TA/Prabhupada 1072 - இந்த பௌதிக உலகை விட்டு சென்று, நித்தியமான ராஜ்யத்தில், நாம் நித்தியமான வாழ்வைப் பெறுவோ
660219-20 - Lecture BG Introduction - New York
பகவானின் தோற்றம், அவருடைய அளவிலா கருணையால், தமது ஸ்யாமசுந்தர-ரூபத்தில் தாமே காட்சியளிக்கிறார். துரதிஷ்டவசமாக, குறைந்த அறிவுள்ளவர்கள் அவரை ஏளனப்படுத்துகிறார்கள். அவஜானந்தி மாம் மூடா (ப.கீ.9.11). ஏனென்றால் பகவான் நம்மில் ஒருவராக வந்து நம்முடன் மனிதராக விளையாடுகிறார், ஆகையினால் பகவான் நம்மில் ஒருவரே என்று நாம் நினைக்கக் கூடாது. அவர் தனது அதீத சக்தியாலேயே தனது உண்மை உருவத்தில் நம்முன் தோன்றி மேலும் லீலைகள் புரிகிறார், அவரது ஸ்தலத்தில் காணப்படும் லீலைகள் மாதிரியே இவை. பகவானின் அந்த புனித ஸ்தலத்தில், எண்ணற்ற கிரகங்கள் ப்ரமா-ஜோதியிலும் இருக்கின்றன. எவ்வாறு என்றால் சூரிய ஒளிக்கதிரில் எண்ணற்ற கிரகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன, அதேபோல், முழுமுதற் கடவுளின் புனித ஸ்தலமான கிருஷ்ணலோகா, கோலோகாவிலிருந்து வெளிப்படும் ப்ரஹ்ம-ஜோதியில், ஆனந்த்-சின்மய-ரச-ப்ரதிபாவிதாபிஸ் (பரச.5.37), அவை அனைத்தும் ஆன்மீக கிரகங்கள். அவை ஆனந்த்-சின்மய; அவை பௌதிக கிரகங்கள் அல்ல. ஆகையால் பகவான் கூறுகிறார், நதத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (BG 15.6). இப்பொழுது ஆன்மீக வெளியை அடைய முடிந்த எவரும் மறுபடியும் இந்த பௌதிக வெளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. நாம் இந்த ஜட வெளியில் இருக்கும்வரை, சந்திர கிரகத்தை அடைவதைப் பற்றி என்ன சொல்ல, சந்திர கிரகம், நிச்சயமாக, மிக அருகில் உள்ளது, இருப்பினும் நாம் ஆக உயர்ந்த கிரகத்தை, பிரம்மலோகம் என்றழைக்கப்படுவதை அடைந்தாலும், அங்கேயும் பௌதிக வாழ்க்கையில் இருக்கும் அதே துன்பங்கள் இருக்கின்றன, நான் கூறுவதாவது, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் துன்பங்கள். இந்த ஜட அண்டத்தில் எந்த கிரகமும், இந்த நான்கு பௌதிக நிலைத் தத்துவங்களில் இருந்து விடுபட்டதல்ல. ஆகையினால் பகவான் பகவத்-கீதையில் கூறுகிறார், ஆப்ரஹம-புவனால் லோகாஹ புனராவர்தினோ அர்ஜுன (ப.கீ 8.16) உயிர்வாழிகள் ஒரு கிரகத்திலிருந்து மற்றொன்றுக்கு பிரயாணம் செய்கின்றன. மற்ற கிரகங்களுக்கு வெறுமனே ஸ்புட்நிக் யந்திர ஏற்பாடுகளால் செல்ல முடியாது. யாராயினும் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால், அதற்கொரு செயல்முறை இருக்கிறது. யாந்தி தேவவ்ரதா தேவான்பித்ருன்யாந்தி பித்ருவ்ரதா: (ப.