TA/Prabhupada 0239 - கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்ள, ஒருவருக்கு தனிச் சிறப்புடைய புலன்கள் தேவைப்படுகிறது
Lecture on BG 2.3 -- London, August 4, 1973
எனவே.. இந்த அனுதாபத்தை அர்ஜுனரின் அனுதாபம் என்று கூறலாம் இதன் கருத்து என்னவென்றால், கொலைகாரனை கொல்லாமல் விடுவது போன்றது அது தான் அர்ஜுனன்.. அது hṛdaya-daurbalyam .. அது கடமை ஆகாது மேலதிகாரி கூறிய செயல்களை ஒருவன் எந்தவித மாற்று கருதும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும்.. இது போன்றது இதயத்தின் பலவீனம் ஆகும்.. இந்த வகையான அனுதாபம் ஆனால் சாதாரண மனிதர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள் எனவே ஒருவன் கிருஷ்ணரை பற்றி புரிந்து கொள்ளவேண்டுமானால், அவனுக்கு சிறந்த உணர்வுகள் இருக்கவேண்டும்.. சாதாரண உணர்வுகள் அல்ல சிறப்பான உணர்வு என்றால், கண்களை பறித்துவிட்டு மீண்டும் வேறு கண்களை பொருத்துவது அல்ல நீ தூய்மையடைய வேண்டும் Tat-paratvena nirmalam (CC Madhya 19.170). கண்களில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் மருந்து போடுவது போல்.. அது சுத்தமான பின்பு, எல்லாமே சுத்தமாக தெரியும் .. அது போல் அது போல மங்கலான உணர்வுகள் இருக்குமாயின், நம்மால் கிருஷ்ணரை உணர முடியாது .. Sevonmukhe hi jihvādau svayam eva sphuraty adaḥ (Brs. 1.2.234). As Śrī Kṛṣṇa's nāmādau, கிருஷ்ணரின் பெயர், குணம், வடிவம் போன்றவை இது போன்ற மங்கிய உணர்வுகள் மூலம் கண்டுகொள்ள முடியாது... பின் எப்படி இதை அறிந்துகொள்வது? sevonmukhe hi jihvādau.. நாவிலிருந்து ஆரம்பித்தால் , முதலில் நாவை கட்டுப்படுத்தவேண்டும் இது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.. நாவை அடக்குவதால் கிருஷ்ணரை உணர முடியுமா? இது மிகவும் நன்றாக இருக்கின்றதே ! கிருஷ்ணரை உணர்ந்து கொள்ள நான் நாவை அடக்கினால் போதுமா ? ஆனால் இங்கே சாஸ்திரத்தின் உத்தரவு இருக்கின்றது sevonmukhe hi jihvādau. Jihvā என்றால் நாக்கு கிருஷ்ணரை பார்ப்பதற்கோ , அல்லது புரிந்துகொள்வதற்கோ, முதலில் நீ நாவை கட்டுப்படுத்த வேண்டும் எனவே, நாங்கள் கூறுகிறோம், மாமிசம் உண்ணாதே, மது அருந்தாதே என்று .. அது நாவை அதனுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் நாக்கு தான் முதல் எதிரி.. வக்கிர உணர்வுகளை தூண்டச்செய்யும் சில பாவிகள் கூறுகிறார்கள், உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை உண்ணலாம் .. மதத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுகிறார்கள் வேத சாஸ்திரம் கூறுவது, "முதலில் நீ உன் நாவை கட்டுப்படுத்து, பின்னர் கடவுள் யார் என்று உணர முயற்சிக்கலாம் " என்று இது தான் வேதத்தின் தடை உத்தரவு.. சரியான ஒன்று நீ உன் நாவை கட்டுப்படுத்தினால், உன் வயிற்றை கட்டுப்படுத்துகிறாய், உன் பாலுணர்வை கட்டுப்படுத்துகிறாய் ரூபா