TA/Prabhupada 1030 - கடவுளைப் புரிந்துகொள்வது தான் மனித வாழ்வின் ஒரே நோக்கம்
(Redirected from TA/Prabhupada 1030 - Title to be added)
740628 - Lecture at St. Pascal's Franciscan Seminary - Melbourne
கடவுளைப் புரிந்துகொள்வது தான் மனித வாழ்வின் ஒரே நோக்கம். வேத இலக்கியங்களில் 'அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி எனக்கூறப்பட்டிருக்கிறது. கிருஷ்ண என்பது கடவுளின் பெயர். என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் கிருஷ்ணரின் பெயர், கிருஷ்ணரின் ரூபம், கிருஷ்ணரின் குணங்கள், கிருஷ்ணரின் செயல்கள்... அத: ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி அதாவது பெயரிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆக 'அத: ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 17.136). இந்த்ரிய என்றால் புலன்கள். நம்மால் கிருஷ்ண அல்லது என்பது என்னவென்று புரிந்துகொள்ள முடியாது அல்லது அவர் நாமம், அவரது குணங்கள், அவரது லீலைகள்.... இந்த துறைகள் நிறைந்த ஐட புலன்களால் புரிந்துகொள்ள முடியாது. பிறகு எப்படி புரிந்துகொள்வது? மனித வாழ்வென்பது கடவுளை புரிந்து கொள்வதற்காக தான் அல்லவா? அதுதான் மனித வாழ்வின் ஒரே நோக்கம். இந்த இயற்கை, ஜட இயற்கை, நமக்கு மனித வாழ்வை பெறும் வாய்ப்பை தருகிறது. இப்பிறவியில் இருக்கும் வசதிகள், கடவுளைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. மற்ற பிறவிகளில் - நாய், பூனை, மரங்கள் மற்றும் பலர்; 84,00,000 வகையான உயிரினங்கள் இருக்கின்றன - இந்த மற்ற பிறவிகளில் கடவுளைப் புரிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உங்கள் நாட்டு நாய்கள் எல்லாவற்றையும் அழைத்து, "இங்கே வாருங்கள். நாம் கடவுளைப் பற்றி பேசுவோம்." என்றால், அவர்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இந்த மனிதப் பிறவியில் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவா, அமெரிக்காவா அல்லது ஆஸ்திரேலியாவா என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு மனிதனும், முயற்சி செய்து சாத்திரங்களைப் படித்தால் - பைபிளோ, பகவத் கீதையோ, பாகவதமோ - அவன் கடவுளை புரிந்து கொள்வான்.