TA/Prabhupada 1076 - மரண நேரத்தில் நாம் இங்கேயே தொடர்ந்து இருக்கவோ, அல்லது ஆன்மீக உலகிற்கோ மாற்றப்படலாம்



660219-20 - Lecture BG Introduction - New York

அங்கே வேறுபட்ட பாவஸ் உள்ளன. இந்த பௌதிக இயற்கையும் ஒருவித பாவஸ், நாம் ஏற்கனவே விவரித்தது போல், அந்த பௌதிக இயற்கையும் முழுமுதற் கடவுளின் சக்திகளில் ஒன்றின் காட்சியாகும். விஷ்ணு புராணாவில் முழுமுதற் கடவுளின் முழுமையான சக்தியும் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. விஷ்ணு-ஸக்தி: பரா ப்ரொக்தா கெஸ்தர-ஞாக்யா ததா பரவித்யா-கர்ம-சம்ஞான்யா த்ரிதீயா ஸக்திர் ஐஸ்யதெ (சை.ச.மத்திய 6.154).

அனைத்து சக்தியும், அதன் ஆற்றலும், பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸ்ரூயதெ (சை.ச.மத்திய 13.65,பொருளுரை). முழுமுதற் கடவுளிடம் பலதரப்பட்ட சக்திகளும், நம் கவனத்திற்கும் மிகைப்பட்ட எண்ணற்ற சக்திகளும் உள்ளன. ஆனால் சிறந்த அறிவுடைய முனிவர்கள், முக்தி பெற்ற ஆத்மாக்கள், அவர்கள் கற்றரிந்தார்கள் மற்றும் அவர்கள் அனைத்து சக்திகளையும் தொகுத்து மூன்று முக்கிய பிரிவாக மூன்று தலைப்பில் பிரித்துள்ளனர். முதலாவது, அனைத்து சக்திகளும் விஷ்ணு சக்தியாகும். அனைத்து சக்திகளும், பகவான் விஷ்ணுவின் பலதரப்பட்ட ஆற்றல் உடைய சக்திகளாகும். அந்த சக்தி பரா, தெய்விகமானது. மற்றும் கெஸ்தர-ஞாக்யா ததா பரா, மேலும் உயிர்வாழிகள், கெஸ்தர-ஞான, அவர்களும் அந்த மேலான சக்தியுடைய குழுவைச் சேர்ந்தவர்கள், அது பகவத்-கீதையிலும் உறுதிப் படுத்தப்பட்டது போல். நாம் ஏற்கனவே விவரித்துவிட்டோம். மேலும் மற்ற சக்திகள், பௌதிக சக்தி அது த்ரிதீயா கர்ம-சம்ஞான்யா (சை.ச.மத்திய 6.154).— மற்றொரு சக்தி அறியாமை என்னும் குணத்தில் உள்ளது. ஆகையால் அதுதான் பௌதிக சக்தி. ஆகையால் பௌதிக சக்தியும் பகவத்-(தெளிவற்ற). ஆகையால் மரணம் அடையும் நேரத்தில், நாம் பௌதிக சக்தியில் இருக்கவோ, அல்லது இந்த ஜட உலகில், அல்லது நாம் ஆன்மீக உலகிற்கு மாற்றப்படலாம். அதுதான் அடிப்படை தத்துவம். ஆகையால் பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது, யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் தம் தமேவைதி கெளந்தேய ஸதா தத்பாவ பாவித: (ப.கீ. 8.6).

இப்பொழுது, நாம் சிந்திப்பதில் பழக்கப்பட்டுள்ளதால், இந்த பௌதிக சக்தியோ, அல்லது ஆன்மீக சக்தியோ, இந்த சிந்தனையை எவ்வாறு இடமாற்றுவது? பௌதிக சக்தியின் சிந்தனையை, எவ்வாறு ஆன்மீக சக்தியின் சிந்தனையாக இடமாற்றம் செய்வது? ஆன்மீக சக்தியில் சிந்திக்க வேத இலக்கியங்கள் உள்ளன. எவ்வாறு என்றால் பௌதிக சக்தியில் சிந்திக்க அங்கே அதிகமான இலக்கியங்கள் உள்ளன- செய்தித்தாள்கள், வார இதழ்கள், நாவல்கள், கற்பனை கதைகள், இன்னும் பற்பல பொருள்கள். இலக்கியங்கள் நிறைந்துள்ளன. ஆகையால் நம் சிந்தனை இந்த இலக்கியங்களில் மூழ்கியுள்ளது. அதேபோல், நம் சிந்தனையை ஆன்மீக சூழ்நிலைக்கு மாற்ற வேண்டுமென்றால், நாம் வாசிக்கும் திறனை வேத இலக்கியத்திற்கு மாற்ற வேண்டும். ஆகையினால் கற்றறிந்த முனிவர்கள் பல விதமான வேத இலக்கியங்களை உருவாக்கினார்கள், புராணாஸ். புராணாஸ் என்பது கதைகள் அல்ல. அவை சரித்திர சான்றுகள். சைதன்ய சரிதாமிர்தாவில் ஒரு செய்யுள் பின்வருமாறு வாசிக்கிறது. அனாதி-பஹிர்முக ஜீவ கிருஷ்ண புலியகெல அதேவ கிருஷ்ண வேத-புராண கைலா (சை.ச.மத்திய 20.117). அதாவது இந்த மறதியுடைய உயிர்வாழிகள், கட்டுண்ட ஆத்மாக்கள், அவர்கள் முழுமுதற் கடவுளுடனான உறவை மறந்துவிட்டார்கள், மேலும் அவர்கள் பௌதிக செயல்களைப் பற்றி சிந்திக்கும் முழு கவனத்தில் மூழ்கியுள்ளார்கள். அவர்களுடைய சிந்திக்கும் சக்தியை வெறுமனே ஆன்மீக திறமைக்கு மாற்றிவிட, கிருஷ்ண-துவைபாயன வியாச, அவர் பல வேத இலக்கியங்களை எழுதியுள்ளார். வேத இலக்கியங்கள் என்றால், முதலில் அவர் வேதத்தை நான்காகப் பிரித்தார். பிறகு அவர் அதை புராணாஸ் மூலம் விவரித்தார். பிறகு திறமையற்றவர்களுக்காக, எவ்வாறு என்றால், ஸ்திரி, சூத்ராஸ், வைஷ்ய, அவர் மஹாபாரதத்தை எழுதினார். மேலும் அந்த மஹாபாரதத்தில் அவர் பகவத்-கீதையை அறிமுகப்படுத்தினார். பிறகு மறுபடியும் வேதாந்த-சூதிராவில் அனைத்து வெத இலக்கியங்களையும் சுருக்கி எழுதினர். வேதாந்த-சூத்ர பிற்கால வழிகாட்டியாக, அவர் தானே இயல்பாக வர்ணனைகளை செய்தார், அதை ஸ்ரீமத்-பாகவதம் என்று கூறுகிறோம்.