TA/Prabhupada 0958 - நீங்கள் பசுக்களை நேசிப்பதில்லை. அவைகளை நீங்கள் இறைச்சி கொட்டிலுக்கு அனுப்பி விடுகின்

(Redirected from TA/Prabhupada 0958 -)


750624 - Conversation - Los Angeles

டாக்டர் ஆர்: ஞானம் பெறுவதற்கு ஜெபம் செய்தல் அவசியமா என்ன?

பிரபுபாதர்: பகவானுடன் தொடர்பில் இருப்பதற்கு அதுவே மிக சுலபமான வழி. ஏனெனில் பகவானும் பகவானுடைய நாமமும் முழுமையானவை, அந்த நாமங்களை ஜெபம் செய்யும் பொழுது நாம் நேரடியாக பகவானுடன் தொடர்பில் இருக்கிறோம்.

டாக்டர் கிராஸ் லி: சம்பிரதாய வழக்கிலுள்ள பக்திமார்க்கத்தில் சக மனிதனை நேசிப்பது கூறப்படுகிறது அதைவிட இது எந்த விதத்தில் சிறந்தது என்கிறீர்கள்?

பிரபுபாதர்: நீங்கள் சக மனிதர்களை நேசிக்கும் அளவிற்கு சக மிருகங்களை நேசிப்பதில்லை. நீங்கள் மனிதனை நேசிக்கிறீர்கள் ஆனால் மிருகங்களை இறைச்சி கொட்டிலுக்கு அனுப்பி விடுகிறீர்கள். அதுதான் உங்களுடைய நேசம்.

டாக்டர் உல்ஃப்: சிப்பாய்களை போருக்கு...

பிரபுபாதர்: என்ன?

டாக்டர் உல்ஃப்: சிப்பாய்களை போருக்கு கொல்வதற்காக...

பிரபுபாதர்: இல்லை, முதலில் மனிதனை பற்றி படியுங்கள், அதற்கு அப்புறமாக சிப்பாய்களுக்கு செல்லலாம். நம்முடைய நேசம் குறைபாடு உள்ளது. இந்த மரத்தைப் போன்று உங்களால் நேசிக்க முடியும் ஆனால். இதில் ஆயிரக்கணக்கான இலைகளும் மலர்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் நீங்கள் நீர் வார்க்க வேண்டும், பிறகு உங்கள் வாழ்க்கை முழுவதுமே முடிந்துவிடும். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், அதன் வேருக்கு மட்டும் நீர் வார்ப்பீர்கள்; அது அனைத்து இடத்திற்கும் சென்று விடும். நீங்கள் புத்திசாலியாக இல்லை என்றால், ஒவ்வொரு இலைக்கும் நீர் வார்த்துக் கொண்டிருப்பீர்கள்... உங்கள் உடல் முழுவதற்குமே உணவு தேவைப்படுகிறது. அதற்காக காதுக்கும், கண்ணுக்கும், நகத்துக்கு ஒவ்வொரு உறுப்புகாக நாம் உணவு செலுத்த முடியாது... இல்லை. வயிற்றுக்கு தான் உணவளிக்கிறோம், அது அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், மயா ததம் இதம் சர்வம். அதனை முன்பே நாம் படித்து இருக்கிறோம். எனவே நாம் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்தினால், நமது அன்பு அனைத்து இடத்திற்கும் வினியோகிக்கப்படுகிறது. கிருஷ்ணரை நேசிக்காமல் மற்ற ஒருவரை நேசித்தால், இன்னும் வேறொருவர் "என்னை நேசிக்கவில்லை." என்று அழக்கூடும்.

டாக்டர் உல்ஃப்: நான் ஒரு கேள்வி கேட்கலாமா, ஸ்ரீல பிரபுபாத?

