TA/Prabhupada 1069 - நம்பிக்கையின் சிந்தனையை மதம் தெரிவிக்கிறது. நம்பிக்கை மாறலாம் - சநாதன-தர்ம மாறாது



660219-20 - Lecture BG Introduction - New York

ஆகையினால், சநாதன-தர்ம, மேலே குறிப்பிட்டது போல், அதாவது முழுமுதற் கடவுள் சநாதன ஆவார், அவருடைய திவ்வியமான ஸதலம், ஆன்மீக விண்வெளிக்கு அப்பால் இருப்பது, அதுவும் சநாதனவாகும். மேலும் உயிர்வாழிகளும், அவர்களும் சநாதனவாகும். ஆகையால் சநாதன முழுமுதற் கடவுளும், சநாதன உயிர்வாழிகளும் கூட்டமைத்து, சநாதன நித்தியமான ஸதலத்தில் உள்ளது மனித உருவ வாழ்க்கையின் இறுதியான நோக்கம். பகவான் உயிர்வாழிகளிடம் மிகுந்த கருணையுள்ளவராக இருக்கிறார் ஏனென்றால் உயிர்வாழிகள் முழுமுதற் கடவுளின் புத்திரர்களாக கருதப்படுகிறார்கள். பகவான் பிரகடனம் செய்கிறார், ஸர்வ யோணிஷூ கெளந்தேய மூர்தய யாஹ (ப.கீ.14.4). அனைத்து உயிரினமும், அனைத்து வகையான உயிர்வாழிகளும், ஒவ்வொருவருடைய கர்மாவிற்கெற்ப பல மாதிரியான உயிர்வாழிகள் இருக்கின்றன, அனைத்து உயிர்வாழிகளுக்கும் தானே தந்தை என்று பகவான் பிரகடன் செய்கிறார், ஆகையினால் பகவான் இந்த இழிந்த கட்டுப்பட்ட ஜீவன்களை மீட்க மறுபடியும் தோன்றுகிறார் மறுபடியும் சநாதன-தர்ம, சநாதன விண்வெளி, இவ்வாறு சநாதனமான ஜீவன்கள் சநாதன உறவை திரும்ப பெற்று பகவானுடனான நித்தியமான தொடர்பை பெற முடியும். பல்வேறு அவதாரங்களாக பகவான் தானே வருவார். அவர் தனது அந்தரங்க சேவகரை புத்திரராகவும் தனது தோழமை ஆச்சாரியர்களாகவும் அனுப்பி கட்டுண்ட ஆன்மாக்களை மீட்கிறார். ஆகையினால் சநாதன-தர்மம் என்பது குறிப்பிட்ட மதத்தின் இனவழியல்ல. நித்தியமான உயிர்வாழிகளின் நித்தியமான இயக்கம் நித்தியமான முழுமுதற் கடவுளுடன் உறவாகும். சநாதன-தர்மம் என்பது, ஜீவனின் நித்தியமான கடமையாகும். ஸ்ரீபாதர் ராமானுஜாசாரியார் சநாதன என்ற வார்த்தைக்கு கொடுத்த விளக்கம் "ஆரம்பமும் முடிவுமற்ற பொருள்" என்று கூறியுள்ளார். எனவே நாம் சநாதன-தர்மத்தைப் பற்றி பேசும் பொழுது அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு ஸ்ரீபாதர் ராமானுஜாசாரியரின் முடிவுக்கு ஏற்ப எந்த தொடக்கமும் முடிவுமில்லை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். 'ரிலிஜன்' என்னும் வார்த்தை சநாதன-தர்மம் என்பதிலிருந்து சற்றே வேறுபட்டதாகும். 'ரிலிஜன்' என்பது நம்பிக்கையை குறிக்கும். நம்பிக்கை மாறலாம். ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட செய்முறையில் நம்பிக்கை இருக்கலாம், பிறகு அவர் அந்த நம்பிக்கையை மாற்றி வேறோரு முறையை பின்பற்றலாம். ஆனால் சநாதன-தர்ம என்பது மாற்ற முடியாது, மாற்றவே முடியாது. உதாரணத்திற்கு நீரும், திரவத்தன்மையும். திரவத்தன்மையை நீரிலிருந்து எடுத்துவிட முடியாது. வெப்பமும் நெருப்பும். வெப்பத்தை நெருபிலிருந்து பிரிக்க முடியாது. அதேபோல், நித்தியமான உயிர்வாழிகளின் நித்தியமான இயக்கத்தை, சநாதன-தர்ம என்று அழைக்கப்படுவதை மாற்ற முடியாது. மாற்றுவது சாத்தியமல்ல. நித்தியமான ஜீவன்களின், நித்தியமான பணி என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நாம் சநாதன-தர்மம் பற்றி பேசுவதனால், நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்ரீபாதர் ராமானுஜாசாரியரின் முடிவுக்கு ஏற்ப எந்த தொடக்கமும் முடிவுமில்லை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். துவக்கமும், முடிவும் இல்லாத பொருள், இனவாரியான பொருளாக முடியாது அல்லது எல்லைகளால் வரையறுக்க முடியாது. நாம் சநாதன-தர்மத்தைப் பற்றி மாநாடு நடத்திய போது, சநாதனமல்லாத மத நம்பிக்கையை சேர்ந்த மக்கள் இதைத் தவறாக சிந்திப்பார்கள் அதாவது நாம் சில இனவாரியான காரியங்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக. ஆனால் நாம் இது விஷயமாக ஆழமாகச் சென்று நவீன விஞ்ஞானத்தின் ஒளியில் கவனித்தால், சநாதன-தர்மத்தின் இயக்கங்களாக நாம் நன்றாக பார்க்க முடிகிறது உலகின் அனைத்து மக்களுடையவும், ஏன், இவ்வுலகத்தின் எல்லா உயிர்வாழிகளுடையவும். சநாதன இல்லாத மத நம்பிக்கைக்கு மனித சரித்.திரத்தின் அட்டவனையில் எதாவது துவக்கம் இருக்கலாம். ஆனால் உயிர்வாழிகளுடன் நிரந்திரமாக இருக்கும் சநாதன-தர்மத்தின் சரித்திரத்திற்கு இது போன்ற ஆரம்பம் இல்லை. உயிர்வாழிகளைப் பொறுத்தவரை, அதிகார பூர்வமான சாஸ்திரங்களில் நாம் கண்டுகொண்டோம் உயிர்வாழிகளுக்கும் பிறப்பும் இறப்பும் இல்லை. பகவத்-கீதையில் இது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது அதாவது உயிர்வாழிகள் பிறப்பதும் இல்லை, அது என்றுமே அழிவதும் இல்லை. அவர் நித்தியமானவர், அழிவற்றவர், மேலும் நிரந்தரமற்ற ஜட உடல் அழிந்த பின்னும் தொடர்ந்து வாழும்.