TA/Prabhupada 1077 - பகவான் பூரணமானவர் ஆனதால், அவருடைய பெயருக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை



660219-20 - Lecture BG Introduction - New York

ஸ்ரீமத் பாகவதம், பாஸ்யோயம் பிரம்ம-சூத்ரானாம் என்று கூறப்படுகிறது. இது வேதாந்த-சூத்ராவின் இயல்பான கருத்துரை. ஆகையால் இந்த அனைத்து இலக்கியங்களுக்கும், நாம் நம் சிந்தனையை இடமாற்றம் செய்தால், தத்-பாவ-பாவித்:, சதா. ஸதா தத்பாவ-பாவித: (ப.கீ 8.6). ஒருவர் எப்பொழுதும் கட்டுண்ட, எவ்வாறு என்றால் ஜடச் செயல்களில் ஈடுபட்டவர் எப்பொழுதும் சில பௌதிக இலக்கியங்களை படிப்பதில் ஈடுபட்டிருப்பார், செய்தித்தாள்கள், வார இதழ்கள், கற்பனைக் கதைகள், நாவல்கள், இன்னும் பற்பல, மேலும் பல விஞ்ஞானமும் அல்லது தத்துவங்களும், இவை அனைத்தும் பலதரப்பட்ட அளவிலான கருத்துடையவை. அதேபோல், அந்த படிக்கும் திறனை, நாம் இந்த வேத இலக்கியங்களை படிப்பதில் மாற்றினால், அன்புடன் வியாசதேவால் படைக்கப்பட்டதை, பிறகு மரண நேரத்தில் முழுமுதற் கடவுளை நம் நினைவில் நிறுத்துவது சாத்தியமாகும். இதுவே பகவானால் அறிவுறுத்தப்பட்ட ஒரே வழி. அறிவுறுத்தல் அல்ல, அதுதான் உண்மையாகும். நாஸ்த்யத்ர ஸம்சய: (ப.கீ 8.5). அதில் சந்தேகமே இல்லை. தாஸ்மாத் ஆகையினால் பகவான் கருத்துரைத்தார், தாஸ்மாத்ஸர்வேஷூ காலேஷூ மாமனுஸ்மர யுத்ய ச (ப.கீ 8.7). பகவான் அர்ஜுனருக்கு அறிவுரை கூறினார் அதாவது மாமனுஸ்மர யுத்ய ச. "நீங்கள் சும்மா என்னையே நினைத்துக் கொண்டிருந்து உங்களுடைய இன்றைய தொழில் கடமைகளை கைவிடுங்கள்". என்று அவர் கூறவில்லை. இல்லை. அது அறிவுறுத்தப்படவில்லை. பகவான் சாத்தியமற்ற எதையும் அறிவுறுத்தமாட்டார். இந்த ஜட உலகில், இந்த உடலை பராமரிக்க, ஒருவர் வேலை செய்தாக வேண்டும். சமூக வரிசைப்படி தொழில்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பிராமணர், ஷ்த்ரியர், வைஸ்ய, சூத்ரா. அறிவுடைய வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினர், அவர்கள் வேறு விதமாக தொழில் செய்கிறார்கள், மேலும் நிர்வாகம் செய்யும் வகுப்பைச் சேர்ந்த சமூகம், அவர்களும் வேறு விதமாக தொழில் செய்கிறார்கள், வியாபாரம் செய்யும் சமூகம், உற்பத்தி செய்யும் சமூகம், அவர்களும் வேறு விதமாக தொழில் செய்கிறார்கள், மேலும் வேலையாட்கள் சமூகம், அவர்களும் வேறு விதமாக தொழில் செய்கிறார்கள். மனித சமூகத்தில், வேலையாலோ, வியாபாரியோ அல்லது அரசியல்வாதிகள், நிர்வாகிகள், அல்லது மிக உயர்ந்த அறிவாளிகள் நிறைந்த வகுப்பை சேர்ந்த கற்றறிந்த தொழில்துறை, விஞ்ஞானிகள், அனைவரும் சில வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள், போராட்டம் இல்லாமல் வாழ்வதற்கு ஒருவர் வேலை செய்ய வேண்டும். ஆகையால் பகவான் அறிவுரை கூறுகிறார். அதாவது "நீங்கள் உங்கள் தொழிலை கைவிட வேண்டாம், ஆனால் அதே நேரத்தில் நீங்கள் நினைவு கொள்ளலாம்." மாமனுஸ்மர (ப.கீ 8.7). அது உங்களுக்கு, மரண நேரத்தில் என்னை நினைவுகொள்ள உதவுகிறது. "என்னை தினமும் நினைவுகொள்ள நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால், வாழ்வதற்கான உங்கள் போராட்டத்துடன், பிறகு அது சத்தியமாகாது." அது சத்தியமாகாது. இதே கருத்து பகவான் சைதன்யாவால் அறிவுறுத்தப்பட்டது, கீர்த்தனீய: சதா ஹரி: (சை.