TA/Prabhupada 1080 - பகவத்-கீதையில் தொகுத்துரைக்கப்பட்டது - கிருஷ்ணரே ஒரே கடவுள். கிருஷ்ணர் ஒரு குறுகிய மத

From Vanipedia


பகவத்-கீதையில் தொகுத்துரைக்கப்பட்டது - கிருஷ்ணரே ஒரே கடவுள். கிருஷ்ணர் ஒரு குறுகிய மதத்தை சார்ந்த கடவுள் அல்லர்
- Prabhupāda 1080


660219-20 - Lecture BG Introduction - New York

பகவத்-கீதையின் இறுதி பகுதியில் பகவான் மிகவும் உரத்த குரலில் கூறுகிறார், அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (ப. கீ. 18.66). பகவான் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கிறார். பகவானிடம் சரணடைந்தவர்களுக்கு, அவர் அவர்களது பாபங்களின் பலன்களிலிருந்து விடுதிலை அளிக்கிறார், அவருடைய அனைத்து பாபங்களின் பலன்களிலிருந்து விடுதிலை அளிக்கிறார். மால-நிர்மொசனாம் அம்ஸாம் ஜல-ஸ்நானம் தினே தினே சக்ரித் கீதாமர்த-ஸ்நானம் சம்ஸார-மால-நாஷனம். தினமும் நீரில் குளிப்பதன் மூலம் ஒருவர் தன்னை சுத்தம் செய்து கொள்கிறார், ஆனால் பகவத்-கீதை என்னும் கங்கையில் ஒருவர் ஒரு முறை குளிப்பதன் மூலம், அவருடைய ஜட வாழ்வின் களங்கங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார். கீதா சு-கீதா கர்தவ்யா கிம் அந்யை: ஷாஸ்தர-விஸ்தரை: யா ஸ்வயம் பத்மனாபஸ்ய முக-பத்மாத விநிஷ்ரிதா. பகவத்-கீதை முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டது, ஆகையினால் மக்கள் செய்ய வேண்டியது, மக்கள் வேறு எந்த வெத இலக்கியங்களையும் படிக்க அவசியம் இல்லை. வெறுமனே அவர் தவறாமலும் கவனமாகவும் பகவத்-கீதையை படித்தும் கேட்டும், கீதா சு-கீதா கர்தவ்யா, ஒருவர் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும். கீதா சு-கீதா கர்தவ்யா கிம் அந்யை: ஷாஸ்தர-விஸ்தரை:. ஏனென்றால் தற்காலத்தில் மக்கள் பல காரியங்களால் நிர்பந்தபட்ட நிலையில் உள்ளனர். அது அனைத்து வேத இலக்கியங்களிலும் அவருடைய கவனத்தை திசைமாற்ற இயலாததாக இருக்கிறது. இந்த ஒரு இலக்கியம் போதும் ஏனென்றால் இது அனைத்து வேத இலக்கியத்தின் உண்மைப் பொருளாகும். மேலும் பிரத்தியோகமாக முழுமுதற் கடவுளால் பேசப்பட்டது. பாரதாமிரித-சர்வாஸ்வம் விஷ்ணு-வக்தராத் வினிஸ்ரிதம் கீதா-கன்கொடகம் பீத்வா புனர் ஜன்ம ந வித்யதெ. பலரால் கூறப்படுவது போல் கங்கை நதியின் நீரை பருகும் ஒருவர், அவருக்கும் விமோசனம் கிடைக்கிறது, பிறகு பகவத்-கீதை என்னும் நீரை குடிப்பவரைப் பற்றி கூற என்ன இருக்கிறது? பகவத்-கீதை மஹாபாரதத்தின் அமிர்தம், விஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டது. பகவான் கிருஷ்ணரே மூலமான விஷ்ணு. விஷ்ணு-வக்தராத் வினிஸ்ரிதம். இது முழுமுதற் கடவுளின் திருவாயினின்று