TA/Prabhupada 0259 - கிருஷ்ணரின் பால் அன்பு செலுத்தும் ஆன்மீக தளத்திற்கு மீண்டும் அமர்த்தப்படுவோம்

Revision as of 10:26, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0259 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 27, 1968

இந்தக் கூட்டத்தில் யாராவது தான் யாருக்கும், எதற்கும் அடிமை இல்லை என்று சொல்ல முடியுமா? அவர் அப்படி இருந்தே ஆக வேண்டும், ஏனெனில் அவரின் நிர்மாண அமைப்பு அப்படி. ஆனால் இதில் என்ன கஷ்டம் என்றால் நம் புலன்களுக்குச் சேவை செய்வதன் மூலம், நம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்குத் தீர்வு கிடைக்காது. தற்போதைக்கு, நான் இந்த போதையை எடுத்துக்கொண்டேன் என்ற திருப்தி கிடைக்கலாம், மேலும் அந்த போதையின் பிடியில், "நான் யாருடைய அடிமையும் இல்லை. நான் சுதந்திரமானவன்" என்று நினைக்கலாம். ஆனால் அது செயற்கையானது. அந்த மாயத்தோற்றம் மறைந்தவுடன், அவன் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடுகிறான், மீண்டும் அடிமையாகிவிடுகிறான். மீண்டும் அடிமை. ஆகவே இது தான் நம் நிலை. ஆனால் ஏன் இந்தப் போராட்டம்? நான் சேவை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறேன், ஆனால் நான் சேவை செய்ய விரும்பவில்லை. இதை எப்படி ஈடு செய்வது? கிருஷ்ண பக்தி மூலம் தான் ஈடு செய்ய முடியும், அதாவது நீங்கள் கிருஷ்ணரின் சேவகன் ஆகிவிட்டால், பின்னர் தலைவனாகும் உங்கள் ஆசையும், அதே நேரத்தில் சுதந்திர வேட்கையும் உடனடியாக நிறைவேறிவிடுகிறது. இங்கு நீங்கள் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணரின் ஒரு படத்தைப் பார்க்கிறீர்களே, அது போலவே. கிருஷ்ணர் உயரிய தெய்வம் ஆவார். அர்ஜுனன் உயிருள்ள ஒருவன், வாழும் உயிரினம், ஒரு மனிதன், ஆனால் கிருஷ்ணரிடம் நண்பன் என்ற முறையில் அன்பு கொண்டுள்ளான். அவனது நட்பெனும் அன்பிற்கு மாறாக, கிருஷ்ணர் அவனது சாரதியாக, அவனுடைய வேலைக்காரனாக மாறிவிட்டார். இதேபோல், நாம் ஒவ்வொருவரும், கிருஷ்ணரின் பால் அன்பு செலுத்தும் ஆழ்நிலை மேடையில் மீண்டும் நிலைகொண்டால், பின்னர் தலைவனாகும் நம் அவா நிறைவேறிவிடும். அது தற்போது தெரிவதில்லை, ஆனால் நாம் கிருஷ்ணருக்குச் சேவை செய்ய ஒப்புக்கொண்டால், பின்னர் படிப்படியாகக் கிருஷ்ணர் உங்களுக்கே சேவை புரிவதை நாம் பார்க்கலாம். நாம் அதை உணர்வோமா என்பது தான் கேள்வி. ஆனால் நாம் இந்த பொருள் உலகச் சேவையிலிருந்து, புலன்களின் சேவையிலிருந்து, வெளி வர வேண்டும் என்றால், நம் சேவை மனப்பான்மையைக் கிருஷ்ணரின் பால் மாற்ற வேண்டும். இது தான் கிருஷ்ண பக்தி உணர்வு என்று அழைக்கப்படுகிறது. kāmādīnāṁ kati na katidhā pālitā durnideśās teṣāṁ mayi na karuṇā jātā na trapā nopaśāntiḥ sāmpratam aham labdha-buddhis tvām āyātaḥ niyuṅkṣvātma-dāsye. ஒரு பக்தர் கிருஷ்ணரிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்து கொள்கிறார், "இவ்வளவு நாட்கள், என் வாழ்வில், நான் என்னுடைய புலங்களுக்குச் சேவை செய்துவிட்டேன்" Kāmādīnām. Kāma என்றால் புலங்கள், காமம் என்று அர்த்தம். "எனவே நான் எதைச் செய்திருக்க கூடாதோ, அதையும், காமத்தின் தூண்டுதலால் செய்துவிட்டேன்". ஒருவன் செய்தாக வேண்டும். ஒருவன் அடிமையாகவோ, சேவகனாகவோ இருக்கும் போது, தான் செய்ய விரும்பாததையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் கட்டாயத்தில் இருக்கிறான். எனவே இங்கே, ஒரு பக்தர் ஒப்புக்கொள்கிறார் " நான் செய்துவிட்டேன், என் காமத்தின் தூண்டுதலால், நான் செய்யக் கூடாததைச் செய்துவிட்டேன்". சரி, நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்கள் புலன்களுக்குச் சேவை புரிகிறீர்கள். அது பரவாயில்லை. "ஆனால் அதில் கஷ்டம் என்னவென்றால், teṣāṁ karuṇā na jātā na trapā nopaśāntiḥ. நான் இவ்வளவு சேவை செய்தபிறகும், அவற்றுக்கும் திருப்தி ஏற்படவில்லை என்று நான் காண்கிறேன். அவற்றுக்குத் திருப்தி இல்லை. அது தான் என் கஷ்டம். புலன்களுக்கும் திருப்தி இல்லை, எனக்கும் திருப்தி இல்லை, புலன்களுக்கு என்னை விடுவிக்கும் அளவிற்கு, என் சேவைக்கு ஓய்வூதியம் வழங்கும் அளவிற்குக் கருணையும் இல்லை. அது தான் என் நிலை". நாம் இவ்வாறு அதைக் கண்டிருந்தால், இல்லை நாம் அதை உணர்ந்திருந்தால், “நான் பல ஆண்டுகள் என் புலன்களுக்குச் சேவை செய்துவிட்டேன், இப்போது என் புலங்கள் திருப்தி அடைந்துவிட்டன...” இல்லை, அவை திருப்தி அடையவில்லை. இன்னும் தூண்டுகின்றன. இன்னும் தூண்டுகின்றன. " நான் மிகவும்..” அது இயற்கை தான், ஆனால் நான் ஒன்றை வெளியிட்டுக் கூறலாமெனில் சொல்கிறேன், இங்கே, என் மாணவர்கள் சிலர், அவரது தாயார் வயதான காலத்தில், திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறினர். சற்று பாருங்கள். அவருக்கு வயது வந்த குழந்தைகள் இருக்கின்றனர். தம் பாட்டியும் கூடத் திருமணம் செய்து கொண்டதாக மேலும் யாரோ முறையிட்டார். ஏன்? எழுபத்து ஐந்து வயதில், ஐம்பது வயதில், உணர்வுகள் இன்னும் வலுவாக உள்ளன, இவ்வாறு அவர் தூண்டப்படும் வகையில் “ஆம், நீ அதைச் செய்தே ஆக வேண்டும்” என்று.