TA/Prabhupada 1067 - எதையும் தவிர்க்காமலும், சுய அர்த்தம் கற்பிக்காமலும் பகவத்-கீதையை நாம் ஏற்றுக் கொள்ள வ



660219-20 - Lecture BG Introduction - New York

எதையும் தவிர்க்காமலும், சுய அர்த்தம் கற்பிக்காமலும் பகவத்-கீதையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டு சிறிய முழுமையான பிரிவுக்கு குறைவற்ற வசதிகள் அங்கே இருக்கின்றன, அதாவது, உயிர்வாழிகள், பூரணத்தைப் புரிந்துக் கொள்ள. பலதரப்பட்ட முழுமையற்றவைகள் அனுபவிக்கப்பட்டது காரணம் பூரண பரம் பொருளைப் பற்றிய முழுமையற்ற அறிவினால். பகவத்-கீதை வேத ஞானத்தின் முழுமைபெற்ற அறிவுடையதாகும். முழு வேத அறிவும் பிழை இல்லாதது. வேத அறிவை எவ்வாறு பிழை இல்லாமல் புரிந்துக் கொள்வது என்பதற்கு பலதரப்பட்ட உதாரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு இதை எடுத்துக் கொள்வோம், இந்துக்களை பொறுத்தவரை, மேலும் அவர்கள் வேத அறிவை எவ்வாறு பூரணமாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு, இங்கு ஒரு மறுக்க இயலாத உதாரணம் உள்ளது. உதாரணத்திற்கு மாட்டு சாணி. இந்த மாட்டு சாணி ஒரு விளங்கின் மலம். ஸ்மர்தி அல்லது வேத ஞானத்தின்படி, ஒருவர் விளங்கின் மலத்தை தொட்டால் அவர்கள் உடனே குளித்துவிட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் வெத நூலில் மாட்டு சாணி புனிதமானதாக கூறப்பட்டுள்ளது. ஓரளவிற்கு, அசுத்தமான இடமோ அல்லது பொருளோ, மாட்டு சாணியை தடவினால் அவை புனிதமடைந்துவிடும். இப்பொழுது ஒருவர் விவாதித்தால், அது எப்படி ஓர் இடத்தில் விளங்கின் மலம் தூய்மையற்றது, மற்றொரு இடத்தில் மாட்டு சாணி, அதுவும் விளங்கின் மலம்தான், அது தூய்மையானது என்று கூறப்படுகிறது, ஆகையால் இது முரண்பாடாக இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே, அது முரண்பாடாக தோன்றலாம், ஆனால் அது வேத விதி, ஆகையினால் நம் நடைமுறை குறிக்கொளுக்காக அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும் அதை நாம் ஏற்றுக் கொள்வதனால், நாம் செயல்படுவது தவறாகாது. டாக்டர் லால் மோஹன் கோசல் என்னும் நவீன வேதியல் வல்லுநரால், நவீன விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர் மிக துல்லியமாக மாட்டு சாணியை ஆராய்ந்து மேலும் கண்டுபிடித்தது அதாவது மாட்டு சாணி, நோய்களை அழிக்கின்ற நுன்மங்கள் அனைத்தையும் ஒருமித்து பெற்ற தொகுத்தல். அதேபோல், அவர் கங்கை நதியின் தண்ணிரையும் ஆர்வம் மிகுதியால் ஆராய்ந்தார். ஆகையால் என் எண்ணம் என்னவென்றால் வேத அறிவு முழுமையானது ஏனென்றால் அது அனைத்து சந்தேகங்களுக்கும் தவறுகளுக்கும் அப்பாற்பட்டது. ஆகையால், பகவத்-கீதை அனைத்து வேத அறிவுக்கும் ஆதாரம். ஆகையினால் வேத அறிவு நிச்சயமானது. அது பூரணமான சீடத் தொடர் முறையில் வழி