TA/Prabhupada 1070 - சேவை செய்வதே உயிர்வாழிகளின் நித்தியமான அறமாகும்



660219-20 - Lecture BG Introduction - New York

சநாதன-தர்மாவின் மேற்கண்ட கருத்தாக்கத்திற்கேற்ப, மதத்தின் உட்பொருளை நாம் சமஸ்கிருதத்தின் மூலப்பொருளான தர்மா என்ற வார்த்தையிலிருந்து அறிய முயல வேண்டும். உபாயம் யாதெனில் ஒரு குறிப்பிட்ட பொருளுடன் நிலையாக இருப்பதையே குறிக்கிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், நாம் நெருப்பைப் பற்றி கூறும் பொழுது அதே நேரத்தில் அது முடிவு செய்யப்பட்டது அதாவது அங்கே வெப்பமும் வெளிச்சமும் நெருப்புடன் சேர்ந்தே இருக்கிறது. வெப்பமும் வெளிச்சமும் இல்லாமல், நெருப்பு என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை. அதேபோல் உயிரினத்தின் முக்கியமான அங்கம் எப்பொழுதும் அவருடன் கூடவே இருப்பது எது என்பதை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அந்த நிரந்தரமான பாதுகாப்பாகச் செல்லும் உயிரினத்தின் அங்கம் அவருடைய நித்தியமான தன்மையாகும், மேலும் நித்தியமான அங்கமான உயிரினத்தின் தன்மை அவருடைய நித்தியமான அறமாகும், சநாதன கோஸ்வாமி, பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் ஸ்வரூப என்பது என்னவென்று கேட்டபோது— நாம் ஏற்கனவே அனைத்து உயிரினத்தின் ஸ்வரூபத்தைப் பற்றி கலந்துரையாடிவிட்டோம்— ஸ்வரூப அல்லது உயிரினத்தின் ஆதார நிலைமை, என்று பகவான் பதிலளித்தார், அதாவது உயிரினத்தின் ஆதார நிலைமை, முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதே. ஆனால் பகவான் சைதன்யாவின் இந்த கூற்றை ஆராய்ந்து நோக்கினால், ஒவ்வொரு உயிரும் நிலையாக சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்று நன்றாக தெரிகிறது மற்றொரு உயிரினத்திற்கு சேவை செய்கின்றனர். ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திற்கு வெவ்வேறு திறனுக்கேற்ப சேவை செய்கின்றனர், அவ்வாறு செய்வதன் மூலம், உயிர்வாழிகள் வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். கீழ்நிலை மிருகங்கள் மனிதர்களுக்கு சேவை செய்கின்றன, சேவகன் எஜமானருக்கு சேவை செய்கிறார், 'அ' 'ஆ'எஜமானருக்கு சேவை செய்கிறார், 'ஆ' 'இ' எஜமானருக்கு சேவை செய்கிறார், 'இ' 'ஈ' எஜமானருக்கு இப்படியாக சேவை செய்கிறார். சூழ்நிலையினால், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு சேவை புரிவதை காண முடிகிறது, மேலும் தாய் மகனுக்கும், அல்லது மனைவி கணவனுக்கும், அல்லது கணவன் மனைவிக்கும் சேவை செய்கிறார்கள். இந்த உணர்வில் நாம் தேடிக் கொண்டு போனால், தெரியவருவது யாதெனில் அதாவது உயிரினத்தின் சமுதாயத்தில் விலக்கே இல்லை என்பது காணப்படும் சேவையின் செயலை நாம் காண முடியவில்லை. அரசியல்வாதிகள் தங்களது அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கின்றார்கள் சேவை செய்ய தனக்கிருக்கும் தகுதியை வாக்காளர்களிடம் காட்டி நம்பச் செய்கிறார்கள். வாக்காளர்களும் அரசியல்வாதியின் எதிர்பார்பிற்கு ஏற்ப தனது மதிப்புமிக்க வாக்குகளை அளிக்கிறார்கள் அதாவது