TA/Prabhupada 1079 - பகவத்-கீதை மிகவும் கவனத்துடன் கற்க வேண்டிய ஒரு தெய்வீகமான இலக்கியமாகும்



660219-20 - Lecture BG Introduction - New York

பகவத்-கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்தை நன்றாக உணர்ந்து கற்றவர்களிடமிருந்து கேட்பது, ஒருவர் தனக்குத் தானே இருபத்து-நான்கு மணி நேரமும் நித்தியமானவரை நினைவில் கொள்ள பயிற்சி அளிப்பதாகும், இறுதியில் ஒருவரை, அந்த கால, முழுமுதற் கடவுளை நினைவில் கொண்டு, அச்சமயம் இந்த உடலை விட்டு பிரியும் பொழுது, அவர் ஓர் ஆன்மீக உடலை பெறுவதுதான், பகவானுடன் இணைவதற்கான உகந்த ஆன்மீக உடலை பெறுவார். ஆகையால் பகவான் கூறுகிறார், அப்யாஸ யோகயுக்தேன சேதஸா நான்யகாமினா பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்தயன் (ப.கீ. 8.8).

அனுசிந்தயன், தொடர்ந்து அவரைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது. அது மிக கடினமான முறையன்று. இந்த முறையை இதன் வழியில் மிகுந்த அனுபவம் நிறைந்த ஒருவரிடமிருந்து கற்க வேண்டும். தத் விக்ஞாநார்த்தம் ஸ குரமேவா பிகச்சேத் (மு.உ.1.2.12). ஏற்கனவே இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒருவரை அணுக வேண்டும். ஆகையால் அப்யாஸ யோக-யுக்தேன. இதைத்தான் அப்யாஸ யோக பயிற்சி என்று கூறுகிறோம். அப்யாஸ், எவ்வாறு முழுமுதற் கடவுளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பது. சேதஸா நான்யகாமினா. மனம், மனம் எப்பொழுதும் அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும். ஆகையால் மனத்தை முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் திரு உருவத்தில் எப்போதும் ஒரு நிலைப்படுத்த ஒருவர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், அல்லது ஒலியில், மிகவும் எளிதாகப்பட்ட அவர் திருநாமத்தின் ஒலியில். நம் மனத்தை ஒரு நிலைப்படுத்துவதற்கு பதிலாக—நம் மனம் அமைதியற்று இருக்கலாம், அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும், ஆனால் நம் காதை கிருஷ்ணரின் ஒலி அதிர்வில் ஒரு நிலைப்படுத்த முடியும், அதுவும் நமக்கு பயனுள்ளதாகும். அதுவும் அப்யாஸ யோகதான். சேதஸா நான்யகாமினா பரமம் புருஷம் திவ்யம். பரமம் புருஷ, ஆன்மீக ராஜ்யத்தில் இருக்கும் முழுமுதற் கடவுள், ஆன்மீக விண்வெளியில், அனுசிந்தயன், அவரை தொடர்ந்து நினைவில் கொள்ளும் போது ஒருவர் அவரை அணுகலாம். ஆகையால் இந்த செயல்முறைகள், வழிவகைகள், அனைத்தும் பகவத்-கிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இதில் எவருக்கும் தடையில்லை. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் அணுக முடியும் என்பதில்லை. பகவான் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருப்பது சாத்தியமே, பகவான் கிருஷ்ணரை பற்றி கேட்டுக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் சாத்தியமே. மேலும் பகவான் பகவத்-கிதையில் கூறுகிறார், மாம் ஹி பார்த்த வ்யபாஷ்ரித்ய யே'பி ஸ்யு: பாபயோனய: ஸ்த்ரியோ வைஷ்யாஸ் ததா சூத்ராஸ் தே'பி யாந்தி பராம் கதிம் (ப.கீ. 9.32). கிம் புனர் ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் (ப.கீ. 9.33).

பகவான் கூறுகிறார் அதாவது, மிகவும் தாழ்ந்த நிலையில் வாழும் மனிதர்கள் கூட, அல்லது தவறான ஒரு பெண், அல்லது ஒரு வியாபாரி, அல்லது தொழிலாளி வகுப்பைச் சேர்ந்த மனிதன், வியாபாரி வகுப்பைச் சேர்ந்தவர், தொழிலாளி இனத்தைச் சேர்ந்தவர், மேலும் பெண் இனம், அவர்கள் அனைவரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் அறிவாற்றல் குறைந்தவர்கள். ஆனால் பகவான் கூறுகிறார், அவர்களும், அல்லது அவர்களைவிட தாழ்ந்தவர்களும், மாம் ஹி பார்த்த வ்யபாஷ்ரித்ய யே'பி ஸ்யு: (ப.கீ. 9.32), அவர்கள் மட்டுமல்ல, அவர்களைவிட தாழ்ந்தவர்கள், அல்லது வேறு எவரும். அவர் யார், அவள் யார், என்பது தேவை இல்லை, பக்தி-யோகாவின் நெறி முறைகளை ஏற்றுக் கொள்ளும் எவரும் மேலும் முழுமுதற் கடவுளை வாழ்க்கையின் மிகச் சிறந்தவராக ஏற்றுக் கொண்டு, மிக உயர்ந்த இலக்குவாக, வாழ்க்கையின் மிக உயர்ந்த குறிக்கோளாக, மாம் ஹி பார்த்த வ்யபாஷ்ரித்ய யே'பி ஸ்யு: , தே'பி யாந்தி பராம் கதிம். அந்த பராம் கதிம் ஆன்மீக ராஜ்யத்திலும், ஆன்மீக விண்வெளியிலும் அனைவரும் அணுகலாம். வெறுமனே ஒருவர் முறையை பயிற்சி செய்ய வெண்டும். அந்த முறை பகவத்-கிதையில் மிக அழகாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது ஒருவர் அதை கடைபிடித்து தன் வாழ்க்கையை நிறைவுள்ளதாகவும், நிரந்தரமானதாகவும் அமைக்க தீர்வு காண வேண்டும். அதுவே பகவத்-கீதையின் மொத்தத்தின் கருத்தும், ஸாரமும் ஆகும். ஆகையினால் முடிவாக, பகவத்-கீதை ஒருவர் கவனத்துடன் படிக்க வேண்டிய தெய்வீகமான இலக்கியமாகும். கீதா-ஷாஸ்தரம் இதம் புன்யம் யஹபதெத் ப்ரயத்: புமான். அவர் விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், அதன் முடிவு யாதெனில், அவர் வாழ்க்கையின் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும், கவலைகளிலிருந்தும் தீர்வுகான இயலும். பய-ஸோகாடி-வர்ஜித:. இந்த வாழ்க்கையின் அனைத்து துன்பங்களும், மேலும் அடுத்த பிறவியில் அவருக்கு ஆன்மீக வாழ்க்கையும் கிடைக்கும் கீதாடியாயந-ஷீலஸ்ய ப்ராணாயம-பரஸ்ய ச னைவ ஸந்திஹி பாபானி பூர்வ-ஜென்ம-கிர்தானி ச. மேலும் மற்றோரு நற்பயன் யாதெனில், ஒருவர் பகவத்-கீதையை படித்தால், மிகவும் விசுவாசமாகவும் மிகுந்த அக்கறையுடனும், பிறகு பகவானின் கருணையால், அவருடைய கடந்தகால தவறுகளின் பலன்கள் எதுவும் அவர் மீது வராது.