TA/Prabhupada 0223 - இந்த இயக்கம் முழு மனித சமுதாயத்திற்கும் கல்வி கற்பிக்க இருக்க வேண்டும்

Revision as of 17:49, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0223 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Con...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Room Conversation with Ratan Singh Rajda M.P. "Nationalism and Cheating" -- April 15, 1977, Bombay

பிரபுபாதா: என்ன ஆட்சேபனை? திரு ராஜ்தா: எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. பிரபுபாதா: பகவத் கீதை ஏற்கப்படுகிறது, எனக்குத் தெரிந்தவரை, மொரார்ஜி கைது செய்யப்படும் போகும் போது, அவர் கூறினாராம் "என் பகவத் கீதை வாசிப்பை மட்டும் முடித்துவிடுகிறேன்” என்று.நான் செய்தித்தாளில் படித்திருக்கிறேன். திரு ராஜ்தா: ஆமாம், அவர் அப்படி தான் சொன்னார். பிரபுபாதா: எனவே அவர் ... அவர் பகவத் கீதையின் பக்தர், மேலும் பலரும் அப்படி இருக்கிறார்கள். பிறகு ஏன் இந்த போதனை உலகம் முழுவதற்கும் கொடுக்கப்படக் கூடாது? திரு ராஜ்தா: இப்போது, நான் பார்த்திருக்கிறேன், பொதுவாக அவர் காலை 3.30-க்கு மணிக்கு எழுந்துவிட்டு, முதலில் தன் அனைத்து நியம நிஷ்டைகளை முடித்து விடுவார், பகவத் கீதை வாசிப்பது, போன்றவை. அது ஒரு இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு நடக்கும். பின்னர், ஏழு மணிக்கு, அவர் தனது அறையிலிருந்து வெளியே வருவார், குளித்தபிறகு. பின்னர் அவர் சந்திகப்பார் (தெளிவில்லாதது). பிரபுபாதா: இந்த வெளிநாட்டுச் சிறுவர்கள், தங்கள் பகவத் கீதை பயிற்சியை 3.30 க்குத் தொடங்கி 9.30 வரை செல்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை கிடையாது. இங்குப் பாருங்கள். நீங்கள் எங்கள், இந்தக் கிரிராஜாவைப் பற்றிப் படித்திருப்பீர்கள். அவர் நாள் முழுதும் செய்கிறார். அவர்கள் அனைவரும் இதில் உள்ளனர். காலை, 3.30 முதல், அவர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் 9.30 வரை, பகவத் கீதை மட்டுமே. திரு. ராஜ்தா: அற்புதம். பிரபுபாதா: நமக்குப் பல விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. நாம் இந்த ரீதியில் விவாதித்துக் கொண்டிருந்தால், tatha dehāntara-prāptiḥ (BG 2.13), அதைப் புரிந்து கொள்ளப் பல நாட்கள் பிடிக்கும். திரு. ராஜ்தா: மிகச் சரி. பிரபுபாதா: இப்போது, இது உண்மையென்றால், tathā dehāntara-prāptiḥ and na hanyate hanyamāne śarīre (BG 2.20), இதற்கு நாம் என்ன செய்கிறோம்? இது தான் பகவத் கீதை. Na jāyate na mriyate vā kadācin na hanyate hanyamāne śarīre (BG 2.20). எனவே, என் உடல் அழிக்கப்படும்போது, நான் போகிறேன், ... (இடைவெளி) ... தனிப்பட்ட முறையில் நான் வாசலுக்கு வாசல் செல்கிறேன், புத்தகங்களை விற்று, பணம் அனுப்பி. கூடவே நம் குறிக்கோளையும் நிறைவேற்றிக் கொண்டே செல்கிறோம். எனக்கு அரசாங்கத்திடமிருந்தோ, மக்களிடமிருந்தோ, எந்த உதவியும் கிடைக்கவில்லை. மேலும் பாங்க் ஆப் அமெரிக்காவின் பதிவில் இருக்கிறது, எவ்வளவு அந்நிய செலாவணியை நான் கொண்டு வருகிறேன் என்று. உடல்நிலை சரியில்லாத இந்த நிலையிலும், இரவில் நான், குறைந்தது நான்கு மணி நேரமேனும் உழைக்கிறேன். மேலும் அவர்களும் எனக்கு உதவுகின்றனர். எனவே இது எங்கள் தனிப்பட்ட முயற்சியாகும். இங்கே ஏன் வரக் கூடாது? நீங்கள் உண்மையில் பகவத் கீதையின் தீவிர மாணவராக இருந்தால், நீங்கள் ஏன் வரக் கூடாது, ஒத்துழைக்கக் கூடாது? மேலும் harāv abhaktasya kuto mahad-guṇā manorathenāsati dhāvato... (SB 5.18.12). நீங்கள் வெறும் சட்டத்தால் பொது மக்களை நேர்மைபடுத்த முடியாது. அது சாத்தியம் அல்ல. மறந்துவிடுங்கள். அது சாத்தியம் அல்ல. Harāv abhaktasya kuto.... Yasyāsti bhaktir bhagavaty akiñcanā sarvaiḥ... நீங்கள், ஒருவர் இறைவனின் பக்தராகிவிட்டால், எல்லாக் குணங்களும் இருக்கும். மேலும், harāv abhaktasya kuto mahad... அவர் பக்தரில்லையென்றால் ... இப்போது பல விஷயங்கள், கண்டனங்கள் நடக்கின்றன, பெரிய, பெரிய தலைவர்கள். இன்றைய செய்தித் தாளில் பார்த்தேன். "இந்த மனிதர், அந்த மனிதன், கூட நிராகரிக்கப்படுகிறார்." ஏன்? Harāv abhaktasya kuto. அவர் பக்தராக இல்லை என்றால் ஒரு பெரிய தலைவராகி என்ன பயன்? (இந்தி) நீங்கள் மிகவும், அறிவார்ந்தவர்களாக, இளைஞர்களாக இருக்கின்றீர்கள், எனவே நான் உங்களுக்குச் சில யோசனைகளைக் கொடுக்க முயல்கிறன், மேலும் இந்த யோசனைகளுக்கு உங்களால் வடிவம் கொடுக்க முடியும் என்றால் ... அது ஏற்கனவே இருக்கிறது. அது ஒன்றும் இரகசியமில்லை. நாம் மட்டும் சற்று தீவிரமாக இருக்க வேண்டும், அதாவது இந்த இயக்கம் முழு மனித சமுதாயத்திற்கு கல்வி புகட்டுவதற்கென்று இருக்க வேண்டும். எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை. அது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் குறிக்கோள் இருக்க வேண்டும்.