TA/Prabhupada 0977 - நம் ஆன்மீக உடலுக்கு தகுந்தார் போல பௌதிக உடல் வகுக்கப்பட்டுள்ளது



730408 - Lecture BG 04.13 - New York

இப்போது கிருஷ்ணர் சொல்கிறார்: சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம-விபாகஷ: (ப.கீ. 4.13). இப்போது... நாம் விலங்குகளாக இருக்கும் வரை விலங்கு உடலை நாம் கடக்க வேண்டும். பரிணாம வளர்ச்சியினால், நாம் இந்த மனித உடலைப் பெற்று இருக்கிறோம். இப்போது நமக்கு பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதான் நம்முடைய உண்மையான பிரச்சனை. ஆனால் மக்கள், சரியான கல்வி அறிவு இல்லாமையாலும் ஞானம் இன்மையாலும்... உயிருக்கு மறு ஜன்மம் உண்டு என்பதை எந்த கல்விக்கூடமும் போதிப்பதில்லை. அவர்களுக்கு தெரியாது. பெரிய எம் ஏ, பி ஹெச்டி, எல்லாம் உயிர்வாழியின் உண்மையான நிலையை அறிய மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மையான பிரச்சனை. அவர்களுக்கு உண்மையான பிரச்சனை என்ன என்பதே தெரியாது.

உண்மையான பிரச்சனை... பகவத்கீதை சொல்லியுள்ளது. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி (ப.கீ. 13.9), பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி ஆகியவையே உண்மையான பிரச்சனை. யாருக்கும் பிறப்பு எடுக்க விருப்பமில்லை. அல்லது யாருக்கும் இறக்க விருப்பமில்லை. பிறப்பு மற்றும் இறப்பு. எங்கு பிறப்பு இருக்கிறதோ, அங்கு இறப்பும் இருக்கிறது. பிறந்தது எல்லாம் இறக்க வேண்டும். அதுவே ஜென்ம மிருத்யு. வயோதிகம். உயிருடன் இருக்கும் வரை, உன்னுடைய நிலை மாறிக் கொண்டேதான் இருக்கும். அதில் ஒரு நிலைதான் வயோதிகம். பல புகார்கள் உள்ளன. ஜெரா. வியாதி. நமக்கு நோய்வாய்படும் பொழுது. அனைவருக்கும் நோய் வாய்க்கும். அனைவருக்கும் வயோதிகம் வரும். அனைவரும் இறக்க வேண்டும். இதுதான் பிரச்சனை. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி து:க-தோஷாநுதர்ஷனம். நாம் துன்பமயமான நம் வாழ்க்கையில் துன்பத்தை குறைக்க முயற்சி செய்கிறோம். அதுவே வாழ்க்கை போராட்டம். நாம் விஞ்ஞானிகள். இந்த துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு பல்வேறு வழிகளை நாம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த துன்பமான நிலையான இடத்தில், ஜென்ம-ஜரா வியாதியை நாம் தவிர்க்க முயற்சிக்கிறோம். ஏனெனில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. விஞ்ஞான வளர்ச்சியினால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. சில சமயங்களில் இறப்பற்ற தன்மை விஞ்ஞான வளர்ச்சியினால் வரும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். முன்பும் கூட ராவணன் ஹிரண்யகஷிபு போன்ற நாத்திகவாதம் மனிதர்களால் இது முயற்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவர்களாலும் பிறப்பு, இறப்பு, மூப்பு, வயோதிகம் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறுத்த முடியவில்லை. அது சாத்தியமில்லை. ஏதாவது ஒரு வழிமுறை இருக்குமானால் அது கிருஷ்ணபக்தி மட்டுமே. நாம் கிருஷ்ண உணர்வை பெறுவோம் ஆனால் நமக்கு ஒரு உடல் கிடைக்கும். கிடைக்காது... நம்மிடம் ஏற்கனவே உடல் இருக்கிறது ஆன்மீக உடல். ஆன்மீக உடலின்மீது தான் இந்த பௌதிக உடல் உருவாகியிருக்கிறது. ஆடையைப் போன்று. உனக்கு மேல் சட்டை உன் உடலின் அளவுக்குத்தான் வெட்டப்படுகிறது. அதுபோலவே, நம் ஆன்மீக உடலுக்கு தகுந்தார் போல் தான் இந்த பௌதிக உடல் வெட்டப்பட்டுள்ளது. எனவே நமக்கு ஆன்மீக உடல் ஒன்று உள்ளது. இந்த பௌதிக உடல் வெறும் வெளிப்பூச்சு தான். கதையைப் போன்று. உன் சட்டையும் மேலங்கியும் உன் உடலை மறைக்கிறது. அதுபோல, இந்த உடல், ஸ்தூல, சூக்ஷ்ம உடல் பஞ்ச பூதங்களால் ஆனது... ஸ்தூல உடல் நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகியவற்றால் ஆனது. சூஷ்ம உடல் மனம், புத்தி, அகங்காரம், ஆகியவற்றால் ஆனது. அதற்கு சட்டையும் மேலங்கியும். இந்த சட்டைக்கும் மேலங்கிக்கும் உள்ளேதான் ஆன்மா இருக்கிறது. ஆக இந்த பௌதிக உடலுக்குள் ஆன்மா சிறைப்பட்டு இருக்கிறது. இந்த மனித உடல் பெற்ற நம்முடைய வேலை... மிருக உடல் கிடைத்திருந்தால் நம்மால் அதை செய்ய முடியாது. மனித உடலினால் "நான் இந்த உடல் அல்ல." என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். உடல், பௌதிக உடல், வெளிப்பூச்சு தான், எனக்கு இந்த உடல் கிடைத்திருக்கிறபடியால் தான், பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி என்பதற்கு நான் உள்ளாகிறேன். இந்த மனித உடலில் நான் அதை உணர்கிறேன். எனவே இந்த பிறப்பு, இறப்பு சுழலில் இருந்து எப்படி வெளிவருவது என்ற வழிமுறையை ஏற்றுக்கொண்டால், இந்த மனித பிறவிக்கு வெற்றி. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். எப்படி நாம் இந்த பௌதிக உடலில் இருந்து வெளிவருவது என்று மக்களுக்கு சொல்லிக் கொடுத்து உதவுகிறோம், அதனால் நம்முடைய ஆன்மீக உடலைத் திரும்பப் பெறுகிறோம், அந்த ஆன்மீக உடலை கொண்டு, உன் வீடுபேற்றை அடைய முடியும். அதுவே வழிமுறை.