பிரபுபாதர்: முதலில், இதைப் புரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ணர் சொல்வதுபோல, மயா ததம் இதம் சர்வம்: "என்னுடைய சக்தியினால் நான் எங்கும் விரிவடைந்து இருக்கின்றேன்." அவர் கூறும் எல்லா இடங்களிலும் நாம் எப்படி செல்வது? நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், உங்கள் அன்பு எல்லா இடத்திற்கும் சென்று விடும். நீங்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினால், அந்த வரியானது பல்வேறு விழாக்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இலாகாவுக்கும் சென்று உங்கள் வரியை செலுத்துவது உங்கள் வேலை அல்ல. அரசாங்கத்தின் நிதி நிலையத்திற்கு கட்டினால் போதும், அது எல்லா இடத்திற்கும் சென்று விடும். இது தான் புத்திசாலித்தனம். "நான் ஏன் நிதிநிலை அதற்கு பணம் செலுத்தவேண்டும்? நான் கட்டிக் கொள்கிறேன், இந்த இலாகாவுக்கு, அந்த இலாகாவுக்கு, அந்த இலாகாவுக்கு அந்த இலாகாவுக்கு," உன்னால் செல்ல முடியும், ஆனால் அது போதுமானதாக இருக்காது, முழுமையானதாகவும் இருக்காது. ஆகவே நீ மனிதத்தன்மையை நேசிக்கலாம், ஆனால் கிருஷ்ணரை நேசிக்க வில்லை என்றால், உன்னால் பசுக்களை நேசிக்க முடியாது, அவற்றை இறைச்சி கொட்டிலுக்கு தான் அனுப்புவாய். எனவே உன்னுடைய அன்பானது குறை உள்ளதாகவே இருக்கும். எப்போதும் நிறைவு பெறாது. ஆனால் நீ கிருஷ்ணரை நேசித்தால், ஒரு சிறு எறும்பைக் கூட நேசிப்பாய். ஒரு எறும்பைக் கூட கொல்வதற்கு நீ விரும்ப மாட்டாய். அதுவே உண்மையான அன்பு.

டாக்டர் ஆர்: எங்கள் அன்பு சரி இல்லை என்பதையும். நாங்கள் விலங்குகளை இறைச்சி சாலைகளுக்கு அனுப்புகிறோம் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பிரபுபாதர்: ஆமாம். சரி இல்லாத அன்பு அன்பே இல்லை.

டாக்டர் ஆர்: ஆனால் அதன் மாற்று உண்மையா, நாம் நன்றாக ஜெபம் செய்கிறோம் என்பதற்காக நம் சக மனிதர்களை நேசிக்க முடியாவிட்டாலும் கிருஷ்ணரை நேசிக்க முடியுமா?

பிரபுபாதர்: நாம் ஜெபம் மட்டும் செய்யவில்லை. மற்ற வேலைகளும் செய்கிறோம். நாம் வெறுமனே அமர்ந்து கொண்டு ஜபம் மட்டும் செய்வதில்லை. நாம் ஜெபம் செய்வதனால் அனைவரையும் நேசிக்கவும் செய்கிறோம். அதுவே உண்மை. ஹரே கிருஷ்ண ஜபம் செய்பவர்கள், எந்த விலங்கையும், தாவரத்தையோ கொல்வதற்கு ஒப்புக்கொள்வதில்லை, ஏனென்றால் அனைத்தும் பகவானின் அங்கம் என்பது அவர்களுக்கு தெரியும். ஏன் அவசியம் இல்லாமல் ஒருவர் கொல்லப்பட வேண்டும்? அதுதான் நேசம் அன்பு.

டாக்டர் ஆர்: அன்பு என்றால் கொல்லாமல் இருப்பதா?

பிரபுபாதர்: அது மட்டுமல்ல பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் இது ஒன்று. உன் மகனை நீயே கொல்வாயா? ஏன்? ஏனெனில் நீ அவனை நேசிக்கிறாய்.

டாக்டர் ஜூடாய்: அதன் மறு புறத்தை உங்களால் விளக்கமுடியுமா? பகவத் கீதையை போர்க்களத்தின் பின்னணியில்தான் பாடப்பட்டது அதில் கிருஷ்ணர் அர்ஜுனனை அவனது உறவினர்களை கொள்வதற்குத்தான் போகச் சொல்கிறார் க்ஷத்ரியனாக அவனுடைய கடமையாக அது இருப்பதனாலா?

பிரபுபாதர்: நிச்சயமாக. ஏனெனில் பௌதிக உலகத்தில், ஒரு சமநிலையை சமுதாயத்தில் நிலைநாட்டுவதற்கு சில சமயங்களில் கொலை அவசியமாகிறது. உங்கள் நாட்டுக்குள் எதிரி வந்துவிட்டான் என்றால் உங்களால் எப்படி வெறுமனே அமர்ந்து இருக்க முடியும் போரிட்டு தானே ஆக வேண்டும்? ஆனால் அதற்காக நீங்கள் இஷ்டப்பட்டவர்களை எல்லாம் கொள்ளலாம் என்று அர்த்தமில்லை. அந்த விசேஷமான சூழ்நிலையில் சண்டையிடுதல் அவசியமாகிறது. இப்படியாக சத்திரியர்கள் பாதுகாப்பு தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.