அந்த அரசியல்வாதி சமுதாயத்திற்கு சேவை செய்வார் என்று. கடைக்காரர் வாடிக்கைக்காரருக்கும், கலைஞன் செல்வந்தர்க்கும் சேவை செய்கிறார்கள். நித்தியமான உயிரின் நிரந்தரமான தகுதிக்கேற்ப செல்வந்தன் தன் குடும்பத்திற்கும், குடும்பம் தேசத்திற்கும் சேவை செய்கின்றனர். இவ்வாறாக ஒரு உயிரும் மறுக்கப்படவில்லை என்பதை பார்க்கும் நாம் மற்ற உயிரினத்திற்கு சேவை செய்யும் பழக்கத்திலிருந்து, மேலும், சேவையே உயிரினத்தின் நிலையான துணை என்று நாம் முடிவு செய்யலாம், ஆகையினால், பாதுகாப்பாக முடிவு செய்யலாம் அதாவது உயிரினத்தால் வழங்கப்படும் சேவை அது உயிரினத்தின் நித்தியமான அறம். ஒரு மனிதன் ஒருதனிபட்ட பிரிவைச் சேர்ந்தவனாக வெளிப்படையாக காட்டிக் கொள்ளும் பொழுது தொடர்புள்ள குறிப்பிட்ட நேரம், பிறப்பின் சூழ்நிலை, ஆதலால் தன்னை ஒரு இந்து, முஸ்லிம், கிறித்தவர் பௌத்தர் அல்லது வேறு ஒரு பிரிவை சேர்ந்தவராக காட்டி, மேலும் வேறு இனவழி, இத்தகைய பெயர்கட்டுகள் சநாதன-தர்மமல்ல. ஒரு ஹிந்து தன் நம்பிக்கையை மாற்றி முஸ்லிமாகவும், அல்லது முஸ்லிம் ஹிந்துவாகவோ அல்லது கிறித்தவராகவோ தனது நம்பிக்கையை மாற்றிக் கொண்டே போகலாம், ஆனால் எல்லா சூழ்நிலையிலும் இவ்வாறான மத நம்பிக்கையற்ற மாற்றம் மற்றவர்களுக்கு சேவை செய்தல் என்னும் நித்தியமான கடமையிலிருந்து ஒருவரை மாறவிடாது. ஒரு ஹிந்து அல்லது முஸ்லிம் அல்லது கிறித்தவர், எந்த சூழ்நிலையிலும், அவர் ஒருவருடைய சேவகனே, ஆதலால் ஒருவித இனத்தைக் காட்டுவது ஒருவருடைய சநாதன-தர்மத்தைக் காட்டுவது ஆகாது, ஆனால் உயிரினத்தின் நிரந்தர துணை, அதுதான், சேவை செய்தல், அதுதான் சநாதன-தர்ம. ஆகையால் உண்மையிலேயே, நாம் முழுமுதற் கடவுளுடன் சேவையில் உறவுள்ளவராக இருக்கிறோம். முழுமுதற் கடவுளே நித்தியமான அனுபவிப்பாளர் ஆவார், நாம் உயிர்வாழிகள் நித்தியமான அவரது உண்மையான சேவகர்கள். நாம் அவரது இன்பத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறோம், நாம் இந்த நித்தியமான இன்பத்தில் பங்கு பெற்றால் முழுமுதற் கடவுளுடன், அது நம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும், இல்லையேல் மகிழ்ச்சி பெற மாட்டோம். சுயமாக, நான் ஏற்கனவே கூறியது போல், அதாவது சுதந்திரமாக, உடலின் எந்தப் பகுதியும், கைகள், கால்கள், விரல்கள், அல்லது உடலின் எந்தப் பகுதியும், சுதந்திரமாக, வயிற்றுடன் ஒத்துழைக்காமல் சந்தோஷமாக இருக்க முடியாது, அதேபோல், உயிர்வாழிகள் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது முழுமுதற் கடவுளுக்கு திவ்வியமான அன்பான சேவையை செய்யாமல் மகிழ்ச்சி பெற இயலாது. பகவத்-கீதையில் பல தேவர்களுக்கு வழிபாடு செய்வது அங்கீகரிக்கப்படவில்லை, ஏனென்றால் பகவத்-கீதையில் ஏழாம் அத்தியாயத்தில், இருபதாம் பதத்தில் கூறப்பட்டுள்ளது, பகவான் கூறுகிறார் காமைஸ் தைஸ் தைர் ஹ்ருதக்ஞானா பரபத்யந்தே 'ன்ய தேவதா: காமைஸ் தைஸ் தைர் ஹ்ருதக்ஞானா. பௌதிக இச்சைகளால் உந்தப்பட்டவர்கள், அவர்கள் மட்டுமே முழுமுதற் கடவுள், கிருஷ்ணரை அல்லாது தேவர்களை வழிபடுவார்கள்.