலவே நாமும் பெறலாம். எனவே நம்முடைய வேலை, எப்படி பரமபதம் அடைவது, திரும்ப கிருஷ்ணரிடம் செல்வது என்பதுதான். ஏனென்றால் கிருஷ்ணரிடம் போவது என்றால், கிருஷ்ணர் நித்தியமானவர் என்பதால், நாமும் நித்திய உடலை பெறுவது. அதாவது, ஜனாதிபதி நிக்சனுக்கு செயலாளர், அல்லது ஒரு சேவகனாவது போல. அவரும் ஒரு பெரிய மனிதர் தான். அவரும் ஒரு பெரிய மனிதர் தான், ஒருவனுக்கு ஒரு சிறந்த தன்மை இல்லாமல், ஜனாதிபதி நிக்சனுக்கு செயலாளராகவோ, அல்லது சேவகனாகவோ முடியாது. அது சாத்தியமல்ல. ஒரு சாதாரண மனிதன் ஜனாதிபதிக்கு சேவகனாகவோ செயலாளராகவோ முடியாது. அதைப்போலவே இறைவனுடைய பரமபதம் அடைவது என்றால், நீங்களும் அதே வகையான உடலை, கிருஷ்ணர் பெற்றிருப்பது போன்ற உடலை பெற வேண்டும். நீங்கள் அஜ ஆவீர்கள். அஜோ நித்ய: ஷாஷ்வதோ 'யம். இது ஒரு நோய், அதாவது நாம் உடலை மாற்றி கொண்டே உள்ளோம். எனவே கிருஷ்ணர் அஜ எனப்படுகிறார்.