வழியாக வந்தது. ஆகையினால் வேத அறிவு அராய்ச்சிக்குரிய ஒரு பொருள் அல்ல. நம்முடைய ஆராய்ச்சி குறைகள் நிறைந்தது ஏனென்றால் நாம் அனைத்தையும் பூரணமற்ற உணர்வோடு தேடுகிறோம். ஆகையினால் நம் ஆராய்ச்சியின் பலனும் பூரணமற்றதாகிறது. அது பூரணமடையாது. நாம் பூரண அறிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். பூரண அறிவு பகவத்-கீதையில் விவரித்தது போல் கீழே வருகிறது. நாம் இப்பொழுதுதான் ஆரம்பித்தோம். ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: (ப. கீ. 4.2). நாம் இந்த அறிவை சரியான அதாரத்துடன் பெற வேண்டும், பகவானிடத்திலிருந்து ஆரம்பித்து, பரம்பரை சீடத்தொடர் முறையில் ஆன்மீக குருவிடமிருந்து பெறவேண்டும். ஆகையால் பகவத்-கீதை பகவானால் தானே கூறப்பட்டது. மேலும் அர்ஜுனர், நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், பகவத்-கீதையை படிப்பாக கற்ற மாணவர்கள், அவர்கள் முழு கதையையும் அதில் இருந்தபடியே ஏற்றுக் கொண்டார்கள், எதையும் தவிர்க்கவிலை. அதுவும் அனுமதிக்கபடவில்லை அதாவது, நாம் பகவத்-கீதையின் சில பகுதிகளை ஏற்றுக் கொண்டு மற்ற பகுதிகளை தவிர்ப்பது. அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நாம் பகவத்-கீதையை சுய அர்த்தம் கற்பிக்காமலும், எதையும் தவிர்க்காமலும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மேலும் கருப்பொருளில் நம் சொந்த விசித்திரமான விருப்ப காரணங்கள் இருக்கக்கூடாது, ஏனென்றால் அதை நாம் பூரணமான மிகவும் சிறந்த வேத அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வேத அறிவு திவ்வியமான மூலத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏனென்றால் பகவான் தானே அதன் முதல் வார்த்தையை உரைத்தார். பகவானால் பேசப்பட்ட வார்த்தைகள் அபௌருஷெய என்று அழைக்கப்படுகிறது, அல்லது ஜட உலகில் இருக்கும் யாராலும் காப்பாற்றப்படாமல் இருக்கும் குற்றமுள்ள நான்கு கோட்பாடுகளால் தொற்றிக் கொள்ளப்பட்டவர்கள். ஜட உலகின் உயிரினங்களின் வாழ்க்கையில் நான்கு குறையுள்ள கோட்பாடுகள் உள்ளன, அவைகள் 1) அவர் கண்டிப்பாக தவறு செய்ய வேண்டும், 2) சில சமயங்களில் மாயைக்கு அடிமையாவது, மேலும் 3) அவர் கண்டிப்பாக மற்றவர்களை ஏமாற்ற முயலுவார், மேலும் 4) அவர் குற்றமுள்ள புலன்களுக்கு உரிமையாளராக இருப்பார். குற்றமுள்ள இந்த நான்கு கோட்பாடுகளுடன், எங்கும் நிறைந்த அறிவுடைய கருப்பொருளில் குற்றமற்ற வடிவமுடைய தகவலை ஒருவராலும் அளிக்க முடியாது. வேதங்கள் அவ்வாறு இல்லை. வேத அறிவு, முதலில் படைக்கப்பட்ட உயிரிணமான ப்ரமாவின் இதயத்தில் கொடுக்கப்பட்டது. மேலும் ப்ரமா அவர் முறைக்கு அவருடைய மகன்களுக்கும், சிஷ்யர்களுக்கும் அறிவை பரவச் செய்தார் அவர் பகவானிடமிருந்து மூலமாக பெற்றதை பரப்பினார்.