மொழிந்தது. மேலும் கன்கொடகம், கங்கை நீர் பகவானின் கமலப் பாதங்களிலிருந்து வெளிப்படுவதாக கூறப்படுகிறது, பகவத்-கீதை அவருடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டது. நிச்சயமாக, பகவானின் திருவாய்க்கும் பாதங்களுக்கும் வேறுபாடில்லை. நடுநிலையிலிருந்து கவனித்தால் பகவத்-கீதை, கங்கையைக் காட்டிலும் மிக முக்கியமானது என்பதை நாம் மதிப்பிடலாம். சர்வொபாணிஸதொ காவோ தொக்தா கோபால-நந்தன. பார்தொ வட்ச்: சு-தீர் பொக்தா துக்ஹம் கீதாமிர்தம் மஹத். கீதோபநிஸத் ஒரு பசுவைப் போன்றது, பகவான் சிறப்பு வாய்ந்த இடையர், அவர் பசுவிலிருந்து பால் கறந்துக் கொண்டிருந்தார், சர்வொபாணிஸதொ. அனைத்து உபநிஸத்திற்கும் இதுவே சாரம், பசுவாக பிரதினித்தது. பகவான் திறமையான இடையாராக இருந்ததால், அவர் பால் கறந்துக் கொண்டிருக்கிறார். பார்தொ வட்ச்:. அர்ஜுனர் கன்று போன்றவர். சு-தீர் பொக்தா. ஒரு அறிவுச்சான்றவரும் தூய்மையான பக்தரும், இந்த அமுத பாலைக் குடிக்க வேண்டியவர்கள். சு-தீர் பொக்தா துக்ஹம் கீதாமிர்தம் மஹத். பகவத்-கீதையின் அமிர்தமும் பாலும், புலமையுள்ள பக்தர்களுக்கானது. ஏகம் ஷாஸ்தரம் தேவகி-புத்ர-கீதாம எகொ தேவோ தேவகி-புத்ர எவ எகொ மந்தரஸ் தஸ்ய நாமானி யானி கர்மாபி எகம் தஸ்ய தேவஸ்ய சேவா. இப்பொழுது, உலக மக்கள் பகவத்-கீதையிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். எவம் ஷாஸ்தரம் தேவகி-புத்ர-கீதம. அனைத்து உலகத்தினறுக்கும் இங்கு இருப்பது ஒரே வேத நூல், பொதுவான வேத நூல், உலக மக்கள் அனைவருக்கும், அதுதான் பகவத்-கீதை. தேவோ தேவகி-புத்ர எவ. மேலும் அனைத்து உலக மக்களுக்கும் ஒரே கடவுள் இருக்கிறார், அவர்தான் ஸ்ரீ கிருஷ்ணர். மேலும் எகொ மந்தரஸ் தஸ்ய நாமானி. மேலும் ஒரு தெய்வீக இசை, மந்தர, ஒரு தெய்வீக இசை மட்டுமே, ஒரே பிரார்த்தனை, அல்லது ஒரு தெய்வீக இசை, கிருஷ்ணர் பெயரை ஜேபித்தல், ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. எகொ மந்தரஸ் தஸ்ய நாமானி யானி கர்மாபி எகம் தஸ்ய தேவஸ்ய சேவா. மேலும் ஒரே ஒரு தொழில் மட்டுமே உள்ளது, அது முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வது. ஒருவர் பகவத்-கீதையிலிருந்து கற்றுக் கொண்டால், பிறகு மக்கள் மிகுந்த ஆர்வமுடன் இருப்பார்கள், அவர்களுக்குத் தேவை ஒரு மதம், ஒரு கடவுள், ஒரு நூல், ஒரு தொழில் அல்லது வாழ்க்கையில் ஒரே செயல். இது பகவத்-கீதையில் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த ஒன்று, ஒரே கடவுள், அவர் கிருஷ்ணர். கிருஷ்ணர் ஒரு குறுகிய மதத்தை சார்ந்த கடவுள் அல்லர். கிருஷ்ணர் என்னும் பெயரிலிருந்து, கிருஷ்ணர் என்றால், நாம் மேலே விளக்கியது போல், கிருஷ்ணர் என்றால் பெரும் மகிழ்ச்சி.