TA/Prabhupada 1071 - நாம் பகவானுடன் தோழமை கொண்டு, அவருடன் ஒத்துழைத்தால், பிறகு நாமும் ஆனந்தமடைவோம்

From Vanipedia


If We Associate with The Lord, Cooperate with Him, Then also We Become Happy - Prabhupāda 1071


660219-20 - Lecture BG Introduction - New York

நாம் பகவானுடன் தோழமை கொண்டு, அவருடன் ஒத்துழைத்தால், பிறகு நாமும் ஆனந்தமடைவோம் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, நாம் கிருஷ்ணரைப் பற்றி பேசும் பேசும் பொழுது, அது இனவழி பெயர் அல்ல. "கிருஷ்ணர்" என்ற பெயரின் பொருள் உயர்தரமான ஆனந்தம். முழுமுதற் கடவுள் அனைத்து ஆனந்தத்திற்கும், இருப்புக் கிடங்காய் விளங்குபவர் என்பது நிச்சயப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் எல்லோரும் சுகத்தைத் தேடி ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனந்த மயோப்யாஸாத் (வேதாந்த-சூத்ரா 1.1.12). உயிர்வாழிகள் அல்லது பகவான், நாம் எல்லோரும் நிறைந்த உணர்வுமிக்கவர்கள், ஆகையினால் நம் உணர்வுகள் சுகத்தை விரும்புகின்றன. ஆனந்தம். பகவானும் நிலையான ஆனந்தத்தில் இருக்கின்றார். மேலும் நாம் பகவானுடன் தோழமை கொண்டு, அவருடன் ஒத்துழைத்து, அவருடைய தோழமையில் பங்கு கொண்டால், பிறகு நாமும் ஆனந்தத்தை அடைவோம். ஆனந்தம் நிறைந்த தனது லீலைகளை விருந்தாவனத்தில் காட்டுவதற்காக பகவான் இந்த ஜட உலகில் தோன்றினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விருந்தாவனத்தில் இருந்த பொழுது, இடைச் சிறுவர்களான அவருடைய நண்பர்களுடனான செயல்கள், இளம் பெண்களான தோழியருடனும், தோழர்களுடனும் அவர்களுடைய் தோழியர்களுடனும், விருந்தாவனவாசிகளுடணும் அவர் குழந்தை பருவத்தில் பசுக்களை மேய்பதும், பகவான் கிருஷ்ணரின் இந்த லீலைகள் அனைத்தும் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. விருந்தாவனத்தில் அனைவரும், மொத்த ஜனத்தொகையும், கிருஷ்ணரை தொடர்ந்து சென்றனர். கிருஷ்ணரை தவிர வேறொன்றும் அறியாமல் இருந்தனர். பகவான் கிருஷ்ணர் தன் தந்தையை கூட கட்டுப்படுதினார், நந்த மகாராஜாவை தேவர்களான இந்திரனை வழிப்படுவதிலிருந்து, ஏனென்றால், மக்கள் முழுமுதற் கடவுளை தவிர வேறு எந்த தேவர்களையும் வழிபட வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் நிறுவ விரும்பினார். ஏனென்றால், வாழ்க்கையின் இறுதி லட்சியம் முழுமுதற் கடவுளின் பரம பதம் அடைவதாகும். பகவான் கிருஷ்ணரின் ஸ்தலத்தைப் பற்றி பகவத்-கீதையில் பதினைந்தாம் அத்தியாயத்தில் ஆறாவது பதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. நதத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (ப.கீ.15.6). இப்பொழுது அந்த நித்தியமான வானத்தின் விபரம், நாம் வானத்தைப் பற்றி பேசுகிறோம், ஏனென்றால் நமக்கு வானத்தைப் பற்றி ஜட உருவக கருத்து இருக்கின்றது. ஆகையினால் நாம் வானத்தை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று நினைக்கின்றோம். ஆனால் பகவான் கூறுகிறார் நித்திய வானத்திற்கு சூரியன் அவசியமில்லை என்று. நதத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: (ப.கீ.15.6). அதுவுமல்லாமல் நித்தியமான வானத்திற்கு சந்திரனும் தேவையில்லை. ந பாவக: என்றால் அதுமட்டுமல்லாது அங்கே ஒளியேற்ற மின்சாரமோ அல்லது நெருப்போ அவசியமில்லை ஏனென்றால் ஆன்மீக வானம் ஏற்கனவே ப்ரஹ்மஜோதியால் ஒளி ஏற்றப்பட்டிருக்கிறது. ப்ரஹ்மஜோதி, யஸ்ய ப்ரபா (பச. 5.40), பரம பதத்தின் ஒளிக்கதிர். இன்றைய காலத்தில் மனிதர்கள் பிற கிரகங்களை அடைய முயற்சிக்கும் பொழுது, முழுமுதற் கடவுளின் பரம பதத்தைப் பற்றி புரிந்து கொள்வது மிக கடினமானதல்ல. பகவானின் பரம பதம் ஆன்மீக வானத்தில் இருக்கிறது, அதற்கு கோலோக என்று பெயர். ப்ரஹ்மசம்ஹிதையில் இது மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது, கோலோக ஏவ நிவஸ்தி அகிலாத்ம-பூத: (பரச.5.37). பகவான் அவருடைய நித்தியமான ஸ்தலமான கோலோகாவில் வாழ்ந்த போதிலும், அவர் அகிலாத்ம பூத:, அவரை இங்கே இருந்தே அணுக இயலும். ஆகையினால் பகவான் தனது உண்மையான வடிவத்தை வெளிப்படுத்த வருகிறார், சச்சிதானந்த விக்ரஹத்தை (பச. 5.1), அதனால் நாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை. கற்பனை என்கிற கேள்விக்கே இடமில்லை.