TA/Prabhupada 1060 - பகவத்-கீதையை ஒருவர் பணிவுள்ள ஆன்மாவுடன் பெற்றுக் கொள்ளவில்லை என்றால்



660219-20 - Lecture BG Introduction - New York

ஸர்வ மேதத் ருதம் மன்யே (ப.கீ.10.14) "நான் ஏற்றுக்கொள்கிறேன், நான் நம்புகிறேன் அதாவது நீங்கள் பேசியது எதுவாயினும், அவை அனைத்தும் சரியானதே. மேலும் உங்களுடைய ஆளுமை, உங்களுடைய முழுமுதற் கடவுள் ஆளுமை, புரிந்துக் கொள்வது மிகவும் கடினமாகும். ஆகையினால் நீங்கள் தேவர்களால் கூட அறியப்படமாட்டீர்கள். நீங்கள் தேவர்களால் கூட அறியப்படமாட்டீர்கள். அப்படியென்றால் முழுமுதற் கடவுளை, மனிதர்களைவிட உயர்ந்த ஆளுமை பெற்றவர்களால் கூட அறிந்துக் கொள்ள முடியாது, மேலும் எவ்வாறு மனிதர்களால் ஸ்ரீ கிருஷ்ணரை அவருடைய பக்தராகாமல் புரிந்துக் கொள்ள முடியும்?

ஆகையினால் பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக பக்தர் எனும் மனப்பான்மையில் பகவத்-கீதை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒருவர் தன்னை கிருஷ்ணருக்கு இணையாக, ஒரே நிலையில் இருப்பதாக நினைக்க கூடாது. அல்லது அவரை சாதாரண ஆளுமை பெற்றவராகவோ, ஒருவேளை மிக உயர்ந்த ஆளுமை பெற்றவராகவோ ஒருவர் அவரைப் பற்றி நினைக்கக் கூடாது. இல்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் ஆவார். ஆகையால் குறைந்தது கருத்தியல்படி, பகவத்-கீதையின் அறிக்கையில் அல்லது அர்ஜுனரால் வலியுறுத்தப்படும் அறிக்கையில், பகவத்-கீதையை புரிந்துக்கொள்ள முயற்சிக்கும் ஒருவர், ஸ்ரீ கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதன் பிறகு, அந்த பணிவான மனப்பான்மையுடன், பகவத்-கீதையை பணிவாக ஆன்மீகத்துடன் மேலும் காதால் கேட்டு ஒருவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பகவத்-கீதையை புரிந்துக் கொள்வது மிகவும் கடினம் ஏனென்றால் அது ஒரு உயர்ந்த பரம இரகசியம்.

ஆகையால் பகவத்-கீதையில், நாம் பகவத்-கீதை என்ன என்பதை ஆய்வு செய்யலாம். பௌதிக வாழ்க்கையின் அறியாமையிலிருந்து மனிதர்களை விடுதிலை பெறச் செய்வதற்கானது இந்த பகவத்-கீதை. மனிதர்கள் அனைவரும் பல வழிகளில் கஷ்டத்தில் இருக்கிறார்கள், அர்ஜுனரும் குருக்ஷெத்திரத்தில் போர் புரிய வேண்டிய காரணத்தால் கஷ்டத்தில் இருக்கிறார். இவ்வாறாக அவர் கிருஷ்ணரிடம் சரணடைகிறார், ஆகையினால் இந்த பகவத்-கீதை பேசப்பட்டது. அதேபோல், அர்ஜுனர் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் இந்த பௌதிக வாழ்க்கையின் காரணத்தால் கவலையால் நிறைந்திருக்கிறோம். அஸத்-க்ரஹாத். நம் வாழ்க்கை, நிரந்திரமற்ற இந்த சூழ்நிலை, அல்லது சுற்றுச் சூழலில் இருக்கிறது. ஆனால் உண்மையில், நாம் நிரந்திரமற்றவர்கள் அல்ல. நம் இருப்பு நித்தியமானது, ஆனால் ஏதோ ஒரு வழியில் நாம் அஸத்தில் தள்ளப்படுகிறோம். அஸத் என்றால் இல்லாததொன்று.

இப்பொழுது பல மனிதர்களும் தான் இருக்கும் நிலை பற்றி விசாரணை நடத்துகிறார்கள் தான் யார் என்று, ஏன் அவர் இந்த தர்ம சங்கடமான நிலையில் கஷ்டப்பட வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலைக்கு வந்ததிற்கு விழித்தெழ செய்யவில்லை என்றால், அதாவது "நான் என் கஷ்டப்படுகிறேன்? எனக்கு இந்த கஷ்டங்கள் எல்லாம் வேண்டாம். இந்த கஷ்டங்களுக்கெல்லாம் நான் தீர்வு காண முயற்சித்தேன், ஆனால் நான் தோல்வி அடைந்துவிட்டேன்." இந்த நிலையில் ஒருவர் இல்லையெனில், அவர் ஒரு குறைவற்ற மனிதராக கருதப்பட மாட்டார். ஒருவர் சிந்தனையில் இது போன்ற கேள்விகள் எழும்பொழுது மனிதநேயம் ஏற்படுகிறது. ப்ரம-சூத்ராவில் இந்த விசாரணை ப்ரம-ஜிஞாசா என்றழைக்கப்படுகிறது. அதாதொ ப்ரம-ஜிஞாசா. மேலும் மனிதரின் ஒவ்வொரு செயலும் தோல்வியாக கருதப்படுகிறது இந்த கேள்வி அவர் சிந்தனையில் இல்லாததால். ஆகையால் தன் சிந்தனையில் இந்த கேள்விகளை எழுப்பிய ஒருவர் அதன் தொடர்பாக "நான் யார், நான் ஏன் கஷ்டப்படுகிறேன், நான் எங்கிருந்து வந்தேன் அல்லது இறந்தபின் நான் எங்குச் செல்வேன்," இந்த கேள்விகள் தோன்றும் பொழுது, அறிவுடைய ஒரு மனிதனின் சிந்தனையில் எழும்போழுது, பிறகு அவர் தான் பகவத்-கீதையை புரிந்துக் கொள்ள கூடிய நடைமுறைக்குரிய சரியான மாணவர். மேலும் அவர் ஷரத்தாவானாக இருக்க வேண்டும். ஷரத்தாவான். அவருக்கு பணிவன்பு இருக்க வேண்டும், முழுமுதற் கடவுளிடம் அன்பும் மரியாதையும் இருக்க வேண்டும். இவ்வாறான உயரிய பண்புகளை உடைய மனிதரே, அர்ஜுனர்.