ச.ஆதி17.31). கீர்த்தனீய: சதா. ஒருவர் பகவானின் நாமத்தை எப்பொழுதும் ஜபிக்க பழகிக்கொள்ள வேண்டும். பகவானின் நாமமும், பகவானும் வெவ்வேறு அல்ல. ஆகையால் இங்கே அர்ஜுனருக்கான கிருஷ்ணரின் அறிவுரை அதாவது மாமனுஸ்மர (ப.கீ 8.7), "நீங்கள் என்னை சும்மா நினைவில் கொள்ளுங்கள்," மேலும் பகவான் சைதன்யாவின் அறிவுரை "நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபியுங்கள்." இங்கே கிருஷ்ணர் கூறுகிறார் "நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் கொள்ளுங்கள்," அல்லது நீங்கள் கிருஷ்ணரை நினையுங்கள், மேலும் பகவான் சைதன்யா கூறுகிறார் "நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை ஜெபியுங்கள்." ஆகையால் அங்கே வேற்றுமையில்லை, ஏனென்றால் கிருஷ்ணரும் அவருடைய திருநாமமும் பூரணத்துவத்தில் வேற்றுமையற்றவர்கள். பூரணத்துவ நிலையில் இருவருக்கும் இடையில் வேற்றுமையில்லை. அதுதான் பூரணத்துவ நிலை. பகவான் பூரணமானவராதலால், அவருக்கும் அவருடைய திருநாமத்திற்கும் வித்தியாசமில்லை. ஆகையால் நாம் அவ்வாறு பயிற்சி பெற வேண்டும். தாஸ்மாத் ஸர்வேஷூ காலேஷூ (ப.கீ 8.7). எப்பொழுதும், இருபத்தி-நான்கு மணி நேரமும், நம் வாழ்க்கையின் செயல்களை சரியாக அமைக்க வேண்டும் எவ்வாறு என்றால் இருபத்தி-நான்கு மணி நேரமும் அந்த நாமத்தை நாம் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அது எப்படி சாத்தியமாகும்? ஆம், அது சாத்தியமே. அது சாத்தியமே. இது சம்மந்தமாக ஆச்சாரியர்களால் ஒரு பண்படாத உதாரணம் நிர்ணயிக்கப்பட்டது. அது என்ன உதாரணம்? ஒரு ஆடவனுடன் இணைத்துப் பேசப்படும் ஒரு பெண், அவளுக்கு கணவன் இருந்தும், அவள் மற்றொரு ஆடவனுடன், இணைத்துப் பேசப்படுகிறாள். இத்தகைய இணைப்பு மிகவும் நெருக்கமாகிறது. இது பரகீய-ரஸா என்று அழைக்கப்படுகிறது. யாதேணுமொன்று ஆணோ அல்லது பெண்ணோ. மனைவியை தவிர மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு ஆடவனும், அல்லது கணவனை தவிர மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு பெண், அந்த தொடர்பு மிகவும் வலிமையானது. அந்த தொடர்பு மிகவும் வலிமையானது. ஆகையால் ஆச்சாரியர்கள் இந்த உதாரணம் கொடுத்தார்கள், தவறான குணமுடைய பெண் என்று மற்றவர்கள் கணவனுடன் நெருக்கம் உடையவர் என்று, அதே நேரத்தில், அவள் எப்பொழுதும் நினைப்பாள், தன் கணவனிடம் தான் எப்பொழுதும் குடும்ப காரியங்களில் மிகவும் மும்முரமாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்ள அப்பொழுதுதான் அவள் கணவன் அவள் நடத்தையில் சந்தேகம் கொள்ளமாட்டார். ஆகையால் அவள் தன் காதலரை இரவில் சந்திக்கும் நேரத்தை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், இந்த வீட்டு வேலைகள் அனைத்தையும் அழகாக செய்வதற்கு பதிலாக, அதேபோல், ஒருவர் நித்தியமான புருஷர், ஸ்ரீ கிருஷ்ணரை நினைவில் கொள்ள வேண்டும், எப்பொழுதும் இந்த பௌதிக வேலைகளை அழகாக செய்வதற்கு பதிலாக. அது சாத்தியமாகும். இதற்கு ஆழமான அன்பான உணர்வு வேண்டும்.