TA/Prabhupada 1059 - எல்லோருக்கும் பகவானுடன் ஒரு குறிப்பிட்ட உறவு இருக்கும்

From Vanipedia


எல்லோருக்கும் பகவானுடன் ஒரு குறிப்பிட்ட உறவு இருக்கிறது
- Prabhupāda 1059


660219-20 - Lecture BG Introduction - New York

பகவானுடைய பக்தரான உடனே, அவருக்கு பகவானுடன் நேரடி உறவும் ஏற்படுகிறது. அது ஒரு நீண்ட கருப்பொருள், ஆனால் அது சுருக்கமாக சொல்லப்படலாம் அதாவது ஒரு பக்தர் முழுமுதற் கடவுளுடன் ஐந்து விதமாக உறவு கொண்டுள்ளார். ஒருவர் செயலற்ற நிலையில் ஒரு பக்தராக இருக்கலாம், ஒருவர் செயல் நிலையில் ஒரு பக்தராக இருக்கலாம், ஒருவர் நண்பனாக ஒரு பக்தராக இருக்கலாம், ஒருவர் பெற்றோராக ஒரு பக்தராக இருக்கலாம், மேலும் ஒருவர் காதலுக்குரிய ஒரு பக்தராக இருக்கலாம்.

ஆகையால் அர்ஜுனர் பகவானின் நண்பர் என்ற உறவில் ஒரு பக்தராக இருந்தார். பகவான் ஒரு நண்பராகலாம். நிச்சயமாக, இந்த நட்பும், நமக்கு இருக்கும் இவ்வுலக வாழ்க்கையின் நட்பின் கருத்திற்கும் ஒரு கடல் அளவிற்கு வித்தியாசம் உண்டு. இது திவ்வியமான நட்பு, எல்லோரும் பகவானுடன் நட்பு கொள்ள முடியாது. எல்லோருக்கும் பகவானுடன் ஒரு குறிப்பிட்ட உறவு இருக்கும். மேலும் அந்த குறிப்பிட்ட உறவு குற்றமற்ற பக்தி மயத் தொண்டால் வெளிக் கொண்டுவரப்படுகிறது. இன்றைய வாழ்க்கையின் காலக்கட்டத்தில் நாம் முழுமுதற் கடவுளை மட்டும் மறக்கவில்லை, ஆனால் பகவானுடன் நமக்கு இருக்கும் நித்தியமான உறவையும் மறந்ததுவிட்டோம். ஒவ்வொரு உயிர் இனமும், பல இலட்சத்திலும், பல கோடியிலும் இருந்தும் ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் பகவானுடன் ஒரு குறிப்பிட்ட நித்தியமான உறவு இருக்கிறது. அதைத்தான் ஸ்வரூப என்று கூறுகிறோம். ஸ்வரூப. மேலும் பக்தி மயத் தொண்டால் ஒருவர் மீண்டும் தானே ஸ்வரூபவிற்கு புத்துயிர் அளிக்கலாம். அந்த நிலையை ஸ்வரூப-சித்தி என்று கூறுகிறோம், குற்றமற்ற ஒருவருடைய உடலமைப்பின் நிற்கும் நிலை.

ஆகையால் அர்ஜுனர் ஒரு பக்தர், மேலும் முழுமுதற் கடவுளுடன் ஒரு நண்பராக தொடர்புடையவர். இப்பொழுது, இந்த பகவத்-கீதை அர்ஜுனருக்கு விளக்கப்பட்டது, மேலும் அவர் அதை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்? அதுவும் நன்றாக கவனிக்கப்பட வேண்டும். அர்ஜுனர் எவ்வாறு பகவத்-கீதையை ஏற்றுக்கொண்டார் என்பதை பத்தாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு என்றால்:

அர்ஜுன உவாச
பரம் ப்ரஹம பரம் தாம
பவித்ரம் பரமம் பவான்
புருஷம் சாச்வதம் திவ்யமா
திதேவமஜம் விபும்
ஆஹுஸ்த்வாம்ருஷய:
ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ்ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ:
ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே
(ப.கீ.10.12-13).
ஸர்வமேதத்ருதம் மன்யே
யன்மாம் வதஸி கேசவ
ந ஹி தே பகவன்வ்யக்திம்
விதுர்தேவா ந தானவா:
(ப.கீ.10.14).

இப்பொழுது, முழுமுதற் கடவுளிடமிருந்து பகவத்-கீதையை கேட்டபின் அர்ஜுனர் கூறுகிறார், அவர் கிருஷ்ணரை பரம் ப்ரஹம, நித்தியமான ப்ரமனாக ஏற்றுக் கொள்கிறார். ப்ரமன். அனைத்து உயிர் இனங்களும் ப்ரமன். ஆனால் நித்தியமான உயிர் இனங்களும் அல்லது முழுமுதற் கடவுளும், நித்திய ப்ரமன் அல்லது நித்தியமான உயிர் இனங்களாவார்கள். மேலும் பரம் தாம. பரம் தாம என்றால்அவர் மற்ற அனைத்தையும்விட நித்தியமானவர். மேலும் பவித்ரம். பவித்ரம் என்றால் அவர் பௌதிக அசுத்தமில்லாத தூய்மையானவர். மற்றும் அவர் புருஷம் என்று அழைக்கப்படுகிறார். புருஷம் என்றால் உன்னதமான அனுபவிப்பாளர். சாச்வதம், சாச்வதம் என்றால் ஆதியிலிருந்து, அவர் தான் ஆதி தேவர்; திவ்யம், திவ்வியமானவர்; தேவம், முழுமுதற் கடவுள்; அஜம், பிறப்பில்லாதவர், விபும், மிகச் சிறந்தவர்.

இப்பொழுது ஒருவருக்கு சந்தேகம் வரலாம், ஏனென்றால் கிருஷ்ணர் அர்ஜுனரின் நண்பர், ஆகையினால் அவர் இதையெல்லாம் தன் நெருங்கிய நண்பரிடம் கூறலாம். ஆனால் அர்ஜுனர், இதுபோன்ற சந்தேகங்களை பகவத்-கீதை படிப்பவர்களின் உள்ளத்திலிருந்து வெளியேற்ற, அதிகாரிகளின் மூலம் தன் கருத்துரைகளை நிலைப்படுத்தினார். அவர் கூறினார் அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டார். அர்ஜுனராகிய, தன்னால் மட்டுமல்ல, ஆனால் அவர் அதிகாரிகளாகிய, நாரத, அசித, தேவல, வியாச, ஆகியோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த தனித்துவம் பெற்றவர்கள், வேத ஞானத்தை பரப்புவதில் மகத்துவம் பெற்றவர்கள். அவர்கள் அனைத்து ஆச்சார்யர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். ஆகையினால் அர்ஜுனர் கூறுகிறார் "இதுவரை தாங்கள் என்னிடம் பேசியது எதுவாயினும் நான் அதை முற்றிலும் குறைவற்ற ஒன்றாக ஏற்றுக் கொள்கிறேன்."