கீ.9.25). யாராயினும் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால், சந்திர கிரகம் என்று எடுத்துக்கொள்வோம், நாம் ஸ்புட்நிக் மூலம் செல்ல முயற்சிக்க தேவையில்லை. பகவத்-கீதை நமக்கு அறிவுரை வழங்குகிறது, யாந்தி தேவவ்ரதா தேவான். இந்த சந்திர கிரகம் அல்லது சூரிய கிரகம் அல்லது இந்த பூலோகத்திற்கு மேல் இருக்கும் கிரகங்கள், அவை சுவர்கலோக என்று அழைக்கப்படுகிறது. சுவர்கலோக, பூலோக, புவர்லோக, சுவர்கலோக. அவை வேறுபட்ட அந்தஸ்து உள்ள கிரகங்கள். ஆனால் தேவலோக, அவை அவ்வாறே அறியப்படுகிறது. உயர்ந்த கிரகம், தேவலோகத்திற்குச் செல்ல பகவத்-கீதை ஒரு எளிமையான வழியை, உங்களுக்கு தெரிவிக்கிறது. யாந்தி தேவவ்ரதா தேவான். யாந்தி தேவவ்ரதா தேவான். தேவவ்ரதா, ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபடுவதற்கான செய்முறைகளை நாம் பயிற்சி செய்தால், பிறகு நாமும் அந்த குறிப்பிட்ட கிரகத்திற்கே செல்லலாம். நாம் சூரிய கிரகத்திற்கு செல்லலாம், சந்திர கிரகத்திற்கு செல்லலாம், சுவர்கலோகத்திற்கும் செல்லலாம், ஆனால் ஜட உலகில் இருக்கும் இந்த கிரகங்கள் எதற்கும் செல்லும்படி பகவத்-கீதை நமக்கு அறிவுரை கூறவில்லை, ஏனென்றால் மிக உயரமான கிரகம் பிரம்மலோகத்திற்கு, நாம் சென்றால் கூட, நவீன விஞ்ஞானிகளால் கணக்கிடப்பட்டபடி அதாவது மிக உயரமான கிரகத்திற்கு ஸ்புட்நிக் மூலம் பயணம் செல்ல நாற்பதாயிரம் வருடம் ஆகும். இப்பொழுது நாற்பதாயிரம் வருடம் வாழ்ந்து, இந்த ஜட அண்டத்தின் மிக உயர்ந்த கிரகத்தை அடைவது சாத்தியமல்ல. ஆனால் ஒருவர் தன் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட தேவதையை வழிபடுவதில் அர்ப்பணித்தல், அவர் அந்த குறிப்பிட்ட கிரகத்தை அடையலாம், பகவத்-கீதையில் கூறியிருப்பது போல், யாந்தி தேவவ்ரதா தேவான்பித்ருன்யாந்தி பித்ருவ்ரதா: (ப.கீ.9.25). அதேபோல், பித்ருலோக இருக்கிறது, அதேபோல், நித்தியமான கிரகத்திற்கு, செல்ல விரும்புவொருக்கு நித்தியமான கிரகம், நித்தியமான கிரகம், நித்தியமான கிரகம் என்றால் கிருஷ்ணலோக. ஆன்மீக வெளியில் கணக்கற்ற கிரகங்கள் உள்ளன, சநாதன கிரகங்கள், நித்தியமான கிரகங்கள், அழிவே இல்லாதது, முடிவும் இல்லாதது. ஆனால் அனைத்து ஆன்மீக கிரகங்களிலும் ஒரு குறிப்பிட்ட கிரகம் இருக்கிறது, மூலமான கிரகம், கோலோக விருந்தாவனா என்று அழைக்கப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் பகவத்-கீதையில் இருக்கிறது, மேலும் நமக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது இந்த ஜட உலகை விட்டு நம்முடைய நித்தியமான வாழ்க்கையை நித்தியமான ராஜ்யத்தில் வாழ.