கோஸ்வாமி கூறும் அறிவுறுத்தல், vāco-vegaṁ manaso krodha-vegam jihvāvegam udaropastha-vegam etān vegān yo viṣaheta dhīraḥ sarvām apīmāṁ sa pṛthiviṁ sa śiṣyāt. (NOI 1) இந்த அறிவுறுத்தல் , நாவை கட்டுக்குள் வைக்க தகுதி வாய்ந்தவர்க்கு மனதை கட்டுப்படுத்த நினைப்பவர்க்கு, கோபத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்க்கு, வயிற்றையும், பாலுணர்வுகளையும் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த ஆறு வகையான கட்டுப்பாடுகளும் இருந்தால் அவர் ஒரு ஆன்மீக குரு ஆவதற்கு தகுதியானவர் ஆகிறார் உலகம் முழுவதிலும் அவருக்கு சீடர்கள் கிடைப்பார்கள் மற்றும், உன்னால் கோவத்தையோ , உன் நாவையோ கட்டுப்படுத்த முடியாவிட்டால் மனதை கட்டுப்படுத்தாவிட்டால், நீ ஒரு ஆன்மீக குருவாக எப்படி ஆக முடியும் Pṛthiviṁ sa śiṣyāt யார் அதை செய்தார்களோ .. அவரை கோஸ்வாமி அல்லது சுவாமி என்று கூறுகிறோம்.. உணர்வுகளுக்கெல்லாம் குரு இந்த ஆறு வகையான உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.. முதலில் நாவு Sevonmukhe hi jihvādau svayam eva sphuraty adaḥ [Brs . 1.2.234]. Sevā. நாக்கு கடவுள் சேவையில் உபயோகப்படும் .. எப்படி ? ஹரே கிருஷ்ணா என்று சொல்வதன் மூலம் Vācāṁsi vaikuṇṭha-guṇānuvarṇane. Vācāṁsi என்றால் பேசுவது பேசுவது , சுவைப்பதும் நாவின் கடமைகள் இறைவனின் நாமத்தை மகிமைபடுத்தி பாடுவதன் மூலம் நாக்கு கடவுள் சேவையில் ஈடுபடுகிறது எப்பொழுதும் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்.. நான் எப்பொழுது பேசினாலும். கிருஷ்ணரின் புகழை பற்றி மட்டுமே பேசுவேன்.. அதை தவிர ஏதும் இல்லை என்று அது தான் நாவடக்கம் உங்கள் நாவை மற்ற எதையும் நீங்கள் பேச அனுமதிக்காவிட்டால் .. grāmya-kathā... சிலநேரங்களில் நாம் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து வேண்டாத கதைகளை பேசிக்கொண்டிருக்கிறோம்.. அதை கட்டுப்படுத்த வேண்டும் நான் என் நாவை இறைவனின் நாமத்தை கூறுவதற்காக அர்பணித்துவிட்டேன்.. நாம் அதை தவிர எதையும் பேசவேண்டாம் இது தான் நாவடக்கம் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யாத எதையும் நான் உண்ண மாட்டேன்.. இதுவும் நாவடக்கம் இது மிகவும் சிறிய நுட்பங்கள் .. ஆனால் இதற்கு மிக சிறந்த மதிப்பு உள்ளது இவ்வாறு செய்தல், கிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சி கொண்டு தன்னை வெளிப்படுத்துவர் உங்களால் புரிந்து கொள்ளமுடியாது.. உங்களால் கிருஷ்ணரை பார்க்க முடியாது கிருஷ்ணருக்கு நாம் உத்தரவு போட முடியாது.. கிருஷ்ணா, இங்கே வந்து புல்லாங்குழல் வைத்து நடனமாது என்று இது உத்தரவு. கிருஷ்ணர் உங்களுடைய உத்தரவிற்கு உட்பட்டவர் இல்லை எனவே , சைதன்ய மஹாபிரபு கூறும் அறிவுரை,. aśliṣya vā pāda-ratāṁ pinastu māṁ marma-hatāṁ karotu vā adarśanam (CC Antya 20.47).